April 27, 2015

கடைசி அழுகை

மெளனத்தின்
எல்லையை கடந்து
என்னிலிருக்கும்
அழுகை மொத்தத்தையும்
மொத்தமாக
உன் பாதத்தில்
இறக்கி விட வேண்டும்

என் இறப்பை
எதிர் நோக்கி
காத்திருக்கும் விழியின் வழி

விழி மூடும் போது
மெளனமே
என் உடலோடு
என் உள்ளத்தை நிரப்ப
வேண்டும்

நெருங்கும் நெருப்பின்
நிறம் கூட
மெளனத்தில் வடியும்
கண்ணீரின் நிறமாய்
நிறைய வேண்டும்...

எரிந்த
என் உடல்
சாம்பல் நிறமாக மாறி
நெருப்பின் உக்கிரம்
கலந்து காற்றினிலே கூட
கண்ணீராய் கரைந்து
உருகி விட வேண்டும்....

-SunMuga-
27-04-2015 21.32 PM

வழக்கம்

வழக்கமாய்
உன்னை நான்
நினைப்பதை போல தான்

இப்போதும் நினைத்துக்
கொண்டு இருந்தேன்

வழக்கத்தை மீறி
வழியும் கண்ணீரை
கண்களில் வழிய விட்டபடி...

April 26, 2015

தேடல்

உன்
வீட்டை தேடிய
என் கண்கள்
என் கால்கள்

இப்போது
என்னையே தேடுகிறது
என் எண்ணத்தில்
உன்னையே தேடுகிறது

உன் வீட்டு தெருவில்
உன் மெல்லிய கால்கள்
பதிந்த இடமெல்லாம்
என் இதயத்தின்
வாசம் காட்டி
என் நெஞ்சத்தின்
நேசம் கூட்டி
ஒரு காதல் பூ
பூக்க வைக்க காத்திருக்கிறேன்...

April 23, 2015

தடயம்

என்னிலிருந்த
என்னை
என் எழுத்தால்
அழித்து

என்
காகித கவிதைகளை
அடுக்கி

என்
சிதைக்கு தீ மூட்டினேன்!

என்
மரணத்தின் தடயம்
தெரியக் கூடும்
என்ற பயத்தில்

உடை மட்டுமே
எரிந்த நிலையில்
நிர்வாணமாய்
என் எழுத்தை
நோக்கி ஓடினேன்

என் நிர்வாண
உடலைக் கண்டு
உறக்கமற்ற
இப்-பேய்கள் சிரிக்கும்
போது கூட
தோண்டியதும் கிடைத்த
ஒரு புதையலை போல
ஒரு கவிதை கிடைத்தது
இந்த இரவில்,
இந்த மெல்லிய
பேய்-காற்றில்,
இந்த அகண்ட மாயானத்தில்...

-SunMuga-
23-04-2015 20.52 PM

April 21, 2015

அழகான கவிதை

என்
கண்களில் கலந்த
அழகான கவிதையை
நீ
எப்போதும்
அழகாக தேர்ந்தெடுக்கிறாய்
ஒரு துளி
கண்ணீரின் வழியே!!!

-SunMuga-
21-04-2015 22.05 PM

கண்ணாடி

கண்ணாடியில்
அழகாய் தெரிந்த

என் கண்கள்
என் முகங்கள்
என் இதழ்கள்

இன்று
அழுகையை  மட்டுமே கூட்டுகிறது

அன்பாய்
நான் உன்னை
பார்த்த கணங்களும் 

வெறுப்பாய் நீ
என்னை
பார்த்த கணங்களும் 

அக் கண்ணாடியில்
பதியும் போது....

-SunMuga-
21-04-2015 22.17 PM

சிந்தனை

என்
வாழ்க்கையை
சிந்தித்து
சிந்தித்து

நான்
வாழ்க்கையில்
செயலிழந்து இருக்கிறேன்

என் அன்பை
சிந்திக்காமல்
உன்னிடம் வெளிப்படுத்தி..

-SunMuga-
21-04-2015 22.08 PM

பூவின் நறுமணம்

பூக்களின்
நறுமணம்
பிணத்தின் மீது எடுபடுமா?
(காதல் - என் மீது)

-SunMuga-
21-04-2015 22.11 PM

நாய் - நான்

சீ!

போ!

நாயே!

என்று

கைகளை ஓங்கி
கண்களால்
என்னை துரத்தி விடுகிறாய்

ஐந்நூறு கிலோமீட்டர்
தூரத்தில் நான் இருந்தும்!

நாய்-ஆகிய
நான்
நன்றியுள்ளவன் என்பதை
புரிந்தும் மறந்து!
மறந்தும் புரிந்து!

-SunMuga-
21-04-2015 22.02 PM

அன்பு

கோழையோடு
ஏழையும்!
என்னோடு இருப்பதால்
எளிமையாக கூட
என் அன்பை
சொல்ல முடிவதில்லை
இவ்வாழ்க்கையை
மெல்லவும் முடியவில்லை...

-SunMuga-
21-04-2015 21.51 PM

அடையாளம்

உன்னோடு வாழ்ந்த
அனைத்து
அடையாளங்களையும்
அழித்து விட்டேன்
இந்த ஒரு வருடத்தில்
இக் கவிதையின் வழியே!!

-SunMuga-
21-04-2015 21.53 PM

இரக்கம்

இறந்து விட சொல்,
இப்போதே
இறந்து விடுகிறேன்!

இரக்கம்
மட்டும் காட்ட சொல்லாதே!

உன்னிடம் மட்டும்!

-SunMuga-
21-04-2015 21.55 PM

நான்

எது?
எவையெல்லாம்?
நான் என்று
யோசித்துப் பார்த்தேன்!

எதை?
எவையெல்லாம்?
என்னிடமிருந்து
நீ வெறுத்தாயோ!

அவை!
அவையெல்லாம்!

இன்று வரை
நானாக இருக்கிறது...

-SunMuga-
21-04-2015 21.48 PM

பைத்தியத்தின் கண்கள்

எப்போது
நீ
என் கண்களை பார்த்தாலும்

நான்
என் கண்களை
ஒரு பைத்தியத்தின்
கண்களை பார்ப்பதை போல தான்
பார்க்கிறேன்

தோல்வி தழுவிய
ஒரு புன்னகையை
எப்போதும்
உன் மீது பரப்பி விடுகிறேன்

என்னிலிருந்தும்
என் கண்களிலிருந்தும்
என் புன்னகையிலிருந்தும்

நீ தப்பித்து கொள்ள...   

