December 23, 2015

2015 கவிதைகள் 2011 to 2015

சுரந்து கொண்டே
இருக்கிறது
கண்ணீரின் வெப்பம்
வேதனை மிகுந்த
இந்த குளிர் இரவில்....    2011

முழுமை நிறைந்த
கவிதையெல்லாம்
முழுமை பெறாத
நம் காதலை பற்றியும்
அதன்
கனவுகளை பற்றியுமே
நிறைந்து இருக்கிறது...  2012

அதிகாலை மழையை போல
ஆலயம் நிரம்பிய
விளக்குகளை போல
என்னுள் எப்பொழுதும்
விழுந்து ஒளிர்கிறது
உன் காதல்....    2013

எதிலும்
உன் காதலின் நினைவு
எங்கோ
உன் பிரிவின் நினைவு என்று
என்னுள்
எப்போதும்
நிறைந்துள்ளது
எல்லா இரவும்...   2014

பயத்தில்
இறுக பிடித்த
தாயின்
கை விரலைப் போல தான்
உன் காதலை
இறுகப் பிடித்துக் கொண்டு
இருக்கிறது இதயம்
வாழ்வின் மீதான பயத்தில்...  2015

2015 கவிதைகள் 2001 to 2010

இருளில் கரையும்
இதழ் போதாதோ?
இவ்விரவை
நம் இருவரும் சேர்ந்து
கடப்பதற்கு.....       2001

மெல்ல வருவாய்!
மெதுவாய் தருவாய்!
மென்மையான இதழை
கொண்டு இன்பம்
எல்லாமே
நீயும் தருவாய்!
நானும் தருவேன்
இவ்விரவை..  2002

நிலையாய் நிலைக்கும்
உன் கனவின்
முத்தங்களின் நிஜம்
நிம்மதி பெருக
அதை நான்
கவிதையாக
வடித்த பின்பும்...  2003

உருகும் விழியில்
உருப்படியான
கனவுகள் இருப்பதால் தான்
உறக்கம் மறந்து
என் உயிரும்
உன்னோடு கலக்கிறது...  2004

கடலாய் விரிந்த
உன் காதலால்
கவிதை
காகிதத்தில்
அலையாய் பெருகுகிறது... 2005

அசைந்தாடி வரும்
மயிலின் வர்ணம்
குலைத்த இதழை கொண்டு
என் கனவை
விரிக்கும் தோகை நீ!     2006

பெண்மை கொண்டு
பெருமை கொண்டாய்
என்னை காதலாய் மாற்றி
கனவை உருமாற்றி
காலத்தையும் ஏமாற்றி....    2007

அமைதி நிரம்பிய
அவ்விரவில்
குளிராய்
என்னை அணைத்துக் கொண்டு
அள்ளிக் கொடுத்தாய்
உன் முத்தத்தை
வண்ண கனவாய்
என் இதழில்....       2008

மெளனம் குலைத்த
உன் விழிகளுக்கு
மெளனம் நிரம்பிய
முத்தம் மட்டுமே பரிசு
மெளனம் நிரப்பும் இரவில்... 2009

குளிர்விக்கும் இரவில்
குவித்திடும்
என் கண்கள்
உனக்காய் கவிதைகளை
கண்மணியின் கன்னத்திலும்
கண்மணியின் கழுத்திலும்
கண்மணியின் இதழிலும்...  2010

2015 கவிதைகள் 1991 to 2000

உண்மை புரிந்த
உள்ளம் மட்டும்
ஊமையாக நிற்கிறது
காலத்தின் முன்
காதலை வெள்ளம் போல
உள்ளத்தில்
தாங்கிக் கொண்டு...   1991

தாமதத்தால் வந்த
கொடுமை ஆயினும்
அதன்
தாகம் குறைய
தண்ணீராக
கண்ணீர் இருக்கிறது
கனவுகளை கடந்து...     1992

வாழ்க்கையின் முடிவை
வாழ்க்கை தீர்மானித்த போதும்
வாழ்க்கை இன்னும் இருக்கிறது
நம் காதலுக்கு...      1993

அகம் முழுதும்
நீ இருக்கும் போது
என் முகம் மலரும்
அன்பே!
உன் மல்லிகையின்
வாசம் சுமந்து...       1994

