December 14, 2015

2015 கவிதைகள் 1761 to 1770

உடையுடன் உள் நுழைந்து
நடையில் காமம் கலந்து
நள்ளிரவில் காதலை கலைத்து
மங்கை அவள்
என் மடியில் சாய்ந்ததோ
அந்த இரவு!
முதலிரவு!          1761

எனக்காய்
நீ அழுதால்
உனக்காய்
நான் ஒரு கவிதை வடிப்பேன்
கண்ணீராக!         1762

தேவனை
கண்ட மகிமை
ஒரு கிறிஸ்துவனுக்கு தெரியும்
தேவதை கண்ட
பெருமை
இந்த கிறுக்கனுக்கு
மட்டுமே தெரியும்!!       1763

என் வாசகம்
அனைத்திலும்
உன் வேர்வையின் வாசம்
மெல்ல மலரும்
ஒரு பூவை விட...      1764

உன் மார்புக்
கடலில் மூழ்கி
முத்து எடுக்கலாமா?
முத்தத்தின் வழியே!!     1765

திறந்த சிப்பிக்குள்
மழைத்துளி இருப்பதை போல
தான்
உன் மார்புக் குழியில்
என்
எச்சில் துளி!!             1766

விம்மித் துடிக்கும்
மார்பில்
எழுதிய கவிதையில்
காதலே அதிகம்
கலந்திருக்கும்
ஆடைகள் கலைத்த போதும்..  1767

விம்மிப் பெருகும்
மார்புகள் தேடும்
உன் முகத்தையும்
மென்மையான
உன் முத்தத்தையும்...    1768

சுவை மிகுந்த
பாலைப் பருகி
காதலின் அவை
நிரம்ப
எழுதிக் கழிப்பேன்
நல்ல கவிதையாக...   1769

தடுக்கும் உள்ளத்தில்
தடுமாறாத ஆசைகளில்
தழும்ப தழும்ப
எழுதி கழிக்கிறேன்
கனவை
வெறும் கவிதைகளாக!    1770

No comments:

Post a Comment