December 23, 2015

2015 கவிதைகள் 1991 to 2000

உண்மை புரிந்த
உள்ளம் மட்டும்
ஊமையாக நிற்கிறது
காலத்தின் முன்
காதலை வெள்ளம் போல
உள்ளத்தில்
தாங்கிக் கொண்டு...   1991

தாமதத்தால் வந்த
கொடுமை ஆயினும்
அதன்
தாகம் குறைய
தண்ணீராக
கண்ணீர் இருக்கிறது
கனவுகளை கடந்து...     1992

வாழ்க்கையின் முடிவை
வாழ்க்கை தீர்மானித்த போதும்
வாழ்க்கை இன்னும் இருக்கிறது
நம் காதலுக்கு...      1993

அகம் முழுதும்
நீ இருக்கும் போது
என் முகம் மலரும்
அன்பே!
உன் மல்லிகையின்
வாசம் சுமந்து...       1994

வாசம் வீசிய
இரவெல்லாம்
இனிய வாசம் வீச வைக்கும்
என் இதயத்தில்
இன்றே!
பிறந்து தவழ்திடும்
நம் முத்தத்தின்
குழந்தையை நினைத்து... 1995

விதியை உடைத்து
விரும்பிய படி
சிலைகளை செய்யும்
கலைகளை
கனவுகள் மட்டுமே
நமக்கு
வழங்கி இருக்கிறது...  1996

எல்லாமே
நினைவாய் போனாலும்
நிஜத்திலும்
கலந்திருக்கிறது
உன் முத்தம்
சத்தங்களை கடந்து
இந்நகரில்
நான் வாழும் போது...   1997

ஆகாயத்தில்
அலைமோதும் மேகத்துகளை
போல தான்
உன் நினைவால்
என் நிஜ வாழ்க்கை
அலை மோதி திரும்புகிறது
இப்பூமிக்கு..     1998

நீளும் இரவில்
உடை குறைத்த கனவில்
பெரும் படைகளாய்
விரியும் முத்தத்தின்
ஆயுதங்கள் என்னவோ
இதழ் தானோ?        1999

வா! அன்பே
இரவின் இசையில்
விடியலின் பாடலை
கேட்போம்
வரிகளாக
முத்தங்களை கோர்த்து...   2000

No comments:

Post a Comment