December 9, 2015

2015 கவிதைகள் 1611 to 1620

இன்னும் ஒரு
இரவுக்காக
ஏங்கி கரைகிறது
இந்த நிலா!!          1611

மரணத்தை
எதிர் நோக்கிய
என் உயிர்
என் உடலில் இருந்தும்
இதயம்
உன் பார்வைகளையும்
உன் பாதங்களையும்
எதிர் நோக்கியே
துடிக்கிறது....      1612

அந்தி மழை
அலங்கரிக்கும்
உன் புன்னகை முகத்தை
குளிர் வாடையில்
வாசனைகளை
உன் மென் உடலில் பூசி
என்னை
எப்போதும்
எதிர்பார்த்து காத்திருக்கும்..  1613

களைப்பூட்டிய
காலமாய் ஆன போதும்
கண்கள்
இன்னும் வாழ்வை
தேடிக் கொண்டே
இருக்கிறது..       1614

என் தேவைக் கேற்ப
உன் ஞாபங்களை
கூட்டிக் கொள்கிறேன்
கண்ணீர்
இன்னும் அதிகம்
தேவைப்படும் போது..   1615

சுமை மிகுந்த
காலம் என்று
எப்படி எழுதுவது
என்று யோசித்துக்
கொண்டு இருக்கிறேன்
சுமைக்கான
இணையான சொல்
ஏதேனும் இருக்கிறதா என்று..1616

மல்லிகை மணமாய்
வீசும்
என் வசம் ஆன
உன் மூச்சுக்
காற்று....       1617

எத்தனை
எத்தனை வரிகளை
நீ உனதாக்கி
கொள்கிறாய் அன்பே!
அது தான்
உன் காதலின்  வெற்றியோ!!  1618

நீ பாடும் பாடலில்
மெளனம் வரியானால்
முத்தம் இசையாக
நிறைந்து இருக்கும்..   1619

பசியோடு அழும்
பச்சை குழந்தை போல தான்
உன்னோடு பேசிக்
கொள்ளாத நொடியில்
நானும் அழுதுவிடுகிறேன்...  1620

No comments:

Post a Comment