வாசம் வீசிய
இரவெல்லாம்
இனிய வாசம் வீச வைக்கும்
என் இதயத்தில்
இன்றே!
பிறந்து தவழ்திடும்
நம் முத்தத்தின்
குழந்தையை நினைத்து... 1995

விதியை உடைத்து
விரும்பிய படி
சிலைகளை செய்யும்
கலைகளை
கனவுகள் மட்டுமே
நமக்கு
வழங்கி இருக்கிறது...  1996

எல்லாமே
நினைவாய் போனாலும்
நிஜத்திலும்
கலந்திருக்கிறது
உன் முத்தம்
சத்தங்களை கடந்து
இந்நகரில்
நான் வாழும் போது...   1997

ஆகாயத்தில்
அலைமோதும் மேகத்துகளை
போல தான்
உன் நினைவால்
என் நிஜ வாழ்க்கை
அலை மோதி திரும்புகிறது
இப்பூமிக்கு..     1998

நீளும் இரவில்
உடை குறைத்த கனவில்
பெரும் படைகளாய்
விரியும் முத்தத்தின்
ஆயுதங்கள் என்னவோ
இதழ் தானோ?        1999

வா! அன்பே
இரவின் இசையில்
விடியலின் பாடலை
கேட்போம்
வரிகளாக
முத்தங்களை கோர்த்து...   2000

2015 கவிதைகள் 1981 to 1990

இனிமை கலந்த
கவிதையெல்லாம்
உன் இதய நிரம்ப
வாசித்துக் கொள்
துயரம் படிந்த
வரிகளை எல்லாம்
துயரம் கடந்து
யாசித்துக் கொள் 
என் அன்பே!!              1981

இப்பிறப்பின் பலனை
அடைந்து விட்டேன்
என்றே நினைக்கிறேன்
உன்னை பற்றி மட்டுமே
எழுதி வடித்த
இக்கண்ணீரின் முடிவில்...   1982

இது ஒரு இனிய
இரவு தான்
இன்றோடு பூர்த்தி அடைந்து
பெருகும்
இக்கவிதையின்
முதல் பாதி..      1983

முடிவற்ற வாழ்க்கை
பயணத்தில்
இதுவும் ஒரு மைல் கல்
கல்லாகிய
நம் வாழ்க்கையை கடந்து.. 1984

பொதுவாய் எழுதுவதற் கென்று வரிகள் ஒன்றும்
என்னிடம் இல்லாமலே
போய்விட்டது
இக்கவிதையின் முடிவில்... 1985

இரவையும்
இன்னலையும்
நினைத்துப் பெருகிய
கவிதையெல்லாம்
உன் கண்ணீரின்
கால் தடம் பதிய
வைக்காமல் இல்லை...    1986

என்னை பிரிந்து
வாழும் கண்களுக்கு
என் இதயத்தின்
காணிக்கை
இக்கவிதைகள்..        1987

எப்பொழுது நீ படித்தாலும்
இதில் இருப்பது
வார்த்தைகள் அல்ல
நாம் பிரிந்து
புரிந்து வாழும்
வாழ்க்கையின் ஒரு பகுதி... 1988

யாரைப் பற்றியும்
கவலை கொள்ளாத
இக்கவிதை
உன் கண்ணை நினைத்து
வருத்தப் படுகிறது
அதன் வரிகளும்
உன்னை காயப்படுத்தாமல்
இருக்க வேண்டிக் கொள்கிறது.. 1989

கண்களை மூடாமல்
கனவுகளை வளர்க்கிறது
என் காகிதம்
பெண்ணே!
உன்னை மட்டுமே
கவிதையாக்கி....    1990

December 21, 2015

2015 கவிதைகள் 1971 to 1980

கேலி செய்யும்
கேள்விகளுக்கு எல்லாம்
என் மெளனத்தின்
பதில்கள்
ஏனோ கேட்கவில்லை!!     1971

என் எதிரே
நீ நிற்கும் போது
எதிர்படும் கேள்வி
எங்கே?
என் முத்தம் என....       1972

மனச் சிதைவு
என்று ஒன்று வந்துவிட்டது
"மண"ச்சிதைவால்....     1973

சிதறும் கனவுகளில்
மனச்சிதைவு கொண்ட
கண்களை கொண்டு
உறங்கிக் கொண்டு
காலம் கழிக்கிறேன்...   1974

