December 18, 2015

2015 கவிதைகள் 1841 to 1850

கற்றவை காதல்
என்று ஆன பின்பு
பெற்றவை அனைத்தும்
பெருந்துயரமானாலும்
அதை கரைப்பவை
அனைத்தும்
உன் அன்பு
முத்தங்கள் தானே
இந்த காலத்தில்....       1841

இனிமை வறுமை
இரண்டும் இருந்தும்
இணையா வார்த்தைகளாய்
போகிறது
இந்த கவிதை...    1842

பெருமை பொங்க
எழுதிய கவிதையெல்லாம்
காதலின் வறுமையை
தீர்க்கும்
வருந்தங்களோடு
வாடி
கரையோரம் நின்ற போதும்...  1843

நதி ஓடும்
கண்களில்
விதியின் தடம் தெரியும்
விடை தெரியா
வாழ்க்கையின் கையில்
நம் வாழ்க்கை
தவழும் போது. .      1844

நீ சொல்லிய துயரம்
அல்ல இது!
சொல்லாத காதலின்
துயரம்!               1845

மழலையின்
பூமணச் சிரிப்பில்
சிறப்பும் உண்டு
என் பூவே!
நீயும் சிரிக்க வேண்டும்
மழலையின்
மொழியைக் கொண்டு....    1846

செய்கை செய்யும்
சேட்டையை உணர்ந்து
சேமித்து வைத்த
அன்பை
அள்ளிக் கொடுத்து விடு
எனக்கும் சேர்த்து...     1847

என் பொறுமைக்கும்
ஒரு பெருமை உண்டு
மொத்தமாய்
அது
உன்னிடம் இருந்து
கிடைக்கும் போது .....    1848

உள்ளம் நினைத்தால்
உயர்ந்தோர்
நாம் தான்

மற்றவை எல்லாம்
ஏன்
வீனாய் நினைத்து.....     1849

நம் துயரம்
அனைத்தையும்
கேட்டறிந்த இரவு
இன்னும்
துக்கப்பட்டு கொண்டு
இருக்கிறது
தான் ஒரு இரவு
என்பதை மறந்து
அதிகாலையிலும்....       1850

No comments:

Post a Comment