நீ வேண்டிய
வரம் வேண்டும்
என்பதற்காகவே
தீபம் ஏற்றினேன்
நீ வேண்டும் வரமாக
நானே வேண்டும் என்றும்... 1651
நிலவாக தூரத்தில் இருந்து
உன்னை பார்த்து ரசிக்கிறது
என் இதயம்
அந்த தீபத்தின் ஒளியில்
காதலின் வழியே!! 1652
என்னை ரசிக்க
உன்னை அலங்கரித்துக்
கொள்கிறாய்
இந்த இரவின் ஒளியில்... 1653
இருள் படரும்
இடமெல்லாம்
என் உடலெங்கும்
உன் இதழ் படற
வேண்டும் அன்பே !! 1654
உன் நினைவுகளே
என் கவிதை விளக்கின்
எண்ணெய்கள்
ஒளியாய் என்றுமே
உன் முத்தம்.... 1655
இதோ
எரிந்து கொண்டு இருக்கிறது
உயிரில்
நீ ஏற்றி வைத்த
காதலின் தீபம்
கண்ணீரை ஒளியாய்
நிரப்பிக் கொண்டு
உன் பிரிவை
கரியாய் அப்பிக் கொண்டு
உன் விழியை
துணையாய்
எதிர்பார்த்து காத்துக்கொண்டு... 1656
என் அழகை
அடையாள படுத்திய
முத்தங்களை தான்
நானும்
அடைகாத்து வருகிறேன்
ஒவ்வொரு இரவிலும்... 1657
உன் இதழ் பட்டு
என் இதழை
குளிர்விப்பதற்காகவே
நானும்
வெப்பம் மூட்டுவேன்
மெழுகிற்கு..... 1658
நெருங்கும்
நம் நிழலை கண்டு
நித்தம்
சுருங்குகிறது
மெழுகு
மிகுந்த ஏக்கத்தில்.... 1659
ஒளியில்
நீ முத்தமிட்டால்
வழியும்
என் இரவு
இன்னும்
வலிமை மிகுந்ததாக.... 1660
No comments:
Post a Comment