April 5, 2015

2015 கவிதைகள் 541 to 550

முகம் தொடைக்க
முந்தானை கொடுத்தவள்
இப்போது
முகம் கொடுக்கிறாள்
முடிவில்
முகத்தை முந்தானையால்
மூடிக் கொள்கிறாள்..        541

மூடி வைத்த
புத்தகத்தின் மேல்
உன் முத்தத்தின்
நிழல் ஆடுகிறது
மீண்டும்
திறந்து படித்தால்
நிர்வாணமாக
உன் உடல் தெரிகிறது
எப்படி பெண்ணே!
நானும் மூடிக் கொள்ள
இந்த
காதல் புத்தகத்தை...       542

உன் மெல்லிடை
சேரும் வரை
நானும் பத்திரப் படுத்துகிறேன்
என் இதழை
உன் பற்களிடமிருந்து...   543

விடியும் வரை
விழித்திருப்பேன்
இது உன் கவிதை
விடியும் வரை
விழிக்க வைத்திருப்பேன்
இது என் கவிதை...          544

உன்னையே
விழுங்கிக் கொள்ள
என் இதழுக்கும் ஆசை
இருந்தும்
உன் இதழில்
இருந்தே இன்னும்
நகலவில்லை
இந்த இரவில்...             545

என் உள்ளங்கை
பற்றிக் கொண்டு
நீ அழுகும்
இக் கோவிலில்
தெய்வமாக
காதல் மட்டுமே
இருக்கிறது என் அன்பே!  546

தோன்றும் இக்கற்பனைகளில்
தோன்றிய உன் காதலால்
தோன்றும் இக் கண்ணீரை
தோன்றிய உன் உருவம்
மட்டுமே கலைக்கிறது..  547

வீட்டில்
உன் காதலின்
எவ்வித அடையாளமின்றி
என்னை நான்
அழகு படுத்திக் கொள்கிறேன்
அதிகமாய் தனியாய்
சிரித்துக் கொள்கிறேன்..  548

அலுவலக சிந்தனையில்
நகர்கையில்
கையில் இருக்கும்
அலைபேசியாக
உன் முகம் தெரியும்
இவ் மதிய வேளையில்
உன் குரல் கேட்கவில்லையென்றால்
மாலை வரை
அதே சிந்தனையில்
மூழ்கி
இப்போது
துடித்து இறந்து கிடப்பேன்
ஏதேனும்
ஒரு அலுவலக வேளையில்.. 549

கனவுகளை கண்டு
கண் விழிக்கிறேன்
கனவாக
உன்னை கண்டு கழிக்கிறேன்
இக் காதல் காலத்தை...       550

No comments:

Post a Comment