December 14, 2015

2015 கவிதைகள் 1731 to 1740

இடமறிந்து
நடந்து கொண்டாலும்
இதயம் இன்னும்
இறுக்கமாகவே துடிக்கிறது
ஒரு வேலை
இதயத்தின் துடிப்பு
வெறும் நடிப்பு தானோ?
இந்த உலகத்தின் முன்னால்!!   1731

முள்ளோடு பூக்கும்
பூவோ!
இந்த காதல்
வேதனையோடு
பூத்துச் சிரிக்கிறது...    1732

மன நடுக்கத்தில்
மாலை நேர பயணம்
மிகக் கொடியது
பாவம் செய்த
கண்களை தான்
என்ன செய்வது
என்று தெரியவில்லை....   1733

துயரம் நிறைந்த
மனதோடு
மணல் மேடுகளில்
அலையும் கண்களில்
காலம்
மீண்டும் சிரிக்கிறது
சிந்தித்தால்
கண்ணீர் மட்டுமே
சிந்திக் கழிக்கிறது...    1734

எனக்குள் பெருகி
மெல்லச் சிரிக்கிறது
கவிதையெல்லாம்
காதல் பதிப்பகத்தில்
அச்சில் ஏறும் முன்...     1735

அன்பின் வழியே
அகத்தை அடைந்து
பண்பின் வழியே
பாசம் எடுத்து
உறவின் வழியே
உயிரைக் கொடுத்து
என்னைக் காக்கும்
அழகு தெய்வம்
உன் காதல்....        1736

பேர் கொண்ட
ஊரெல்லாம்
எதிர் கொண்ட காட்சியெல்லாம்
எத்தனை எத்தனை
துயரம் அளிக்கிறது
நீ இல்லாத போது..    1737

குளிர் நிறைந்த இரவில்
குடிக்கும் தேநீரின் சுவை போல
உன் நினைவின் சுவை
என்னை வெப்பம் மூட்டுகிறது..  1738

குறையாத அழகில்
என்னை படகில் ஏற்றி
எப்போதும் துணையாய்
அனுப்புகிறாய் நிலவை
உன் முத்தமாக....     1739

பெண் என்றால்
என்னவென்று
இதழை கூட்டி கா(ஊ)ட்டுவாள்
இரவில்....        1740

No comments:

Post a Comment