December 9, 2015

2015 கவிதைகள் 1661 to 1670

என்னோடுஎப்பொழுதும்
பயணம் செய்கிறது
உன்னைப் பற்றிய
கவிதைகளும்
உன்னைப் பற்றிய
கனவுகளும்
உனக்கு கொடுக்க வேண்டிய
அன்பு முத்தங்களும்...     1661

ஏங்கி அழும்
எல்லா கவிதைகளுமே
ஏணிப் படிகள் தான்
வாழ்க்கையின்
உயரத்தை ஏறிக் கடப்பதற்கு... 1662

சொல்லிய சொல்
எல்லாம் செல்லத்தின்
செவியை நிரப்பட்டும்
எழுதிய வார்த்தையெல்லாம்
எழில் நிறைந்த
அவ்விதழை நிரப்பட்டும்...  1663

தேடிய வார்த்தையெல்லாம்
தேவதைக்கு படையல்
வைத்தேன்
தேன் நிறைந்த
சுவை கலந்த
இனிய கவிதையாக்கி...    1664

உன்னை எண்ணிய
பொழுதெல்லாம்
போகும் காலத்தின்
மீதான கோபங்கள்
வந்து போகும்
உன் பிரிவை நினைத்து
என் மீதான
உன் பரிவை நினைத்து...    1665

சிந்தனை சிறகில்
சீர் சீராய்
நானும் வடித்தேன்
வரிகளை
உன்னைச் சேரா
நொடிகளில் பெருகும்
கண்ணீரை போல....       1666

உன் பெண்மையில்
பெருகும்
உன் பருவத்தின்
உருவங்கள்
என் உள்ளம்
களைக்கச் செய்யும்....    1667

பசி தீர்க்கும்
இரவெல்லாம்
இன்னொரு துயரம்
கொடுக்கும்
இன்னொரு இரவில்...   1668

அன்பு காட்டும்
அன்னையை விட
இன்பம் கூட்டுகிறது
உன் கவிதைகள்
என் அன்பே!!          1669

கலைந்த கனவுகளுக்குள்ளும்
கண்ணீரின் ஈரம்
இருக்கும்
உயிரின் ஈரம்
இந்த உலகில்
இருக்கும் வரை....     1670

No comments:

Post a Comment