-SunMuga-
21-04-2015 21.44 PM

பழி

எத்தனை
வார்த்தையை/எழுத்தை
அடித்து அடித்து
கொன்று இருப்பேன்

உனக்கான
ஒர் கவிதை எழுத
அதன் பழி அனைத்தும்

உனக்கும் இல்லை
எனக்கும் இல்லை
நம் காதலுக்கும் இல்லை
நம்மை பிரித்த காலத்திற்கு!!

-SunMuga-
21-04-2015 21.38 PM

நீ/நான்

நீ!
நீ!
நீ!

என்று
என் மனம்
சொல்லும் போது

நான்!
நான்!
நான்!

என்று
என் நிலமையும்
இன்றோ!
என் வறுமையும்
சொல்லுகிறது

நீ
இல்லாது
நான் வாழும்
இவ் வாழ்க்கை...

-SunMuga-
21-04-2015 21.35 PM

என் எழுத்தில்

எவையெல்லாம்
என்னை
இறந்து விட சொல்லுகிறதோ

அவையெல்லாம்
என்னை
வாழவும் சொல்கின்றன

இப்போது

நான் வாழவா?

நான் இறந்து விடவா?

வாழும் போதே
இறந்து விட ஆசை

இறந்த பின்னும்
வாழ்ந்து விட பேராசை

என் எழுத்தில்.....

-SunMuga-
21-04-2015  21.27 PM

April 19, 2015

2015 கவிதைகள் 691 to 700

உன் பனித் திரையை
மெல்ல திறந்திடு
என் சூரியனே!
உன் இதழுக்கு
பனி செய்யவே
காத்திருக்கிறது
என் இதழ்!!!                691

என் முழுக்
காதல் உலகத்தையும்
உன் கரு விழிக்குள்
அடைத்து வைத்துள்ளேன்
ஒரு போதும்
அது கண்ணீர்
சிந்தாமல் இருக்க!!    692

நான் கண்களை
மூடும் போதெல்லாம்
நம் காதலை பற்றிய
கனவுகளே விரிகிறது...  693

எப்போதும்
நீ உடுத்தும்
உடையின் நிறம்
நான் அறிவேன்
நான் வாங்கி கொடுத்தது
ஒர் உடை மட்டும் தானே!!   694

நாம் சந்திக்கும்
நேரம் தவிர
மற்ற நேரங்களில்
சிந்திக்கிறேன்
சந்திக்கின்ற நேரங்களை பற்றி... 695

உன்னை மட்டுமே
கானும் என் கண்கள்
உறங்கிய போதும்
கனவில்
நெருங்கிய போதும்...   696

எவை என்றும்
எது என்றும்
தெரியாத இவ்வுலகத்தில்
காதல் மட்டுமே
தெரிகிறது
நம் இருவரின் கண்களுக்கும்..  697

மொத்தம்
எத்தனை கவிதை கோபுரம்?
இக் காதல் கோவிலுக்கு..    698

சொல்லாக
வெளிப்படும் இக் கவிதைகள்
தான்
நம் காதல் - செல்கள்
அவை உயிர் வாழ்வதற்கு..  699

நீ இடும்
ஆயிரம் முத்தங்களுக்கும்
ஒரே சப்தம் தான்
ஆனால் இன்றோ
இவ்வுலகின்
அனைத்து சப்தங்களும்
உன் முத்தங்களாய்
ஆனதே என் உயிரே!!       700

2015 Poems 701 to 710

The relationship
Between
You and Me
is nothing for others
But
The relationship
Between
You and Me
is everything for
You and Me in the world...      701

No more day's
I don't want
It Will not give
the valuable romantic
movements in the life....       702

When I start
To walk
I remind myself
To take a
heart beat of yours...          703

The moon is waiting
At window
You may touch
With your eyes
It will solid in the night
With your beautiful memories.. 704

The moon is smile
When
The moon is smile
With his children
At the window....          705

I hold your hearts
With my hands
I feel the beat
In my eyes...            706

Don't worry
It will happen in life
The love will take care of it... 707

(Love) Do something
I will do everything....                708

When you are feel alone
Just close your eyes
And
You may come here
I am always alone here.....  709

When I entering
To your lovable eyes
I feel
The smile will comes
Like a ripples....                    710

2015 கவிதைகள் 681 to 690

என்(கரு) நிற
உடையில்
இரவில்
நீ
உலா வந்தால்
பொன் நிற
தங்கத்
தாலிக் கொடியில்
கீழ்
நான் முத்தமிடுவேன்..  681

இன்ன நிறம்
என்று இல்லை
ஏதோ நிறத்தில்
எந்நேரத்திலும்
என்னுள்ளே
எப்பொழுதும்
நீ
நிறைந்து இருக்கிறாய்!   682

உன்னைத் தவிர
வேறு யாராலும்
என்னோடு
இவ்விரவில்
அமர்ந்திருக்க முடியாது...  683

பசுமை பரப்பிய
இப்புல்லில்
உன் மீது முத்தங்களை
பரப்பி விடுகிறேன்
புல்லின் மீது
முத்தத்தின் சத்தங்களை
கரைத்து விடுகிறேன்....  684

உன் உடல்
சரிவுகளில்
நான் சரிந்து விழும் போது
உன் பொன் விரல்களே
நம்மை காக்கிறது
போதும் என்று!!           685

என் தனிமையை
இப்போது
நான் தனிமைபடுத்திவிட்டேன்
தனிமையில்
நான் அமரும் போது...    686

தூக்கமற்ற
என் கண்களில்
உன் காதலின் ஏக்கங்கள்
உன் இதழின் தாக்கங்கள்
என் இதழின் தாகங்கள்
என் உடலின் மோகங்களே
நிறைந்துள்ளது...    687

உன் முத்தத்தில்
கரைந்து போன
என் இதழை
தேடுகிறேன் அன்பே!
என் இதயத்தில்...   688

எப்போதும்
நிசப்தமாய் இருக்கும்
என் இரவை
உன் முத்தத்தின்
ஒசையால்
எப்போது களைப்பாய்...  689

உன் கேள்விக்கும்
ஒர் உன்னத
பதில் இருக்கிறது
கேள்வியை மறந்து
நான் கொடுக்கும்
பதில் - முத்தம்...         690

2015 கவிதைகள் 671 to 680

நீல மேகங்கள்
நின்று பார்க்கும்
நீ என்னை
தொடும் போது
நீண்ட மேகங்கள்
கொட்டி தீர்க்கும்
நீ என்னை பிரிந்து
வாடும் போது.....             671

இதுவரை
நிறைவேறிய ஆசை
ஒன்றே ஒன்று தான்
உன்னோடு கை கோர்த்து
அந் நிலவை ரசித்தது...   672

என் கன்னங்களில்
இன்னும்
மிச்சம் இருக்கிறது
உன் கண்கள்
தந்த முத்தங்கள்....        673

