April 5, 2015

2015 கவிதைகள் 551 to 560

உன்னோடு
இருக்கும் போது
என்னால் இயல்பாய்
இருக்க முடிவதில்லை
என் இதழால்
உன் இதழை
மூடாமல் இருக்கவும்
முடிவதில்லை...          551

வாசலின் திசைகள்
மாறிய போதும்
உன் காதல்
முத்தத்தின் இசைகள்
இன்னும் மாறவில்லை
நம் வீட்டில்....                 552

இரவும் காத்திருக்கிறது
கண்களை மூடி
நாம் இருவரும்
இன்னும் ஓர்
இரவுக்கு செல்ல ....       553

நம்
சில மெளனங்கள்
உடைகிறது முத்தங்களாக..  554

உன்னோடு
அள்ளிக் குளித்த
நீரெல்லாம்
இன்று கண்ணீராய்
என் காலின் வழியே
வெளியேறுகிறது...           555

எதிர்வரும்
துயர் மிகுந்த
காலங்களை
நானும் கடக்கிறேன்
தூய்மையான
உன் கண்களின்
ஒளியை
என் கண்களில்
நான் சுமந்து...                  556

காதல்
நீரின் சலசலப்பு
உன் காலின்
கொலுசு ஒலி..                   557

வார்த்தைகள்
இல்லாத இவ்விரவில்
கண்ணீரே வடிகிறது
உன்னை நினைத்து
கண்ணீராக
வார்த்தையே உதிர்கிறது..  558

என்னை
இரவில் மலர்ச்
செய்யும்
இரவு சூரியன் நீ...             559

அந்தி அதிரும்
முத்தம் உதிரும்
உன் கண்கள் மிளிரும்
இவை தானே
உந்தன் சிறப்பு...              560

No comments:

Post a Comment