December 23, 2015

2015 கவிதைகள் 2001 to 2010

இருளில் கரையும்
இதழ் போதாதோ?
இவ்விரவை
நம் இருவரும் சேர்ந்து
கடப்பதற்கு.....       2001

மெல்ல வருவாய்!
மெதுவாய் தருவாய்!
மென்மையான இதழை
கொண்டு இன்பம்
எல்லாமே
நீயும் தருவாய்!
நானும் தருவேன்
இவ்விரவை..  2002

நிலையாய் நிலைக்கும்
உன் கனவின்
முத்தங்களின் நிஜம்
நிம்மதி பெருக
அதை நான்
கவிதையாக
வடித்த பின்பும்...  2003

உருகும் விழியில்
உருப்படியான
கனவுகள் இருப்பதால் தான்
உறக்கம் மறந்து
என் உயிரும்
உன்னோடு கலக்கிறது...  2004

கடலாய் விரிந்த
உன் காதலால்
கவிதை
காகிதத்தில்
அலையாய் பெருகுகிறது... 2005

அசைந்தாடி வரும்
மயிலின் வர்ணம்
குலைத்த இதழை கொண்டு
என் கனவை
விரிக்கும் தோகை நீ!     2006

பெண்மை கொண்டு
பெருமை கொண்டாய்
என்னை காதலாய் மாற்றி
கனவை உருமாற்றி
காலத்தையும் ஏமாற்றி....    2007

அமைதி நிரம்பிய
அவ்விரவில்
குளிராய்
என்னை அணைத்துக் கொண்டு
அள்ளிக் கொடுத்தாய்
உன் முத்தத்தை
வண்ண கனவாய்
என் இதழில்....       2008

மெளனம் குலைத்த
உன் விழிகளுக்கு
மெளனம் நிரம்பிய
முத்தம் மட்டுமே பரிசு
மெளனம் நிரப்பும் இரவில்... 2009

குளிர்விக்கும் இரவில்
குவித்திடும்
என் கண்கள்
உனக்காய் கவிதைகளை
கண்மணியின் கன்னத்திலும்
கண்மணியின் கழுத்திலும்
கண்மணியின் இதழிலும்...  2010

No comments:

Post a Comment