பார்வைகள்
ஒரு புறம் பார்க்க
கண்களின் வழியே
பார்வை இழந்து
மனதின் வழியே
உன்னையே
தேடிப் பார்க்கிறேன்...     1975

நிஜங்களை கண்டு
காதலின் நிழல்கள்
பயந்து கொண்டு இருக்கிறது
கனவில் கூட...         1976

இப்போது இருக்கும்
இளமை கூட
உன் முத்தத்தின்
பழமையை
தேடிக்கொண்டு ஒடுகிறதே!   1977

சோலை எல்லாம் பூத்திருக்க!
சேகவன் நானும் காத்திருக்க!
இரவின் சாலையெல்லாம்
வேர்த்திருக்க!
எதற்கு
இந்த சேலையடி என் கண்ணே!! 1978

செவி மலரும்
உன் கொழுசின் ஒலியால்
என் இதழ் மலரும்
உன் இதமான
விழியின் ஒளியால்..    1979

உன் பெண்மை கண்டு
வெட்கம்
நான் அடைந்தேன்!
இரவை
உன்னோடு இணைத்து
நீ என்னை
அவ்விரவில் அணைத்து...  1980

2015 கவிதைகள் 1961 to 1970

நீ யாசிக்கும்
கவிதையொன்றை
உன்னை நேசித்தே
எழுதி விட வேண்டும்
எங்கும்
உன் முத்தத்தின்
சுவடுகள் பதிந்த படி...     1961

கதகதப்பான
காற்றை உள்வாங்கிய போது
வெதுவெதுப்பான
கண்ணீர் ஏனோ
நிறைத்து விடுகிறது
யாருமற்ற
இரவில் தனிமையாய்
பயணிக்கும் போது..   1962

சிந்திய கண்ணீரெல்லாம்
ஆவியாக்கி
காதலின் மேகத்தில்
கலக்க வைப்பேன்
ஏதோ ஒரு நாளின்
துயரத்தில்
கவிதை மழையாக
மெளனமாக
பொழியவும் வைப்பேன்...     1963

காட்சி இல்லா
கவிதையொன்றில்
காதல்
சாட்சிகளை
தேடிக்கொண்டு இருக்கிறது..  1964

நினைவுகள்
வார்த்தைகளாய் மாறுகிறது
வார்த்தைகள்
காதலாய் மாறுகிறது
காதல்
வாழ்க்கையாக மாறுகிறது
வாழ்க்கை
கனவாக மாறுகிறது
கனவு
எதன் மீதோ
நம்பிக்கை கொண்டு வருகிறது..   1965

உன் இதழை விட
உன் இதழின்
மென்மையை தான்
அதிகம் யோசிக்கிறேன்
இன்னும்
அதிகம் நேசிக்கிறேன்...   1966

விதியால்
வீழ்ச்சி அடைந்த போதும்
விதவிதமான
கனவுகள்
காதலை வெற்றியடைய
செய்ய தான்
செய்கிறது இல்லையா?   1967

காதலின் வாசனைகளை
கூட்ட வேண்டிய
இந்த நள்ளிரவு
கவலையை மட்டுமே
கூட்டி வி(டு)டிகிறது..       1968

புறாக்களின் ஒலியை
கேட்டேன்
புறாக்கள் பாடிக் கொண்டு
இருக்கிறதா? இல்லை
பசியால்
வாடிக் கொண்டு
இருக்கிறதா?
அப்படி தானே
நம் காதல் புறாவின்
ஒலியும் நமக்கு
கேட்டுக் கொண்டு இருக்கிறது... 1969

தேடல் நிறைந்த
இரவெல்லாம்
தேவை என்று ஆகிவிட்டது
ஒரு சொட்டு கண்ணீர்
உன் தேவையின்
தாகத்தை
போக்கிக் கொள்ள...    1970

2015 கவிதைகள் 1951 to 1960

துக்கமோ
ஏக்கமோ எல்லாம்
கலந்தே
இக்கவிதைகள் வாழ்ந்து
கொண்டு இருக்கிறது
வாழ்க்கையின் அர்த்தமாக
என்னோடு
நீ இல்லாத போதும்..      1951

இக்கவிதைகள்
பக்கங்களை நிரப்பிக்
கொள்ளவில்லை
பக்குவமாக
உன் நினைவுகளை
மட்டுமே நிரப்பி கொள்கிறது.. 1952

