December 14, 2015

2015 கவிதைகள் 1801 to 1810

சந்தர்பங்களை
எதிர்பார்த்து காத்திருக்கவில்லை
சந்திப்புகளை மட்டுமே
எதிர்பார்க்கிறது
கண்கள்
ஒவ்வொரு கனவிலும்...   1801

விதைகளை பற்றி
யாருமே யோசிப்பது இல்லை
பூக்கள் பூத்த பிறகு...     1802

உள்ளம் நிறைய
உன் கவிதைகள்
இருக்கும் போது
பள்ளம் என்ன
பாதாளம் என்ன
இந்த வாழ்க்கையின்
பாதையில்
நான் பயணிக்கும் போது...   1803

வழியறியா
பாவையின் விழியில்
வழிவதோ கண்ணீர்
பாதங்களை மீறி
பாதைகளையும் மீறி
இவ்வாழ்க்கை பற்றி...    1804

உன்னை படைத்ததால்
உயர்ந்த தோர் தெய்வம்
உள்ளம் நிறைய
வணங்குகிறேன்
உனக்காய் பெண்ணே!!    1805

உன் உள்ளம்
நினைத்து சிரித்தேன்
ஊரை நினைத்து
இவ்வுலகை வெறுத்தேன்
உறங்கிய போதும்
கண்ணீரை வடித்தேன்
உறங்காத போது
உன் வரியை
எடுத்துப் படித்தேன்...   1806

அன்பினால்
அள்ளிக் கொடுத்த
இதயம் எல்லாம்
அரும்பும் காதல் பூ
மெல்ல மெல்ல
மலர்கிறது
உந்தன் நற்பண்பால்..   1807

என்னிடம் வந்து
ஏங்கித் தவிக்கும்
இதயத்திற்கு
என்ன கொடுக்க
முடியும்?
இதயமே காத்திருக்கிறது
அந்த ஒரு நொடிக்காக...   1808

எப்போதும்
உன்னை எண்ணும்
இரவு!
எப்பொழுது
உன்னை உண்ணும்?     1809

கிளர்ச்சி மிகுந்த
இரவில் கூட
காலத்தின் சூழ்ச்சியை
நினைத்தால்
கண்ணீர்
வெந்நீர் போல
காய்ச்சியே வடிகிறது!!   1810

No comments:

Post a Comment