நீல மேகங்கள்
நின்று பார்க்கும்
நீ என்னை
தொடும் போது
நீண்ட மேகங்கள்
கொட்டி தீர்க்கும்
நீ என்னை பிரிந்து
வாடும் போது..... 671
இதுவரை
நிறைவேறிய ஆசை
ஒன்றே ஒன்று தான்
உன்னோடு கை கோர்த்து
அந் நிலவை ரசித்தது... 672
என் கன்னங்களில்
இன்னும்
மிச்சம் இருக்கிறது
உன் கண்கள்
தந்த முத்தங்கள்.... 673
ஆள் உயர
கண்ணாடியில்
அழகு பார்த்தேன்
என் இதழை மட்டும்
இனியவனே!
அது உனக்கு பிடித்த
இடம் தானே அதனால்!... 674
காதல் அருவிகள்
கொட்டும்
உன் முந்தானையில்
நான் மோதும் போது... 675
உன் காலடி
தேடியே ஓடுகிறது
என் காதல் நதி!
காலங்களை மறந்து... 676
கதிர் உதிரும்
காலத்தில்
குருவி கொத்தும்
கதிரைப் போல
காலங் கடந்தும்
இக் குருவி
சேகரிக்கிறது
இக் காதல் கதிரை!! 677
குளிர் உடை
போதுமா?
இக்காதல் குளிரை
சமாளிக்க!
உன் மெல்லிடை கொடு
நானும் கொஞ்சம்
குளிர் காய்ந்து கொள்ள... 678
என்
அத்தனை இரவுகளுக்கும்
வெளிச்சம் நீ!! 679
உணர்வற்று
உறங்கி கிடக்க வேண்டும்
காலை விடிந்த பிறகும்
உணர்ச்சி மிகுந்த
உன் இரவு முத்தத்தால்... 680
No comments:
Post a Comment