"பெண் அல்ல நீ
பொன்(னம்மாள்)"
பொன்(னம்மாள்)"
நீண்ட இரவுகளுக்கு பிறகு நேற்று அக்கா கனவில் வந்தாள். சட்டென்று எத்தனை வேகமான ஒரு நடை. புகைப்படத்தில் இருக்கும் அதே தாவணி. தண்ணீர் குடம் வைக்கும் இடத்தில் இருந்து அதே கோபமான ஒரு பார்வை. இன்னும் உனக்கு என் மீதான கோபம் குறையவில்லை என்றே தோன்றியது. எத்தனை நாட்கள் ஆகிவிட்டது நீ என்னோடு பேசி. ஒரு முறையாவது பேசேன் என்ற கெஞ்ச வேண்டும் போல தோன்றியது. இத்தனை கோபத்திலும் என்னை வந்து பார்ப்பது ஒரு விதத்தில் சந்தோஷம் தான். ஆனாலும் மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி. உன்னை ஏதும் காயப்படுத்தி விட்டனோ என்று.
07-08-1999 சனிக்கிழமை உச்சி வெயிலில் நான் ஏதோ விளையாடிக் கொண்டு இருந்தேன். அவள் என்னைப் பார்த்தவாறு மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு இருந்தாள். யார் சொன்னார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. நான் ஓடிப்போய் என் அம்மாவை கூப்பிட போனேன். நான் எத்தகைய விவரம் அற்றவன் இன்னும் சொல்லப்போனால் பைத்தியக்காரன் என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அப்பொழுது என் அம்மா வெள்ளைதாய் என்ற தன் சிநேகிதி வீட்டில் பேசிக் கொண்டு இருந்தாள். நானும் போனேன் அக்காவை பற்றிய நிலமையை சொல்லத் தெரியவில்லை. அவர்கள் டீ குடித்து கொண்டு இருக்க என்னிடமும் டீ டம்ளரை கொடுத்தார்கள். டீயை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் அப்பா தடாலென்று சைக்கிளை நிறுத்திவிட்டு ஏத்தா பேச்சி உசுறு நின்னுபோச்சு சீக்கிரம் வா என்று கண்கள் கலங்கியபடி ஒடிவந்து சொன்னார். என் தாயும் ஓடிப்போய் அவள் கைகளை பிடித்து நாடி எல்லாம் பிடித்து பார்த்தார்கள். உயிர் இல்லை என்று தெரிந்ததும் ஒரே அலறல் சத்தம் வீட்டில். நானும் என் அக்காவும்(முத்து)குடோனில் ஒரு ஓரமாக அமர்ந்து அழுது கொண்டு இருந்தோம்.
"நம் வீட்டின் முதல்
கரு நீ
கருவின் உருவம் அனைத்தும்
செந்தீக்கு இரையாகிவிட்டது"
கரு நீ
கருவின் உருவம் அனைத்தும்
செந்தீக்கு இரையாகிவிட்டது"
இது நான் என்றோ உன்னைப் பற்றி எழுதி வைத்தது.
உண்மையில் நீ எனக்கு ஒரு தெய்வம். என்னால் முடிந்தவரை உன் நினைவுகளை நிச்சயம் அசை போட்டுக் கொண்டே இருப்பேன்.
No comments:
Post a Comment