ஆள் உயர
கண்ணாடியில்
அழகு பார்த்தேன்
என் இதழை மட்டும்
இனியவனே!
அது உனக்கு பிடித்த
இடம் தானே அதனால்!... 674

காதல் அருவிகள்
கொட்டும்
உன் முந்தானையில்
நான் மோதும் போது...    675

உன் காலடி
தேடியே ஓடுகிறது
என் காதல் நதி!
காலங்களை மறந்து...   676

கதிர் உதிரும்
காலத்தில்
குருவி கொத்தும்
கதிரைப் போல
காலங் கடந்தும்
இக் குருவி
சேகரிக்கிறது
இக் காதல் கதிரை!!        677

குளிர் உடை
போதுமா?
இக்காதல் குளிரை
சமாளிக்க!
உன் மெல்லிடை கொடு
நானும் கொஞ்சம்
குளிர் காய்ந்து கொள்ள...  678

என்
அத்தனை இரவுகளுக்கும்
வெளிச்சம் நீ!!           679

உணர்வற்று
உறங்கி கிடக்க வேண்டும்
காலை விடிந்த பிறகும்
உணர்ச்சி மிகுந்த
உன் இரவு முத்தத்தால்...  680

2015 கவிதைகள் 651 to 660

என் வலிகளை
மீறிய
வழி -உன் இதழ்...      651

ஏன்
இந்த காதல் பாதையை
என்னோடு நீயும்
தேர்ந்தெடுத்தாய்?

ஏன்
தெளிவாய்
என் கைகளையும்
தேர்ந்தெடுத்தாய்?      652

காமம் கிளித்தெறியும்
உடலைக் கொண்டு
உன்னை நான்
நெருங்கினால்
காதலோடு
என்னை கிள்ளி
அனைக்கிறாய் நீ!!       653

காதலில்
நீ சொல்லும்
வழிமுறைகளை
பின் பற்றுகிறேன்
வழிமுறையை மீறி
காமத்தையும்
பின் பற்ற செய்கிறேன்...  654

நம் வீட்டின்
நடு அறையில்
நடுக்கம் மிகுந்த
உன் முதல் முத்தம்
நிறைந்து இருக்கிறது.....   655

உன்னை விட்டு
பிரிந்து இருக்கும்
இவ்விரவை
பலமான என் கைகள்
கொண்டு தள்ளி விடுகிறேன்
தனிமையில்
கண்ணீரும் விடுகிறேன்...   656

என்
அர்த்தமற்ற ஆயிரம்
கவிதைகளுக்கும்
அர்த்தம் நீ மட்டுமே!!!    657

எந்த கனவிலோ
நடந்தது
நடந்த நிகழ்வு
இப்போது நிகழ்கிறது
நம் இரு நிழல்கள்
நின்று அதையே
ரசிக்கிறது....        658

நேர் நேராய்
கூர் கூராய்
நீ
என்னைப் பார்க்கும் போது
கூத்தாடும் குடம் போல
என் இதயம் துடிக்கிறது
உன் இடையின்
அசைவிற்கு ஏற்றார்போல..  659

என் வீட்டிலிருந்து
பலம் கொண்டு
இப்பகலை
நான் தள்ளி விடுகிறேன்
இரவாக
நீ என்னில் நிறைவாய்
என்ற அதிக சந்தோசத்தில்...  660

2015 கவிதைகள் 661 to 670

வீணாக்கிய
விடுமுறை நாட்கள் எல்லாம்
என் விதி என்று
மதி உரைக்கிறது
இன்று மதியம் வரை
உன்னோடு அமர்ந்த போது... 661

பொய் சொல்லும்
உன் புருவங்கள்
தள்ளி போ என்று !!
மெய் சொல்லும்
உன் கண்களை
பார்த்தபடி
என் கை செல்லும்
உன் இடையினில்
மெல்ல ல்ல ல
முத்தமிடு என்று
மெய் சொல்லுகிறது
உன் புருவங்கள்...    662

எட்டு திசைகளையும்
மீறி
நான் உன்னை
திரும்பி பார்க்கிறேன்
உன் காதலின் விசையால்
மெல்ல மெல்ல
உன் இதழின் இசையால்
என்னை நீ இசைக்கும் போது.... 663

மிக குறுகிய
பாதையே வேண்டும்
நீயும் நானும்
பயணிக்கும் போது
மெல்ல மெல்ல
நம் தோள்கள்
உரசிக் கொள்ள....   664

தேன் கலந்த
தென்றல் வாசனை
உன் கூந்தல் வாசனை....  665

காதல்
ஒளி விரியும்
இக் கண்களில்
மீண்டும்
நான் எப்போது
ஒளி கொடுக்க முடியும்
என் இதழின் வழி....     666

நீண்ட மென் சாரலில்
உன் சரிதம் தேடும்
மென் இதழ்
என் இதழ்....     667

ஆண் என்று
என்னை நினைத்து
உன்னை அனைத்தேன்
நீயே ஆணாக மாறி
என்னை பெண்ணாக
மாற்றினாய்
ஒவ்வொரு அனைப்பின்
முடிவிலும்..      668

இதழ் கொஞ்சும்
என் தேன் இதழில்
மெல்ல உதிரும்
பூ போல
வெட்கம் உதிரும்
வெட்கமற்ற இரவில்....  669

தெய்வங்கள் வாழ்த்தும்
தேவதை
என்னை நெருங்கும் போது
வேதனை கண்ட நாட்கள் எல்லாம்
வேர்வையில் தீரும் போதும்..  670

2015 கவிதைகள் 641 to 650

இரவின்
வண்ணங்களால்
நான்
உன்னை அலங்கரிக்கிறேன்
இரவாக
என்னையே நான்
உருமாற்றிக் கொண்டு... 641

வீட்டில்
நேரம் கிடைக்கும்
போதெல்லாம்
உன் நெற்றியிலே
நான்
முத்தமிட வேண்டும்....    642

தரம் மிகுந்த
ஓர் முத்தம்
தற்காலிகமான ஒரு
போலிப் பிரிவு
தற்செயலாய்
என்னை நீ
அனைத்த போது
நிகழ்ந்தது இது....           643

என்னை
தள்ளிவிட்டு
தள்ளிவிட்டு
உன்னையே
என்னோடு இணைக்கிறாய்
இதழ் முத்தத்தின் வழி...  644

உன் நினைவோடு
கடற்கரையில்
அமர்ந்தால் ஒர் சுகம்
உன்னோடு
நான் அமர்ந்தால்
அது ஒரு வரம்...       645