உன் கருவிழிகளின்
புன்னகையை தாங்கி கொள்ள
நானும் பெண்ணாக
பிறக்க வேண்டும்
கருப்பையுடன்....    1953

என்னிடம் அதிக
முத்தம் வாங்கியது
என்னவோ
உன் உடலில்
உன் கண்கள்
தான் போல... 1954

கடவுளிடம்
வேண்டிக் கொள்கிறேன்
காகிதத்தில்
எழுதும் போது கூட
என் காதல்
உன்னை உருக்கி
விட கூடாது என...  1955

உன் இடை நிரம்ப
எழுதும் என் விரல்
எதிர்வினையாய்
உன் இதழ் நிரப்பும்
என் இதழை....      1956

பேசிப் பார்த்த விழியில்
காதலின் ஒளியை மீறி
காமத்தின் சுடர்
என்னை சுடுகிறதே
என் அன்பே!       1957

காலத்திலிருந்து
உன்னை என் காதலால்
மீட்டு
என் கண்களுக்குள்ளும்
என் கவிதைக்குள்ளும்
உன்னை வார்த்தைகளாய்
மாற்றி
நானும் வாழ வைப்பேன்... 1958

உயிர் கொண்ட
இந்த இரவில்
உயிரே என்னோடு
இல்லாத போது
எப்படி உறங்கும்
என் உயிர் நிம்மதியாய்....   1959

இந்த இரவின்
இசைக் கோர்வையில்
என் இன்பமும்
கலந்திசைக்கும்
அது தானே
இரவின்
காதல் வார்த்தைகளை
தன்னோடு
இணைத்துக் கொண்டு...   1960

2015 கவிதைகள் 1941 to 1950

சாத்தியங்கள் அற்ற
கனவாய் இருந்த போதும்
என் நினைவில்
நிறைத்துக் கொள்கிறேன்
என் மனதோடு
மறைத்தும் கொள்கிறேன்..  1941

நம்ப முடியாத வலிகளை
ஏனோ
உணர மட்டுமே முடிகிறது
உன்னோடு இல்லாத
ஒவ்வொரு நொடியிலும்...   1942

சிந்தனை பெருகிய
கவிதைகள் எல்லாம்
பைத்தியத்தின் எல்லையை
எப்போதும் எளிதாக
கடந்து விட தான் செய்கிறது..  1943

உன்னை நேசித்த உடன்
மனிதன் ஆனேன்
உன்னை சுவாசித்த உடன்
கவிஞன் ஆனேன்...    1944

கல்லறையிலும்
உன்னை காதல் புரிய
வைக்கும்
என் காதல் கவிதைகள்..  1945

சுமை மிகுந்த இரவில்
சுகமாய் மிதக்கிறது
உன் நினைவுகள்
சுயநினைவு அற்று
நான் அதை
என் நெஞ்சில் சுமக்கும் போது..  1946

மல்லி மலர் போல
பூத்து சிரிக்கிறாய்
செம்மஞ்சள் நிற சேலையில்
இன்னும் கொஞ்சம்
சிந்தித்தால் சோலையில்... 1947

என் சிறு ரோஜாவும்
என் மல்லிகை பூவும்
மணக்கும் புகைப்படம் கூட
ஒரு ஒவியம் தான் போல...  1948

சில நேரம்
சில அற்புதங்களை
சிறப்பாக நடத்தி விடுகிறது
உன்னுடனான
ஒரு சில கனவுகள்...      1949

தவிர்க்க முடியாத அழுகையாகவே
மாறிவிடுகிறது
ஒரு சில நேர
சிக்கலான வாழ்க்கை
இருந்தும் மனம் ஏனோ
உன்னையே அணைத்தும்
கொள்கிறது....   1950

2015 கவிதைகள் 1931 to 1940

கண்ணீர் ததும்ப
வேண்டிய இரவுகளில்
கவிதை ததும்பிக்
கொண்டு இருக்கிறது
கண்கள் முழுவதும்....     1931

உன் காதலின்
அத்தியாயம் வாசித்த பின்பு
மிகுந்த பக்தியாய்
நானும் வணங்குகிறேன்
உன் இதழை கடவுளாக்கி...  1932

