இருளாய் போன
காதலில்
உன் விழியின் அருளால்
ஒளி கொடுக்கிறது
உன் இதயம்
என் அன்பே!! 1631
எண்ணெய் ஊற்றி
தீபம் ஏற்றுகிறாய்
என்னை உன்னுள்
ஊற்றி
உன்னை குளிர்விக்கிறாய்!! 1632
ஏழு விளக்குகள்
கொண்டு
நீ தீபம் ஏற்றும் போது
என்னில் அடங்கா
கவிதைகள்
என்னுள் எரிகிறது.. 1633
காற்றில் அசைந்தாடும்
விளக்கின் சுடரைப் போல
என்னில்
அவ்வப்போது
உன் பிரிவின்
துயரமும் அசைந்தாடுகிறது.. 1634
நீளும் இரவில்
நின்று எரியும்
காதலின் தீபம் நீ!! 1635
உன்னைக் கொண்டு
உனக்கே ஒளிக் கொடுப்பேன்
விழியின் வழி
ஒரு தீபத்தின் மூலம்
இன்னொன்றை
பற்ற வைப்பது போல... 1636
எழுபது விளக்கை
கொண்டு
வீட்டை நீ அலங்கரித்தாலும்
நான்
அழகாய் ரசிப்பது
உன்னை மட்டுமே!!
உன் விழியை மட்டுமே!! 1637
தீப்பெட்டி உரசி
தீபம் ஏற்றினாலும்
அவ்வப்போது
என்னை நீ உரசி
அதன்
ஒளியை கூட்டுகிறாய்.. 1638
உன் இரு விழி
என்ற
தீபத்தின் ஒளியால்
இன்னும்
இரு குட்டி தீபம் ஏற்றலாம்
இவ்விரவின் வழி... 1639
கார்த்திகையில்
நீ ஏற்றும் தீபம்
மார்கழியில்
என்னை நிச்சயம்
குளிர்விக்கும்.... 1640
No comments:
Post a Comment