காலம் தரும்
கவலையில்
தீர்ந்து போய்விடுகிறது
இரவும் பகலும்
இருந்தும்
இருக்கிறது
என்னோடும்
உன்னோடும்
ஒரு துளி கண்ணீர் துளி...  646

மிகத் துல்லியமாக
என் கை ரேகைகளை
உற்றுப் பார்த்தால்
உன் உடலின்
ரேகைகளே தெரியக் கூடும்..  647

ஒலி எழுப்பும்
மணிக் கூண்டில்
ஒரு விண்ணப்பக் கடிதம்
எழுதி வைத்துள்ளேன்
ஒரு போதும்
உன்னோடு இருக்கும் போது
ஒலிக்க கூடாதென்று...    648

பதற்றம் நிறைந்த
கண்களுடன்
உன்னையும்
உன் உடலையும்
அணுகும் போது
உன்னுடனே
பறக்க முற்படுகிறேன்
யாருமற்ற இந்த
இரவின் வானத்தில்.... 649

எந்தவொரு வழிகளும்
இப்போது இல்லை
இருந்தும்
என்னில் வழியும்
உன் காதலால்
வலிகளும் இல்லை
என் வாழ்க்கையின் வழியில்..  650

April 18, 2015

2015 கவிதைகள் 631 to 640

அழகு நிரம்பிய
இக் காதல் உலகில்
அழகி நீ மட்டுமே
அழகன் நான் மட்டுமே
அழகு நம் காதல் மட்டுமே.. 631

அந்தி நேர
வேர்வை மழையை பருகி
அதிகாலை இச்சூரியன்
எழுகிறான்
அதிகமான காதலின்
சந்தோசத்தோடு
ஆச்சரியம் மிகுந்த
கண்களை தடவிய படி
உன் கால்களை
மெல்ல மெல்ல
வருடிய படி....      632

இரவுகள்
இல்லாத போதும்
முத்தம் இருக்கிறது
ஏன்
முத்தமே இரவாக இருக்கிறது
நம் இருவரும்
கண்களை மூடும் போது... 633

என்ன செய்யப்
போகிறாய்?
அர்த்த ராத்திரியில்
அர்த்தம் மிகுந்த
சந்தோசத்தோடு
பொழியும் இந்த
மழையின் குளிரில்!!
குளிரோடு கூடும்
இந்த வெப்பத்தில்... 634

என்னிலிருந்து
என் உயிரை எடுத்து
உன் இதழில் பதிப்பேன்
இரவின் ஒளியில்
உன் உயிரையும் காத்து... 635

என் வார்த்தைகளை
நீ வாசித்தால்
அவை வார்த்தைகள்
அதையே
நீ நேசித்தால்
அது கவிதைகள்...        636

ஒளி கூடிய
வைரக் கற்கள் போல தான்
உன் பார்வையின்
ஒளியில்
ஒளிர்கிறது
என் காதல் கவிதைகள்...  637

உன் காதல் புத்தகத்தை
எழுதியவனும் நான்
வாசித்தவனும் நான்
ரசித்தவனும் நான்
ருசிப்பது மட்டும் நீ....       638

கொடுப்பதும்
பெறுவதும்
நான் அல்லவா?

கொடுப்பதிலிருந்தும்
பெறுவதில் இருந்தும்
என்னிலிருந்து
வேறுபட்டு இருப்பது
நீ அல்லவா?

கொடுப்பதை
அள்ளி கொடுத்து
பெறுவதை
என்னை
கிள்ளி பெற்று
சந்தோச தோனியில்
நீ சிரிக்கும் போது...    639

உன்
மெல்லிய உடலின்
சித்திரங்களை
சீக்கிரமே வரைந்து
முடித்து விடுகிறேன்
என் கண்களின் வழி
கனவின் வண்ணங்களை தீட்டி... 640

2015 கவிதைகள் 621 to 630

விளக்கை ஏற்றிவிட்டு
முடிவில்
உன்னை குளிர்விப்பேன்
என்னில் வேர்வைகள்
தீரும் போது...      621

வானத்தின்
மின்னலின் கீறல் போல
என்னில்
உன் நகக் கீறல்
பதிய வேண்டும்...  622

கடற்கரையில்
மண்ணைத் தோண்டி
உள்ளே
நுழையும் சிறு நண்டைப் போல
உன் காதலை தோண்டி
உன் இதழுக்குள் நுழைகிறேன்
உன் பெரு முத்தத்திற்காக.. 623

நீ இல்லாமலும்
பதிகிறது
உன் காலடி தடம்
இந்த கடற்கரை மணலில்
உன் நினைவின் வழியே.. 624

கையில் கோர்த்து
அள்ளி விடும் போது
தூறும் மணலை போல
என்னில் உதிர்கிறது
ஒர் கண்ணீர் துளி
உந்தன் பிரிவால்...       625

வீசும் கடல் அலைகளில்
ஒலிக்கிறது
நம் இருவரும்
கொஞ்சிப் பேசிய
வார்த்தைகள்...      626

கட்டிய சுவருக்குள்
சுதந்திரமாக
சுற்றித் திரிகிறது
உன் காதல்
என் கவிதைக்குள்...  627

நிழல்கள் அற்ற
ஒர் இடத்தில்
நிம்மதியான உறக்கம்
எதுவென்றால்
அது உன்னோடு
நான் உறங்கும்போது
மட்டும் தான்..   628

நீயே
என் நிழல்கள்
நீ
என்னோடு இல்லாத போதும்
என்
இதழாக ஒளி கூடும் போதும்.. 629

உன்
நீண்ட கூந்தலின்
நுனியில்
எப்போதும் இருக்கிறது
பூவாக என் இதழ்கள்..  630

April 16, 2015

2015 கவிதைகள் 611 to 620

சோகம் தீரும்
சோர்வும் தீரும்
சேலையில்
என் தேவதை
என்னில் தரும் முத்தத்தால்.. 611

உயிர்த்தெழும் புற்களில்
பூக்களாக பனித்துளி
நம் காதலை போல...    612

உயிர்த்தெழும் புற்களில்
பூக்கள் இல்லை
இருந்தும்
பசுமை இருக்கிறது
நம் காதலைப் போல...  613

என்னை நாடி வந்த
வார்த்தைகள் எல்லாம்
கவிதைகள்
நான் உன் இதழை
நாடி வந்த பிறகு தான்... 614

அளவான பற்றோடு
அதிகமாய் முத்தம் இடுகிறாய்
அடுக்கி வைத்த
புத்தகம் போல...           615

மெளனமாய்
நீ பேசும் இந்நேரத்தில்
மெளனங்களை கடந்து
மெளனமே பேசிக்
கொண்டு இருக்கிறது
உன் இதழ் வழி...     616