எல்லாமே பழக்கப்பட்ட போதும்
இன்னும் பழகி கொள்ள
முடியவில்லை
உன் பிரிவில் உதிரும்
கண்ணீரை எப்படி
கட்டுப்படுத்திக் கொள்வதென்று....     1933

சோகம் நிரம்பிய
ஒவியத்தை போலவே
காட்சி அளிக்கிறது
என் கண்கள்
இக் கவிதையின் வழியே!   1934

உன் பிரிவில்
நிகழும் நிகழ்ச்சிக்கு எல்லாம்
நிதானமாக
ஒரு கண்ணீர் இருக்கிறது
நீ இன்றியும்
அது தானே வடிந்து கொள்ளும்..1935

மெளனம் நிறைந்த இரவு
ஒரு இறப்புக்கு சமம்
எத்தனை முறை தான்
இறப்பது மெளனமாக
இந்த இரவில்....     1936

நான் இறந்த பின்பு
உன் ஒற்றை
காதல் கவிதை போதும்
என் உடலை பற்ற வைக்க... 1937

அந்தரத்தில் அல்லாடும்
கனவை பற்றி
கவலை கொள்கிறது
இந்த கவிதை
இந்த இரவில்.....    1938

நாம் கடந்து வந்தது
வாழ்க்கை என்ற போதிலும்
வாழ பிடிக்கவில்லை
இனியும்
இப்போதும்
நாம் கடந்து கொண்டிருப்பது
வாழ்க்கை தான்.....     1939

விசித்திர கண்கள் உண்டோ
உன் கவிதைகளுக்கு
அது
என் கண்ணின் வழியே
என்னிலே கலந்து விடுகிறது..  1940

December 20, 2015

குறிக்கோள்

இன்றும் எழும்ப
முடியாமல் தவிக்கும்
என் குறிக்கும்
ஓர் குறிக்கோள்
இந்த இரவை
வெதுவெதுப்பான
முத்தத்தோடு கடந்து விடுவதென....  

-SunMuga-
20-12-2015 19.45 PM

2015 கவிதைகள் 1921 to 1930

காதல் பாட வேண்டிய
கண்களில்
கவிதை மட்டுமே
வாடிக் கொண்டு இருக்கிறது..  1921

கனவை சுமந்த இரவோ
இன்னும் ஒரு படி
மேலே போய்
உன் இதழை சுமந்து
அழைகிறதே அன்பே!   1922

உன்னோடு
உண்டு கொள்ள
உணவாய் உருவாக்கி
வைக்கிறேன்
ஒவ்வொரு கவிதையையும்..  1923

என்னிடமிருந்து
உன் இதழை காக்கும்
கைகளுக்கு
என் இதழே பரிசு...    1924

கோடுகள் இல்லா
ஒவியம் போலவும்
எழுத்துக்கள் இல்லா
கவிதை போலவும்
நீ இல்லாமல்
என் வாழ்க்கை இருக்கிறது... 1925

தொட்டுக் கொள்ள முடியாத
நிலவாய் நீ இருந்தும்
என்னை தொடந்து வந்து
ஒளிர்கிறாய் வாழ்க்கை
முழுவதும்... 1926

எல்லை இல்லா
எல்லா கவிதைகளும்
காற்றில் பறக்கட்டும்
என்னவளின் கண்களை நிரப்பட்டும்
புதுக்கனவுகளை உருவாக்கட்டும்....      1927

வண்ண மயிலாக
ஆடி வரும் கவிதை எல்லாம்
உன்னையே
தேடி வரும்
உன் இதழையே
நாடி வரும்....       1928

தோகையாக கனவை
விரித்து ஆடும்
வண்ண மயிலோ நீ!!   1929

கனவை சுமந்து
காற்றில் பறக்கும்
பட்டம்  காதல்
காற்றாக வாழ்க்கை
நம் திசை மாற்றும் போதும்.. 1930

December 18, 2015

2015 கவிதைகள் 1911 to 1920

எல்லாமே கனவில்
வாய்க்கும் போது
நிஜத்தில்
அது வியப்பாக தெரியவில்லை
வியப்புகளை
எளிதில் கையாள
பைத்தியங்களால் மட்டுமே
முடியும் போல .....      1911

