December 14, 2015

2015 கவிதைகள் 1781 to 1790

பசியை நினைத்து
அப்படியொரு பயம்
உணவுக்கான பசி அல்ல
இது
உனக்கான ஒரு பசி....      1781

எல்லாமே
குளிர்ந்து விட்ட
ஒரு இரவில்
வெப்பம் மிகுந்ததாகவே
இருக்கிறது
உன் இதழ்...       1782

மெல்லிய உடையில்
உடையும்
ஒரு இரவு
வெட்கம் உடையான பிறகு..   1783

இரவின் சத்தம்
மட்டுமே
இன்னிசை அளிக்கிறது
உன் இதழின் வழி...    1784

நிலவை கண்டு
நிலையான சந்தோசம்
நிம்மதியாய்
உன் முகத்தை
பார்த்த பிறகு
ஏற்படும் கனவில் தான்..  1785

மறுக்கப் பட்ட இரவில்
மறைவதை தவிர
வேறு வழி இல்லை
அந்த கொடிய இருளில்...  1786

விரும்பிய உணர்வு
உணவாகும் போது
பசி இன்னும்
அதிகமாகவே
உணர வைத்து விடுகிறது
இந்த இரவு...           1787

ஏராளமான கனவுகள்
இருந்தும்
தாரளமான காதல்
இருந்தும்
தாமதமாய் காலம்
இருப்பதால்
என்ன செய்ய முடியும்
தாமத காதலை
ஏராளமான கனவை கொண்டு
தாரளமாய் வாழலாம்
அவ்வளவு தான்!!      1788

கருணை மிகுந்த
கடவுள் தான் போல
உன் காதல்
கனவுகளை
வாரி வழங்குவதில்...  1789

காலம் உடைத்த
காதலின் பிம்பத்தைக் கொண்டு
வாழ்கிறது
வெறும் கனவுகள்
நிறைத்த
காதல் பிம்பம்....       1790

No comments:

Post a Comment