வளையல் குலுங்கும்
போதெல்லாம்
உன் முத்தத்தின்
இசையே கேட்கிறது
என் கைகளுக்கு...  617

உன் மேனி
உரசி உரசி
என் மேனி
கலர் (கருப்பாக)மாறுகிறது
காலையில்
நான் எழும் போது...  618

ஏதோ ஒரு
அழகு இருக்கத் தான்
செய்கிறது
உன் செவிகளுக்கும்
அதான்
தானாகவே வேலை
செய்கிறது என் இதழ் அதனுள்.. 619

இன்றென்னும்
இன்பத் தேரில்
உலா வரும்
அழகு தேவதை நீ
காதலின் பாதையில்... 620

2015 கவிதைகள் 601 to 610

என்னை விட
என் தேவதை
அழகாக
கவிதை எழுதுகிறாள்
என் கன்னங்களில்...        601

நீ
என் இதழில்
பாட தொடங்கியதுமே
நான்
என் கண்களை மூடி
ரசிக்க தொடங்க விடுகிறேன்.. 602

முழுமையடைந்த
இரவில்
நீ
உன் உடையை
களைவதை போல தான்
நான்
என்னிலிருந்து
என் காதலை களைக்கிறேன்
முழுமையடைந்த
ஓர் கவிதையை எழுத...   603

தூரங்கள் இருந்தாலும்
நேரங்கள் கழிந்தாலும்
நீயே
என்னை நெருங்கி இருக்கிறாய்
என் மடியில் தவழ்ந்த படி... 604

மேகத் தீ
குறையும் போது
மோகத் தீ
எரிகிறது
இந்த காதல் உடலில்..    605

என்னிலிருந்து
பிறக்கும்
எந்த கேள்விக்கும்
பதில்- உன் முத்தம்....      606

உன் இருப்பை
என்னுள் உணர்ந்தே
என்னுள் பிறக்கிறது
இந்த காதல் கவிதை...   607

உன்
ஒரே ஒரு
தொடுதல் போதும்
என்னை நீ தேடும்
கவிதை நான் எழுத...   608

வேகம் கூடிய காற்றை போல
நேற்றே
நான் உணர்ந்தேன்
காமம் கூடிய ஓர் காதலை
அந்த இரவுக் காற்றில்...  609

நீ
இன்று சரியில்லை-என்றே
என்னை
சரி படுத்துகிறாய்
உன் இதழால்....       610

2015

என் இனிய வருடம்
வளர ஆரம்பிக்கிறது
12.12 மணியில் இருந்து.

யோசனை

நம் வாழ்க்கையில் உலக உருண்டை ஒழுங்காக சுழன்று இருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? இருந்திருக்க கூடும்? என்று ஒரு யோசனை.

பலரின் யோசனைகளை பல நேரங்களில் நான் உதாசினப்படுத்தி இருக்கிறேன். ஆனால் பின்னால் பலமாக யோசித்து இருக்கிறேன். யோசனை என்பது என்னை பொறுத்த வரை ஒரு கற்பனை.

கற்பனை என்பதில் ஒரு சில நேரம் பெரும் பொய்யாகவும், கற்பனைக்கு மீறின உண்மையாகவும் இருக்கும். இதில் நான் சொல்ல போகும் சம்பவமும் ஒரு கற்பனை தான். வெறும் கனவுகள் தான். கனவு என்ன வந்தது என்று காலையில் ஒரு சிலருக்கு மட்டுமே ஞாபகம் இருக்கும் அதுபோல தான் இதுவும் ஒரு வித்தியாசமான ஒரு காதல் கற்பனை.

" மாங்கல்யம் தந்துனானே" என்று சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் ஏதோவொரு கோவில் வாசலில் நான் உனக்கு கட்டியது வெறும் தாலி தானா? என் தவிப்புகள் அனைத்தையும் மூன்று முடுச்சுக்குள் அடக்கி விட முடியுமா? உன்னை எப்படி வைத்து காப்பாற்றுவேன்? உன்னை கண் கலங்கவிடாமல் வைத்து இருப்பேனா? என்று பல யோசனையோடு நான் கட்டியது வெறும் தாலி தானா? நீயே சொல்.

என்னை அளவுக்கு மீறி காதலித்து என் கரம் பிடித்தாய். என்னால் உனக்கு என்ன கொடுத்துவிட முடியும். காலை வேலைகளை எனக்காக தொடங்கி மாலை வரை வீட்டு  வேலைகளுடன் மன்றாடும் உனக்கு என்னால் என்ன தந்து விட முடியும் என்று பல முறை யோசிக்கிறேன். நான் பருகி காலி செய்த காபி டம்ளர் முதல் இரவு நான் உடுத்தி கசக்கிய கைலியையும் வெளுத்து விட்டு, வீட்டையும் பராமரிக்கும் உனக்காக நான் என்ன செய்துவிட முடியும் என்று யோசிக்கிறேன். 

யோசனை என்பதே என் வாழ்வின் பெரும் பகுதி. ஆனால் நான் இப்பொழுது யோசிப்பது உன்னைப் பற்றி மட்டுமே.

என் உடல் சேர்ந்து, சோர்ந்து போய் நீ கிடக்கும் வேலையிலே, நான் ஆபிஸில் வேலைகளை கவனித்து கொண்டு இருப்பேன். நிஜம் உன் உள்ளத்தை பற்றிக் கொள்ள ஆசை இருக்கும். உன் தோள்களை மிருதுவாக வருடிவிட ஆசை இருக்கும். இங்கே எனக்கு வேலையும் இருக்கும். வேலை வேண்டாத வேலை செய்துவிட்டமோ என்றே எண்ணம் போகும்.

ஆணின் மனம் எப்படிப் பட்டது என்பது எனக்கும் தெரியும். வெறுமனே விஷயங்கள் தெரிந்தும் தெரியாதது போல சூழ்நிலை சூழ்ந்து கொள்கிற மனம் தான் ஆண் மனம். ஆனால் நான் வெறும் ஆண் மகனாக இருக்க விரும்பவில்லை. உனக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும். உன் மனம் கோனமல் உன்னிடம் அதிகம் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைத்தும் மெளனமாகவே. உன் ஒற்றை பார்வையின் அர்த்தம் எனக்கு மட்டுமே புரிய வேண்டும்.