இருட்டி விடும்
காலம் வரை
இல்லாமல் இருக்கிறது
இந்த உலகம்
ஏன் தனிமை
தேடிக் கொள்ளும் இரவு
மட்டுமே
இன்னும் இன்பமாக
இருக்கிறது
நீ இல்லாமல் இருந்தும்...   1912

நான் இறந்தாலும்
இருக்கிறது
உன்னோடு வாழ்ந்து கொள்ள
நம் பிள்ளைகள்
பிள்ளைகளின்
நிழல்களாக
ஒவ்வொரு கவிதைகளும்...  1913

ஏன்?
இந்த பிரிவு என்ற
கேள்வியை
இரவிடம் கேட்டேன்
இரவோ!
என்னையே உற்றுப் பார்க்கிறது
ஒரு பைத்தியத்தை
பார்ப்பதை போல..    1914

உன்னோடு உறவாடிக் கொள்ள
உயிர்கள் இருக்கிறது
அவ்வுயிரின் வழியே
என் அன்பும் கலந்திருக்கிறது..  1915

காலம் மறைத்த
சூரியன் நீ
காதலின் நிழல்
விழுந்த
நிலவு நான்
நீயும் நானும்
வானத்திலே வசிப்போம்
காலத்தைப் பற்றி
கவலை கொள்ளாமல்..  1916

நிலையற்ற வாழ்க்கை
என்ற போதும்
கவலைகளே நிறைந்து
இருக்கிறது
உறக்கங்களை கடந்து
உறவுகளை
கண்களில் நுழைத்துக்
கொண்டு....       1917

துவங்கிக் கொண்ட
முத்தத்தின்
தொடர்ச்சியாக
முத்தமே நீளட்டும்
முடிவில்
முத்தத்திலே அதன்
நினைவும்
கலக்கட்டும்....   1918

உன் முத்தம் பொழிய
ஒரு கவிதை
எழுதிக் கொண்டு இருந்தேன்
எழுத்திலும்
எழுத்தின் வார்த்தைகளிலும்
உன் முத்தங்களின்
மெளனங்களை
அர்த்தமாக்கிக் கொண்டேன்
அர்த்தங்களை கடந்து
எழுத்து இன்னும்
நீண்டு கொண்டே இருக்கிறது
உன் முத்தம் போல...     1919

பொழியும் மழையெல்லாம்
மண்ணை முத்தமிடுகிறது
என்னை எப்போது
என் மழை முத்தமிடும்?    1920

2015 கவிதைகள் 1901 to 1910

எங்கும் நிறைந்திருக்கும்
உன் நினைவின் வழி
நிம்மதியை
தேடிக் கொண்டு இருக்கிறது
என் மனம்.....           1901

ஆவலாக
நீ கேட்கும் கவிதையொன்றில்
நம் காதலின்
அவதிகள் தான்
நிறைந்திருக்கும்....    1902

உன் காதலை
நேசித்துக் கொண்டு
உன்னையே சுவாசித்துக் கொண்டு
வாழும்
என் ஜீவனுள்
நீயே கரைய வேண்டும்
நல்ல கவிதையாக....     1903

பேசிக் கொண்ட வேளையில்
வேதனைகளை மறந்தோம்
மறதியில்
பல நினைவுகளை துறந்தோம்
நினைவுகளை
துறந்த போதும்
கனவுகளை மட்டும்
மறக்காமல்
வளர்த்துக் கொண்டோம்....   1904

நீர் தளும்ப
எழுதிய வார்த்தைகள் எல்லாம்
இறந்த காலத்தின்
இறுதி காலம்
ஆனால்
இன்னும் இருக்கிறதே
எதிர்காலம்  என்ற ஒன்று!     1905

கனவுகள்
வெளிச்சத்தில் இருக்கும்
போது கூட
வாழ்க்கை இருட்டியே
இருக்கிறது
நம் இருவருக்கும்....   1906

நிசப்தத்தில்
நிறம் மாறும்
கனவுகள் எல்லாம்
கண்களின் வழியே
காதலாய் உருமாறுகிறது..  1907

எல்லாமே
அழகாய் தான் இருக்கிறது
அழுகையை மீறி
நம் குழந்தைகளின்
சிரிப்பை
ரசிக்கும் போது...        1908

