வழியும் காமத்தில்
நெகிழும் காலம்
உன் அன்பின் காதல்
கண்ணே!
நீயே எனக்கு இரவு
இரவிலே நித்தம்
நீ தரும் உறவே உயிர்... 1881
கவர்ச்சி மிகுந்த
இரவில் தான்
கவிழும்
என் கவலைகள்
உந்தன் கலையால்.... 1882
வருந்தங்களை கடந்து
வா! அன்பே பயணிப்போம்
வசந்த காலம் நோக்கி
இருக்கும் காலம் பெருக்கி
பெருமை கொள்வோம்
இதழையும்
இணைத்துக் கொள்வோம்.. 1883
உன் அழகில்
மயங்கி விழும்
கவிதையில்
மல்லியின் வாசம் வீசும்
உன் புன்னகையை உணர்ந்து.. 1884
உறவு கொண்டு
உறங்கும் இரவில்
கிறங்கி விழும்
நிலவு இருளாய்
இன்பம் கொண்டு . ... 1885
எவ்வாறு கடப்பது
என்ற
குழப்பத்தில்
குறைந்து விடுகிறது
நம் ஆயுள் காலம்..... 1886
மென்மையான இரவில்
என் முகமெல்லாம்
உன் கூந்தலில் பதிய
விட்டபடியே விடிய
வேண்டும் அந்த இரவு... 1887
இரவின் எல்லைகளை
கடந்து எடுத்துச்
சென்று கொண்டு இருக்கிறேன்
உன் அன்பின்
முத்தங்களை.... 1888
குழப்பம் மிகுந்த
இரவில் கூட
குவியும் உன் முத்தத்தை
என் உடலெங்கும் தேக்கி
வைக்கிறேன்
எந்தவொரு குழப்பமும்
இல்லாமல்.... 1889
காலம் என்ற கடிகாரத்தில்
காதல் என்ற முள்
சுற்றும் போது
கண்ணீர் மட்டுமே
நொடிகளாக கழிகிறது
ஒவ்வொரு நாளும்... 1890
No comments:
Post a Comment