நான் சொல்வதை கவனமாக கேள். நானும் ஒரு சராசரி மனிதன் தான். ஆனால் என்னை மீறி நான் செய்யும் செயல்கள் உன்னை காயப்படுத்தினால் நிச்சயமாக உளறி விடு. நான்  உதறிவிடுகிறேன். நம் உலகத்தில் எனக்காக ஒன்றை மட்டும் தெரிந்து கொள். உனக்காக நான் எதையும் என்னில் இருந்து இழக்கவில்லை. மாறாக நான் ஒரு சிறு குழந்தையாக மறுகனம் பிறக்கிறேன். நீ தான் தாய்

-Sun Muga-
14-02-2014

விபூதி

உனக்கு பழக்கமில்லாத
விபூதியை பூசிக் கொள்கிறேன்,
உன் உடைகளை கலைத்த
இரவின் கனவின் பின்....
உன் கலைந்த உடையே
என் கலையாத கனவுகள்..
உடுத்திய வெள்ளை
உடைகளை கலைத்த
தேவதை நீ!!!
விரல்களை நீட்டி
என் கண்களை மூடி
இதழ்களையும் மூடுகிறாய்
உன் இதழ்களால்...
நிர்வாணமாய் நீ
குளித்த இரவில்
இன்னொரு முறை
நீந்தி பார்க்கிறேன்
கனவு என்று தெரிந்த
நினைவில்...

April 15, 2015

எனக்கான இடம்...

இராஐபாளையத்தில் தொடங்கி சென்னை வரை நெருங்கியுள்ளது என் வாழ்க்கை. எனது பயணத்தின் தொடக்கம் எங்கு செல்வோம் என்று அறியாமலேயே சென்றது என்றே சொல்லலாம். இன்று கூட கண்களை மூடினால் நான் எப்படி தவழ்ந்து இருப்பேன்? நான் எப்படி ஒடி இருப்பேன்? என்று என் பால்ய நினைவுகள் என்னையே கேள்வி கேட்கின்றன. ஏன் படிக்கிறோம் என்று நினைத்த காலம் அந்த பள்ளி பருவத்தில். ஏன் பாதி கூடநான் படித்ததில்லையோ என்றே எண்ணுகிறேன்.
நாள்தோறும் தவறாமல் பள்ளிக்கு செல்வேன்,ஆனால் படிக்க தான் தவறிவிட்டேன். என் பள்ளி பருவத்தில் எனக்கு விளையாட்டு தனம் அதிகம்.. ஆனால் இன்றுவரை ஒரு விளையாட்டும் தெரியாதென்பது மட்டும் உண்மை..
எனக்கான நண்பர்களும் யாரும் கிடையாது. ஆம் தனிமை என் வாழ்கையில் இந்நாள் வரை தனிமையில் நெருங்கி பழகி இருக்கிறேன் என்னோடு என்றே சொல்ல வேண்டும்.
வானத்தை பார்த்த படி பேசியிருப்பேன். வருடிய காற்றையும் வருடிருப்பேன். ஏன் இந்த தனிமை என்று என்னுள்ளே பல முறை கேட்டுருக்கிறேன்.அதற்க்கான பதில் தான் இன்றும்
எழுதிக்கொண்டே இருக்கிறேன் முடிந்தவுடன் சொல்கிறேன்.
என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திருப்புமுனை என்னவென்றால் பத்தாம் வகுப்பு தேர்வு. எப்படி படித்தேன் என்று எனக்கு தெரியாது ஆனால் படித்தேன் விடாமுயற்சியுடன் அதில் வெற்றி பெற்ற சந்தோஷம் எனக்கு இருந்தது.
நான் 85% எடுப்பேன் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது அந்த தேர்வில்.அதுதான் என் வாழ்வின் முதல் வெற்றி என்று கூட சொல்லலாம்.
அடுத்தது தொழில்நுட்பகல்லூரி படிப்பு; மிக நுட்பமான கணவு என்றே சொல்லவேண்டும். ஆம் இங்கு நான் என்ன கற்றேன்? எதற்காக இங்கு சேர்ந்தேன்? அதிலும் எனக்கொரு சந்தேகம் இருந்ததுண்டு. பள்ளி பருவத்தில் இருந்த வாழ்க்கையின் நேர் எதிரான வாழ்க்கை என்று கூட சொல்லலாம். அதித நண்பர்கள், நண்பர்களின் உரையாடல் என்று நான் உற்று நோக்கிய நூற்று கணக்கானவை இங்கு தான் ஆரம்பம். என் வாழ்வின் பின் பகுதியை இது தான் நிர்ணயம் செய்யும் என்பதையும் மறந்ததும் இங்கு தான்.

பெண் தெய்வம்

"பெண் அல்ல நீ
  பொன்(னம்மாள்)"
நீண்ட இரவுகளுக்கு பிறகு நேற்று அக்கா கனவில் வந்தாள். சட்டென்று எத்தனை வேகமான ஒரு நடை. புகைப்படத்தில் இருக்கும் அதே தாவணி. தண்ணீர் குடம் வைக்கும் இடத்தில் இருந்து அதே கோபமான ஒரு பார்வை. இன்னும் உனக்கு என் மீதான கோபம் குறையவில்லை என்றே தோன்றியது. எத்தனை நாட்கள் ஆகிவிட்டது நீ என்னோடு பேசி. ஒரு முறையாவது பேசேன் என்ற கெஞ்ச வேண்டும் போல தோன்றியது.  இத்தனை கோபத்திலும் என்னை வந்து பார்ப்பது ஒரு விதத்தில் சந்தோஷம் தான். ஆனாலும் மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி. உன்னை ஏதும் காயப்படுத்தி விட்டனோ என்று.
07-08-1999 சனிக்கிழமை உச்சி வெயிலில் நான் ஏதோ விளையாடிக் கொண்டு இருந்தேன். அவள் என்னைப் பார்த்தவாறு மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு இருந்தாள். யார் சொன்னார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. நான் ஓடிப்போய் என் அம்மாவை கூப்பிட போனேன். நான் எத்தகைய விவரம் அற்றவன் இன்னும் சொல்லப்போனால் பைத்தியக்காரன் என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அப்பொழுது என் அம்மா வெள்ளைதாய் என்ற தன் சிநேகிதி வீட்டில் பேசிக் கொண்டு இருந்தாள். நானும் போனேன் அக்காவை பற்றிய நிலமையை சொல்லத் தெரியவில்லை. அவர்கள் டீ குடித்து கொண்டு இருக்க என்னிடமும் டீ டம்ளரை கொடுத்தார்கள். டீயை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் அப்பா தடாலென்று சைக்கிளை நிறுத்திவிட்டு ஏத்தா பேச்சி உசுறு நின்னுபோச்சு சீக்கிரம் வா என்று கண்கள் கலங்கியபடி ஒடிவந்து சொன்னார். என் தாயும் ஓடிப்போய் அவள் கைகளை பிடித்து நாடி எல்லாம் பிடித்து பார்த்தார்கள். உயிர் இல்லை என்று தெரிந்ததும் ஒரே அலறல் சத்தம் வீட்டில். நானும் என் அக்காவும்(முத்து)குடோனில் ஒரு ஓரமாக அமர்ந்து அழுது கொண்டு இருந்தோம்.
"நம் வீட்டின் முதல்
கரு நீ
கருவின் உருவம் அனைத்தும்
செந்தீக்கு இரையாகிவிட்டது"
இது நான் என்றோ உன்னைப் பற்றி எழுதி வைத்தது.
உண்மையில் நீ எனக்கு ஒரு தெய்வம். என்னால் முடிந்தவரை உன் நினைவுகளை நிச்சயம் அசை போட்டுக் கொண்டே இருப்பேன்.

