ஈரம் படர்ந்த
இரவெல்லாம்
உன் இமையின்
ஈர்ப்பு விசையால்
இன்னும் கொஞ்சம்
ஈரமாக்கு
என் இதழை... 1541
பதற்றம் நிறைந்த
இரவெல்லாம்
உன் மீது
இன்னும் அதிகமாகிறது
பற்று... 1542
பாதி உறக்கத்தில் கூட
பாதை மறந்த
ஒரு கனவை போல
என் கண்கள்
உன்னையே தேடுகிறது.. 1543
இரவெல்லாம்
உன்னை நினைத்து
நினைவின் வழியே
இரவை கடக்கிறேன்
இதமாக தான்
இருக்கிறது அதுவும்.. 1544
எவ்வளவோ
நேரம் இருக்கிறது
இந்த வாழ்க்கையில்
இருந்தும்
உன்னைப் பார்க்கும்
நேரம் மட்டும்
இன்னும் வாய்க்கவில்லை.. 1545
மாற வேண்டிய
வாழ்க்கை
மாறாமல்
அப்படியே இருக்கிறது
காதலோடு சேர்த்து.. 1546
இனி என்ன வருத்தம்?
காதல் இருக்கும் போது
கடமைகளில் பயணிக்கும் போது
இருந்தும்
இருக்கத் தான் செய்கிறது
உன் பிரிவின் வருத்தம்... 1547
முன் நாளில்
உன்னை தேடி நின்ற போதும்
வாடி நின்றதில்லை
இந்நாளில்
வாடி நின்ற போதெல்லாம்
உன்னை
தேடி நிற்கிறது மனது... 1548
என் இசையின் குறிப்பில்
வடியும்
கண்ணீர் தான்
உன் காதல் கவிதைகள்... 1549
நீ தீண்டிய
விரலுக்குள்ளும்
எத்தனை கண்ணீர்
கவிதையாக உதிர்கிறது
உன் பிரிவை நினைத்து... 1550
No comments:
Post a Comment