April 13, 2015

தூக்கம்

இழந்த என் தூக்கத்தை
நினைத்து
துக்கப் பட்டு
கொண்டு இருக்கிறேன்

தூக்கம் கலந்த
கண்களோடு
துயரம் நிறைந்த
நெஞ்சோடு

நீ இன்றி கருகும்
இவ்விரவை
தூக்கி எரிந்து விட
இன்னும் ஓர் கை
வேண்டும் என்றெண்ணி
நிம்மதியின்றி
வான் நிறைந்த நிலாவை
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்...

எனது பார்வையில்
வளரும் வானம்
இன்னும் இன்னும்
பெரிதாகி கொண்டே
இருக்கிறது
என்னுள் ஆழ்ந்த
துயரம் போல...

No comments:

Post a Comment