சண்முகம்

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம் என்று நான் இன்று படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் படிக்கிறேன். ஆனால் நீங்கள் தான் வாழ்வுக்கான அர்த்தத்தை மெளனமாகவே பரிமாறிக் கொண்டே இருக்கிறேர்கள் இந்நாள் வரை.
என் தாயையும் தாய் போல் கவனிக்கும் தந்தை நீங்கள் , உங்களின் உயிர் துளியில் பிறந்த நாங்கள் ஐவரும் இன்று உங்கள் வேர்வைத்துளியில் வளர்கிறோம். நீங்கள் படித்ததை இது வரை பரைசாற்றியது இல்லை,ஆனாலும் எங்களை படிக்க வைத்தீர்கள்.
உங்கள் இடைவலியில் கூட இடைவிடாமல் உங்கள் வேர்வைத் துளியால் எங்களை வளர்க்கிறேர்கள்.
எங்களின் உதிரம் கூட போதாது உங்களின் பாதம் கலுவுவதற்க்கு.
எங்களது மார்பை சேர்த்து அணைக்கவில்லை என்றாலும் மனங்களில் சேர்த்து அணைக்கிறேர்கள் ஒவ்வொரு முறையும்.
காலைச் சூரியன் கூட பின் தொடர மறந்தாலும் நிழல்லாக பின் தொடர்கிறேர்கள் ஒவ்வொரு நாளும்.
தண்ணீரில் ஊறிய சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டாலும் எண்ணெயில் ஊறிய சாப்பாட்டை உண்ண சொல்கிறேர்கள்.
எந்த நாள் என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன், உங்கள் உழைப்புக்கு விடுமுறை கொடுக்க.

இது நடந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிந்து இருக்கும். நிலவின் ஒளியில் நெற்கள் உளரப் போடும் அந்த நெற்களத்தில் எங்கள் மூவருக்கும் புத்தகம் மற்றும் புது நோட்டுகளுக்கு ப்ரோன் கலர் அட்டை போட்டு கொடுத்தீர்கள். என் மனதில் இருந்து அந்த இரவு மறைய மறுக்கிறது. ஒரு வேலை நிலவின் ஒளியில் உங்களை நான் கண்ட முதல் இரவாக கூட இருக்கலாம்.

நான் ஏதோ எழுதுகிறேன் என்று எனக்கு தெரியும். முதன் முதலில் நான் எழுதியதை உங்களுக்கு காட்டியவுடன் படிக்க ஆரம்பித்தீர்கள். நான் உங்கள் முகத்தை பார்க்கவே இல்லை. ஒரு கூச்சம் தான். ஆனால் நீங்கள் சிரித்தீர்கள். இன்னும் சொல்லப் போனால் அது சிரிப்பு இல்லை பூரிப்பு.. நான் எழுதி நீங்கள் வாசித்த முதல் தொகுப்பு.

ரைஸ்மில் (1955)to டியூசன் செண்டர் (2013)

ABC பாரம் ஸ்ரீ ராஜேஸ்வரி ரைஸ்மில் 
இது தான் இந்த இடத்தின் பெயர் என்று எனக்கே  லேட்டாக தான் தெரியும். ஆனால் இப்பொழுது Achiever Coaching Centre என்ற பலகை. இது ஒன்றும் ஒரு எழுத்துக்களால் ஆன ஒரு பலகை மாற்றம் இல்லை. அதையும் தாண்டி ஒரு தலைமுறையின் மாற்றம் என்று தான் என்னால் சொல்ல முடிகிறது.

தன் விளைநிலங்களை விற்று வித விதமான வீடுகளைகட்டி வாழ்ந்து வரும் மனிதர்களின்  குழந்தைகள் தான் இன்று பயில்கின்றனர் இந்த டியூசன் செண்டரில்.

நெல்மூட்டைகள் போய்
புத்தக பை மூட்டைகள்,
நெற்கள் உளறிய களம் போய்
பிள்ளைகள் உலரும்  களம்,
தனிமையில் தவிக்கும் தள்ளுவண்டி,
உம்மியை நெருப்பிற்க்கு
இறையாக்கி வென்புகையை
வெளியேற்றிய புகைக்கூடும்
இன்று வெறும் எலும்பு கூடு,
செங்கதிர் வெயிலில் ஆடிய
இடமும் இன்று வெறும்
செங்கற்கள் தான்.
காரணம்
ஒரு காலத்தின் மாற்றம்...
அப்பா,
நீங்கள் பலகை பிடித்த
தோரணை இன்றும்
என்னை தொந்தரவு 
செய்கிறது...
தொட்டியில் நெல் அளந்து
போடும் போது நீங்கள் 
எண்ணிய எழுத்துக்கள் (1,1, 2,2,3, 3) இன்றும் என் எண்ணங்களில்..
தொட்டியில் நனையும்
நெற்கள் கூட ஒரு பகல் தான்
நனையும் ஆனால் நீங்கள் 
ஆயும் முழுதும் நனைந்து
விட்டீர்கள் வேர்வைத் துளியில்..

கொழுத்தும் வெயிலும்
கொட்டும் மழையும்
பார்த்திராத என் அப்பாவை
நான் பார்ப்பது என் அதிஷ்டம்.

பிறவி குணம் மாறாமல்
பிள்ளைகளை வழிநடத்தும் 
பேச்சியம்மா ஒரு பொக்கிஷம்.