வெறுமை நிரப்பும்
இரவில் கூட
உன்னைப் பற்றி
மிகப் பொறுமையாய்
கவிதை எழுதிக் கொள்ளும்
மனதை எண்ணி
இரவு சிரிக்கிறது
இதழோ அழுது கொள்கிறது..  1909

உயிரற்ற கனவுகளுக்கும்
உயிர் கொடுப்பது
உன் இதழ் மட்டுமோ
என் உயிரே...        1910

2015 கவிதைகள் 1891 to 1900

அம்மா கேட்கும்
போது கூட
மருதாணியை தவிர்த்தேன்
இரவில்
நான் இன்றி
நீ தவிப்பாய் என்று....     1891

நான் விரும்பும் பூவும் நீ
பூவின் வாசம் நீ
வாசத்தின் நேசம் நீ
நேசத்தின் உயிரும் நீ
என் உயிரின் உடலும் நீ
உடலின் மொழியும் நீ
அம் மொழியின்
கவிதை நீயே......     1892

காதல் பெருகி
கண்ணீரை தாங்கி நிற்கும்
கண்களின் காலத்தில்
காதல் நீராய்
உருகும் உயிரில்
கலந்து கன்னத்தில்....    1893

நெஞ்சை நினைத்து
நீர் இல்லாமல்
வாடும் புஞ்சை போல
நீ இல்லாமல்
காதலும் வாடும்
உன்னையே தேடும்...     1894

காதலின் சுடர் மிகுந்த
இரவில்
காமம் மெழுகுவர்த்தியாய்
உருக வேண்டும்.....      1895

இந்த உலகம்
இறப்பதற்கு முன்
உன் இதழை
நான் அடைய வேண்டும்
உன் இதழை
அடைவதற்கு முன்
உன் இதயத்தில்
என் இதழை வைக்க வேண்டும்...  1896

பெருகும் இருள்
ஒரு கடலை போல
ஒரே ஒரு அலையாக
மீண்டும் மீண்டும்
என்னை மோதுகிறது
காற்றில் மெல்ல
மெல்ல முத்தமும் இடுகிறது.. 1897

ரக ரகமாய்
ரகசியம் நிறைந்து
இருக்கிறது
இந்த உலகத்தில்
காதல் மட்டுமே ரகசியமாய்
இருக்கிறது
நம் உலகத்தில்....   1898

வலியால் விழிகள்
விழித்துக் கொண்டு இருக்கிறதா?
இல்லை
விழித்துக் கொண்டு
இருப்பதால்
வலிகள் தெரிகிறதா
இந்த இரவில் .......   1899

பகல் மட்டும் இல்லை
என்றால்
நம் இதழ்கள் இரண்டும்
இணைந்தே
இருந்திருக்கும்
இரவுகள் அனைத்திலும்..   1900

2015 கவிதைகள் 1881 to 1890

வழியும் காமத்தில்
நெகிழும் காலம்
உன் அன்பின் காதல்
கண்ணே!
நீயே எனக்கு இரவு
இரவிலே நித்தம்
நீ தரும் உறவே உயிர்...  1881

கவர்ச்சி மிகுந்த
இரவில் தான்
கவிழும்
என் கவலைகள்
உந்தன் கலையால்....      1882

வருந்தங்களை கடந்து
வா! அன்பே பயணிப்போம்
வசந்த காலம் நோக்கி
இருக்கும் காலம் பெருக்கி
பெருமை கொள்வோம்
இதழையும்
இணைத்துக் கொள்வோம்..  1883

உன் அழகில்
மயங்கி விழும்
கவிதையில்
மல்லியின் வாசம் வீசும்
உன் புன்னகையை உணர்ந்து..  1884

உறவு கொண்டு
உறங்கும் இரவில்
கிறங்கி விழும்
நிலவு இருளாய்
இன்பம் கொண்டு . ...  1885

எவ்வாறு கடப்பது
என்ற
குழப்பத்தில்
குறைந்து விடுகிறது
நம் ஆயுள் காலம்.....    1886

மென்மையான இரவில்
என் முகமெல்லாம்
உன் கூந்தலில் பதிய
விட்டபடியே விடிய
வேண்டும் அந்த இரவு...  1887

இரவின் எல்லைகளை
கடந்து எடுத்துச்
சென்று கொண்டு இருக்கிறேன்
உன் அன்பின்
முத்தங்களை....    1888

