எல்லாமே கனவில்
வாய்க்கும் போது
நிஜத்தில்
அது வியப்பாக தெரியவில்லை
வியப்புகளை
எளிதில் கையாள
பைத்தியங்களால் மட்டுமே
முடியும் போல ..... 1911
இருட்டி விடும்
காலம் வரை
இல்லாமல் இருக்கிறது
இந்த உலகம்
ஏன் தனிமை
தேடிக் கொள்ளும் இரவு
மட்டுமே
இன்னும் இன்பமாக
இருக்கிறது
நீ இல்லாமல் இருந்தும்... 1912
நான் இறந்தாலும்
இருக்கிறது
உன்னோடு வாழ்ந்து கொள்ள
நம் பிள்ளைகள்
பிள்ளைகளின்
நிழல்களாக
ஒவ்வொரு கவிதைகளும்... 1913
ஏன்?
இந்த பிரிவு என்ற
கேள்வியை
இரவிடம் கேட்டேன்
இரவோ!
என்னையே உற்றுப் பார்க்கிறது
ஒரு பைத்தியத்தை
பார்ப்பதை போல.. 1914
உன்னோடு உறவாடிக் கொள்ள
உயிர்கள் இருக்கிறது
அவ்வுயிரின் வழியே
என் அன்பும் கலந்திருக்கிறது.. 1915
காலம் மறைத்த
சூரியன் நீ
காதலின் நிழல்
விழுந்த
நிலவு நான்
நீயும் நானும்
வானத்திலே வசிப்போம்
காலத்தைப் பற்றி
கவலை கொள்ளாமல்.. 1916
நிலையற்ற வாழ்க்கை
என்ற போதும்
கவலைகளே நிறைந்து
இருக்கிறது
உறக்கங்களை கடந்து
உறவுகளை
கண்களில் நுழைத்துக்
கொண்டு.... 1917
துவங்கிக் கொண்ட
முத்தத்தின்
தொடர்ச்சியாக
முத்தமே நீளட்டும்
முடிவில்
முத்தத்திலே அதன்
நினைவும்
கலக்கட்டும்.... 1918
உன் முத்தம் பொழிய
ஒரு கவிதை
எழுதிக் கொண்டு இருந்தேன்
எழுத்திலும்
எழுத்தின் வார்த்தைகளிலும்
உன் முத்தங்களின்
மெளனங்களை
அர்த்தமாக்கிக் கொண்டேன்
அர்த்தங்களை கடந்து
எழுத்து இன்னும்
நீண்டு கொண்டே இருக்கிறது
உன் முத்தம் போல... 1919
பொழியும் மழையெல்லாம்
மண்ணை முத்தமிடுகிறது
என்னை எப்போது
என் மழை முத்தமிடும்? 1920
No comments:
Post a Comment