கல்லறையில்
சருகி சருகி
விழும் இவ்வுடலை
தேடல் கலந்து
தோளை வருடி வருடி
இரவில்
தொட்டுக் கொள்ள
இடம் தேடி
இன்னும் முடியாமல்
இருக்கிறது இருவரின் காமம்
காலை புதைத்த
புது பிணம் மெல்ல மெல்ல
தன்னுடலை அசைந்து
தன் தலையை
தூக்கி
பார்த்து கொண்டு
இருக்கிறது
சின்ன மஞ்சள் ஒளியில்
இருவரின்
உடைகள் அற்ற
உடலின் நடனத்தை
உலகத்தில் தான்
இல்லாததை மறந்து....
-SunMuga-
12-04-2015 11.18 PM
No comments:
Post a Comment