குழப்பம் மிகுந்த
இரவில் கூட
குவியும் உன் முத்தத்தை
என் உடலெங்கும் தேக்கி
வைக்கிறேன்
எந்தவொரு குழப்பமும்
இல்லாமல்....   1889

காலம் என்ற கடிகாரத்தில்
காதல் என்ற முள்
சுற்றும் போது
கண்ணீர் மட்டுமே
நொடிகளாக கழிகிறது
ஒவ்வொரு நாளும்...     1890

2015 கவிதைகள் 1871 to 1880

பேச்சை சுருக்கி
மூச்சை இறுக்கி
முடியும் முத்தத்தில்
முடியாதோ
இந்த வாழ்க்கை....      1871

கரையேறும் கனவில்
எல்லாம்
காதலின் மீன்கள்
துள்ளிக் கொண்டு தான்
இருக்கிறது
பிரிவின் சூடு
தாங்க முடியாமல்...    1872

விடுமுறை எல்லாம்
விழாக் காலம்
விதியானது
நம்மை இணைத்திருந்தால்...  1873

முல்லை மல்லி
காத்திருக்கும் இரவெல்லாம்
இன்பமே
பூத்திருக்கும்
புண்ணியம் செய்த
கண்களில்
பூமணமே நிறைந்திருக்கும்...  1874

பொறுமையாய்
நாம் இருந்தால்
வறுமை
எப்பொழுது தான் தீரும்?
பெருமையாய்
நாமும் நகர்வோம்
ஒரு புதிய கனவுக்குள்...  1875

அலுவலக வேலை என்று
கிளம்பி விட மனமில்லை
உன் சேலை முந்தானையால்
நீ இட்ட முடுச்சை
பிரித்துக் கொண்டு...  1876

நரம்புகள் அறுக்கும் போது
நான் கேட்கும்
ரத்தம் வடிய வேண்டும்
நித்தம் உன்னை
நினைத்து பெருகிய
ரத்தங்களை தவிர..     1877

நினைவில் பாதையில்
நீ இருந்தும்
நில்லாமல் பொழிகிறது
மழை
கண்களின் வழியே!!     1878

கருவிழியில்
என்னைக் காத்து
காத்திருக்கும்
கருவிழிக்கு
காதலே பரிசு
அதன்
காலமும் பெருசு...     1879

பிழையுண்ட காலத்தில்
பிழைப்பதற்கே
வழி இல்லாத போதும்
வளைப்பதற்கு
உன் இடை இருக்கிறது
என் கனவில்.....     1880

2015 கவிதைகள் 1861 to 1870

உறங்காத உள்ளத்தில்
உதவாத
கனவென்று ஒன்று உண்டோ?
இந்த காதல் உலகத்தில்..   1861

முத்தமிட்டு முடியும்
கனவொன்றில்
தவழும் குழந்தைகளாய்
கற்பனைகள்
ஒவ்வொரு நாளும்
வளரும்
நம் கண்களின் எதிரே!!    1862

நாளும்
நான் உண்ணும்
உணவை விட
கனவே அதிகம்
காதலின் பசியில்....    1863

சொல்ல துடித்த
கண்கள் எல்லாம்
சொல்லுகிறது
உன் பிரிவின் வேதனையை
காதலை கண்டு
நான் வடித்த கண்ணீரை
சொல்லாய் கொண்டு...   1864

சதி செய்து
விதி செய்யும்
சேட்டை எல்லாம்
சேராமல் இருக்கிறது
கனவுகளில் மட்டும்...   1865

இப்பூமியும் அழகு
இப்பூமியில்
இப்பூமகள் மட்டுமே
அழகு
இந்த இரவில்.....     1866

அன்புக்கு அன்பு
இன்பத்துக்கு இன்பம்
இதழுக்கு இதழ்
என்று
இதமான வாழ்க்கை
எந்நாளும்
உன்னோடு மட்டுமே....  1867

பூமழை பொழியும்
புத்தகம் முழுவதும்
பூவை பற்றிய
ஒரே ஒரு கவிதையில்...  1868

பனி சேர்க்கும்
குளிர்ச்சி எல்லாம்
இதழ் சேர்க்கும்
இந்த இரவில். ..    1869

நீ கூட்டும் அழகில்
வாட்டும் வறுமை
வயது இருந்தும்
முதுமையோ
கண்களுக்கு....    1870