துக்கமோ
ஏக்கமோ எல்லாம்
கலந்தே
இக்கவிதைகள் வாழ்ந்து
கொண்டு இருக்கிறது
வாழ்க்கையின் அர்த்தமாக
என்னோடு
நீ இல்லாத போதும்.. 1951
இக்கவிதைகள்
பக்கங்களை நிரப்பிக்
கொள்ளவில்லை
பக்குவமாக
உன் நினைவுகளை
மட்டுமே நிரப்பி கொள்கிறது.. 1952
உன் கருவிழிகளின்
புன்னகையை தாங்கி கொள்ள
நானும் பெண்ணாக
பிறக்க வேண்டும்
கருப்பையுடன்.... 1953
என்னிடம் அதிக
முத்தம் வாங்கியது
என்னவோ
உன் உடலில்
உன் கண்கள்
தான் போல... 1954
கடவுளிடம்
வேண்டிக் கொள்கிறேன்
காகிதத்தில்
எழுதும் போது கூட
என் காதல்
உன்னை உருக்கி
விட கூடாது என... 1955
உன் இடை நிரம்ப
எழுதும் என் விரல்
எதிர்வினையாய்
உன் இதழ் நிரப்பும்
என் இதழை.... 1956
பேசிப் பார்த்த விழியில்
காதலின் ஒளியை மீறி
காமத்தின் சுடர்
என்னை சுடுகிறதே
என் அன்பே! 1957
காலத்திலிருந்து
உன்னை என் காதலால்
மீட்டு
என் கண்களுக்குள்ளும்
என் கவிதைக்குள்ளும்
உன்னை வார்த்தைகளாய்
மாற்றி
நானும் வாழ வைப்பேன்... 1958
உயிர் கொண்ட
இந்த இரவில்
உயிரே என்னோடு
இல்லாத போது
எப்படி உறங்கும்
என் உயிர் நிம்மதியாய்.... 1959
இந்த இரவின்
இசைக் கோர்வையில்
என் இன்பமும்
கலந்திசைக்கும்
அது தானே
இரவின்
காதல் வார்த்தைகளை
தன்னோடு
இணைத்துக் கொண்டு... 1960
No comments:
Post a Comment