காதல் கரைந்து கொண்டே
இருக்கிறது
இருளாய்,
காற்றாய்,
கவிதையாய்
இந்த இரவில்..... 1791
உன்னை எதிர்பார்த்தே
என் இரவுகள்
மெல்ல நகர்கிறது
கனவுகள் இருந்தும்
கைகள் சேர மட்டும்
ஏனோ மறுக்கிறது... 1792
மனம் இருந்தும்
காதலின் மணம் இருந்தும்
மறுக்கும் காலத்தை தான்
வெறுக்கிறது மனம்.. 1793
குணம் நிறைந்த
பெண்ணாம் நான்!
என் மனமே
நீ அங்கு இருக்கும் போது
என் குணத்தை பற்றி
நான் என்ன யோசிக்க... 1794
கொடுப்பதற்கும்
மனம் வேண்டுமாம்
நான் கொடுப்பதற்கு
முதலில்
நீ அல்லவா! வேண்டும்.. 1795
இந்த பறவை
பறப்பதற்கு
சிறகுகளை விட
உன் இதழ்களே
அதிகம் தேவை... 1796
இந்த இரவை
முழுவதுமாக
புரிந்து கொள்ள
உன் இதழ் தேவை! 1797
என் மீதே
எனக்கே நம்பிக்கை
அற்ற போது
நான் எப்படி
உறுதியாக
வெளிப்படுத்த முடியும்
கனவுலக வாழ்க்கை பற்றி.. 1798
பற்றிக் கொள்ள
பிடி இல்லாத கிணறு போன்றது
இந்த காதல்
நம் அழுகை
நமக்கு மட்டுமே
எதிரொலிக்கிறது.... 1799
வருத்தம் கொடுத்து
விட்டதாக மனம் எண்ணினால்
நான் எந்தவொரு
இனம் என்று
மனம் எண்ண
ஆரம்பித்து விடுகிறது.... 1800
No comments:
Post a Comment