உறங்காத உள்ளத்தில்
உதவாத
கனவென்று ஒன்று உண்டோ?
இந்த காதல் உலகத்தில்.. 1861
முத்தமிட்டு முடியும்
கனவொன்றில்
தவழும் குழந்தைகளாய்
கற்பனைகள்
ஒவ்வொரு நாளும்
வளரும்
நம் கண்களின் எதிரே!! 1862
நாளும்
நான் உண்ணும்
உணவை விட
கனவே அதிகம்
காதலின் பசியில்.... 1863
சொல்ல துடித்த
கண்கள் எல்லாம்
சொல்லுகிறது
உன் பிரிவின் வேதனையை
காதலை கண்டு
நான் வடித்த கண்ணீரை
சொல்லாய் கொண்டு... 1864
சதி செய்து
விதி செய்யும்
சேட்டை எல்லாம்
சேராமல் இருக்கிறது
கனவுகளில் மட்டும்... 1865
இப்பூமியும் அழகு
இப்பூமியில்
இப்பூமகள் மட்டுமே
அழகு
இந்த இரவில்..... 1866
அன்புக்கு அன்பு
இன்பத்துக்கு இன்பம்
இதழுக்கு இதழ்
என்று
இதமான வாழ்க்கை
எந்நாளும்
உன்னோடு மட்டுமே.... 1867
பூமழை பொழியும்
புத்தகம் முழுவதும்
பூவை பற்றிய
ஒரே ஒரு கவிதையில்... 1868
பனி சேர்க்கும்
குளிர்ச்சி எல்லாம்
இதழ் சேர்க்கும்
இந்த இரவில். .. 1869
நீ கூட்டும் அழகில்
வாட்டும் வறுமை
வயது இருந்தும்
முதுமையோ
கண்களுக்கு.... 1870
No comments:
Post a Comment