தங்கம் மின்னும்
தாலிக் கொடியில்
என்னைக் கட்டி
தொங்க விடுகிறாய்
உன் மார்புக் குழியில்.. 581
எத்தனை முறை தான்
உயிர் பிச்சை
கொடுப்பாய்
உன் மார்பு குழியில்
என்னை தள்ளி தள்ளி.. 582
என்னை
உன்னிலிருந்து
மீட்டெடுத்து
உன் மார்புக்குள்
என்னையே புதைக்கிறாய்.. 583
உடைகள் கலைத்து
உறவைக் கொடுத்து
இன்னும் ஒர்
புதியதோர் உலகம்
கொடுக்கிறது உன் காதல்!! 584
அறிந்த முத்தம்
அறியாமல் நித்தம்
நீ அறிந்தே பெறுகிறது
என் காதல்!!! 585
அடைமழை தரும் சுகம்
உன் முத்தம்
கோடை வெயில் தரும் சுகம்
உன் வேர்வை.... 586
நான் தேடும்
போதி மரம்
உன் காதல்
கிளைகளாக
உன் முத்தம்
கிளையின் ஓசைகளாக
உன் கொலுசின் ஒலி
நிழலாக
உன் கை விரல்
வேரின் நுனியில்
நான் மெல்ல
அமர்ந்து முத்தம்
இடுவது உன்
கால் விரல்கள்... 587
அன்பென்னும்
ஆதித் தாய்
தன் முலையை
திறந்து கொடுக்கிறாள்
தன்னுள் சுரந்த
காதல் பாலை
இந்த சிறு குழந்தைக்கு... 588
காதலின்
நெருப்பை மூட்டி
காமத்தை எரிக்கிறேன்
காலை வரை
உன் காலடியில்
தவழ்ந்து கிடக்கிறேன்
சிறு குழந்தையாகவே!! 589
எதிர் பார்த்து எதிர் பார்த்து
நிற்கிறேன் உன்னைக் கான
என் வீட்டின் வாசற்படியில்
மெல்ல மெல்ல
நீ ஏறி வருகிறாய்
என் காலின் வழியே
என் நெஞ்சுக்குள்
யாருக்கும் தெரியாமல்
என் கண்களின் வழியே
நீயே சிரிக்கிறாய்!! 590
No comments:
Post a Comment