பேச்சியம்மாள்

"ஒரு ஜென்மத்தை பரிசாக 

   கொடுத்த உங்களுக்கு 
   என்னால் என்ன?
   கொடுத்துவிட முடியும்
   என் அன்பை தவிர"
             -SunMuga


நீ சிந்தும் கண்ணீர் துளிகளுக்கு இன்று நான் அர்த்தம் அறிவேன். நான் பிறக்கும் போது கண்ணீரோடு பிறந்து இருப்பேன். ஆனால் எத்தனையோ வேதனை, வலிகளை சுமந்து என்னைப் ஈன்ற போது சிறு புன்னகை உன் முகத்தில் நிச்சயம் பூத்து இருக்கும். கார்த்தியின் குழந்தை (சஞ்சனா) பிறந்த போது நானும் நீயும் தே மருத்துவமனைக்குள் நுழையும் போது கேட்டேன். நான் பிறந்தது இங்க தானமா என்று. நீயும் ஒரு பழைய ஓடு மேய்த்த கட்டிடத்தை கை காட்டி இங்கு தான் பிரசவம் பார்த்தார்கள் என்று சொன்னாய். நானும் பார்த்தேன் அதன் ஜன்னல் வழி அந்த அறையை யாருமே இல்லாத இடம், அழுக்கு படர்ந்த இடம், என் அழு குரல் ஒலித்த இடம். உன் வேதனையை தாங்கிய இடம். நான் முதன் முதலில் உன் மடியில் உறங்கிய இடம். இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் புதைந்து இருக்கிறது இந்த இடத்தில் சிறுது நேரம் அமர்ந்து வர ஒவ்வொரு முறையும் ஆசை.

முப்பொழுதும் நான் ஏதோ யோசனையோடு இருப்பதாக பலர் கூறுகிறார்கள். அதன் பெயர் யோசனை அல்ல, நினைவுகள் என்று அவர்களுக்கு என்னால் விளக்கம் தரமுடியவில்லை. கிட்டத்தட்ட நான் வீட்டை விட்டு பிரிந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டது. இந்த ஏழு வருடமாக தான் வீட்டை பற்றிய சிந்தனைகள் அதிகமாக உள்ளது. நான் எவ்வளவு பாசம் உன் மீது வைத்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் நீ எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும்.

அம்மா என்ற வார்த்தையில் அனைத்தும் அடங்கும். அன்பு, பாசம், பரிவு , அன்பில் அரவணைக்கும் அம்மா. கோபமான பாசத்தை வெளிப்படுத்தும் அம்மா. அதனால் என்னவோ உன் பெயரைக் கூட பேச்சியம்மாள் என்று வைத்திருக்கிறார்கள் போல. சமைப்பது மட்டும் வேலை என்று இல்லாமல் குடும்ப பிரச்சனைகளையும் அழகாக சமாளிக்கிறாய் என் அன்பு அம்மா. உன்னைப்பற்றி நான் இதற்கு முன் தனிமையில் எழுதிய வார்த்தைகளை உனக்கே சமர்பிக்கிறேன்.

தனிமையான வாழ்க்கை எனக்கு எத்தனையோ சுகங்களையும், சுதந்திரத்தையும் கொடுத்து இருக்கிறது. வெண்பனி சூழ, நதிநீரில் நீந்திப் போகும் ஒரு நூலிழை போல நானும் சென்னை மக்களோடு பயணிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான ஒரு இலக்குகள் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்  இறந்துவிடும் என் உயிருக்கு ஒரு இலக்கும் இல்லாமல் பயணிக்கிறது.இன்று உடல்நலம் சரியில்லை. சாதாரண காய்ச்சல் தான். உடம்பில்  ஆண்டு முழுதும் வேலை செய்த களைப்பு போன்ற ஒரு உணர்வு. எழ முடியவில்லை. இருந்தும் நேற்று வாங்கி வைத்த மாத்திரையை உன்ன சொல்லி தெய்வத்தின் உத்தரவு. எழுந்தேன். நழுவும் கைலியை கூட பிடிக்க திடம் இல்லை. ஹோட்டலுக்கு நடந்து செல்லும் போது வேகமாக SMS செய்யும்  பெண்களை போல பல் ஆடுகிறது. 60வதை கடந்தவன் போல் கை, கால்கள் நடுங்குகிறது. அப்படியே போய் ஹோட்டலில் அமர்ந்து 4 இட்லி ஆர்டர் செய்தேன்.  சுவை இல்லாத ஒரு இட்லி. காரமான சாம்பர். நம்மை காலி செய்யும் ஒரு சட்னி. சாப்பிட ஆரம்பித்தேன்.
ஒரு நிமிடத்தில் என் மனம் என் வீட்டை நோக்கி பயணித்தது பைசா செலவில்லாமல். ஆம் இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தால் நிச்சயமாக கடை இட்லி தான். ஆனால் என் அம்மாவின் கையால் ஒரு டம்ளர் வெந்நீர் காய வைத்து குடித்து இருப்பேன். அதை தவிர அவளுக்கு வேறு ஏதும் செய்ய முடியாது.

ஒரு கனம் அந்த வெந்நீரை நினைக்கும்போது கண்ணில் கட்டுப்பாடு இழந்து கண்ணீர் பெருகுகின்றன. வாங்கிய 4 இட்லியில் 3  தான் உன்ன முடிந்தது மீதம் சுவை சரியில்லை என்பதினால் இல்லை, வழிந்தோடிய கண்ணீரால் தொண்டைக்குள் இறங்கவில்லை.

அதே போல நீ சமைத்துக் கொடுக்கும் லெமன் சாதத்தைப் பற்றியும் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன்.

இப்போது கூட லெமன் சாதம் சாப்பிட்டு விட்டு தான் வருகிறேன். அப்படி என்ன? அதில் ஒரு சுவை என்றால் ஒன்றும் இல்லை. நான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் போது, என் தாய் எனக்காக தயாரித்து கொடுக்கும் ஒரு சாதாரண உணவு அவ்வளவு தான். அது அவர்களுக்கு மிக எளிதாக சமைக்க கூடிய உணவு என்பதால் பெரும்பாலான நாட்கள் அது தான் உணவு. உண்ணும் போது கூட அதன் சுவை எனக்கு தெரியவில்லை என்றாலும் இன்று உணர்கிறேன் அதன் உண்ணதமான சுவையை. உயிரணு உணர்கிறது என் தாயே நீ கட்டிக் கொடுத்த லெமன் சாதத்தின் உயிரை. இன்று ஒவ்வொரு கடையிலும் நான் மட்டும் தனியாக உண்ணும்போது லெமன் சாதம் தான் சாப்பிடுகிறேன். இதில் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். எத்தனை பெரிய விலை கொடுத்தாலும் என் தாய் கொடுத்த அந்த லெமன் சாதத்தின் சுவை இது வரை எந்தவொரு சிற்றுண்டியிலும் நான் கண்டதே இல்லை. ஏன் என்றால் உங்களுக்கு அறிந்த தெரிந்த விஷயம் தான் அது பாசத்தால் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை நான் உண்ணும் போது அது என் தாயின் பாசத்தை வெளிப்படுத்துகிறது.