December 9, 2015

2015 கவிதைகள் 1591 to 1600

சிறுக சிறுக
சேர்க்கும் கண்ணீரெல்லாம்
பெருக பெருக
வாழ்க்கை கசக்கிறது
இருந்தும்
வாழ்ந்து தானே
ஆக வேண்டும்...       1591

நம் சந்திப்பில்
புன்னகைப்பதற்காக
இப்பொழுது கண்ணீர்
சிந்திக் கழிக்கிறேன்
இந்த பிரிவின்
நிமிடங்களை....       1592

வியக்கும் படியான
கவிதைகளை விட
உன்னை மயக்கும் படியான
கவிதைகளை எழுதவே
மிகவும் ஆசைப்படுகிறேன்...  1593

காலம் இன்னும்
தக்க வைத்துக்கொண்டு
இருக்கிறது
நம் வேதனையின்
சோகத்தின் முடிவுகளை
வேறு வழியேதும்
இல்லாமல்..     1594

பெருமழையின் முடிவில்
வழிந்தோடும்
தண்ணீர் போல
நம் சோகமும்
வழிந்தோடினால்
நன்றாக தான் இருக்கும்
அல்லவா?     1595

உயிரில்
மிச்சமிருக்கும்
வார்த்தைகளை சேர்த்து
கவியாக்கினேன்
யாரோ வாசிக்கையில்
சிரிக்க கூடும்
நாமோ அழுக கூடும்...   1596

மெளனம் கலைத்துக்
கொள்ள
உன் முத்தம் தேவை
மெளனம் நிறைத்துக்
கொள்ள
உன் முத்தம்
இன்னும் தேவை..      1597

உன் ஞாபகம்
இருக்கும் வரை
அதாவது
என் உயிர்
என்னில் இருக்கும் வரை
உனக்காய்
ஒரு கவிதையேனும்
எழுதிக் கொண்டே இருப்பேன்
என் பார்வையை
நிலவில் பதிய விட்டப் படி...   1598

புரிந்து கொள்ள
முடியாத கவிதை அல்ல
நம் வாழ்க்கை
புரிந்தும்
வாசிக்க முடியாத
கவிதை அது...    1599

நம் கவிதையில்
இன்பம்
ஒரு வரியாய்
துன்பம்
இன்னொரு வரியாய்
நிறைந்திருக்கும்....   1600

No comments:

Post a Comment