காலம் வடித்த
கண்ணீரெல்லாம்
கவிதையாய் ஆன பின்பு
காதல் இன்னும்
வளர்ந்து கொண்டே இருக்கிறது!! 1831
கவிதை நீ இருக்க
கவிஞன் அதை
நான் வடிக்க
ஏன் வேடிக்கை
பார்க்க வேண்டும்
இந்த இரவை!! 1832
துன்பங்களை கடந்து
துணிவுடன்
எழுதிய கவிதையெல்லாம்
உன் துணை நிற்கும்
கண்ணீரை தானே
வடித்துக் கொண்டு... 1833
எரியும் அடுப்பில்
வெப்பம் குறைந்தாலும்
நம் உடம்பின்
வெப்பம் குறையாது போல
இந்த மார்கழி காற்றில்... 1834
போர்வையை
நீ மூடிக் கொள்ளும் போது
என் வேதனையை
நானும்
இங்கு மூடிக் கொள்வேன்... 1835
இயற்கை மீது
இருக்கும் நம்பிக்கை
என் இதயத்திடமும்
இருக்கிறது
உன்னை நன்றாக
வாழ வைக்கும் என்று... 1836
நெஞ்சின் வேதனைகளை
காணும் போது
இப்பஞ்சின் பாவமெல்லாம்
இக்காற்றில் பறக்காதோ? 1837
இறைவனிடம் வேண்டினேன்
என் இதயம்
இனியாவது
நன்றாக
இருக்கட்டும் என்று
இரவெல்லாம் நடந்தேன்
என் நட்சத்திரம்
இனியாவது
நன்றாக மிளிரட்டும் என்று! 1838
நான் இருக்கும் வரை
துன்பம் என்றால்
நான் இல்லாமல்
போய் விட வேண்டும்
இக்கவிதையின் முடிவில்... 1839
கண்கள் நிறையும்
கண்ணீரில்
காகிதம் நிறையும்
கவிதையில்
காதல் நிறையாத போது... 1840
No comments:
Post a Comment