December 9, 2015

2015 கவிதைகள் 1571 to 1580

உன்னோடு
அமிழ்ந்த இரவெல்லாம்
அமுதமாக
உன் புன்னகையின்
நினைவுகள் மட்டுமே
என்னை குடிக்கிறது...     1571

குருதிகள் வடிந்த
இரவுகளில் கூட
அன்பே!
ஒரு குருட்டுத் தனமான
காதல் உன் மீது....         1572

எங்கே!
எப்படிப்பட்ட சூழ்நிலைகளில்
சூழ்ந்து இருந்தாலும்
என் இதயம்
உன்னையே சுற்றி
வருகிறது!!!           1573

மீன் வாழும்
நீரில் கலந்த
விஷம் போல தான்
உன் பிரிவு
இந்த காதல் குளத்தில்..  1574

பார்வைகள்
எதன் மீது  அமிழ்ந்திருந்தாலும்
அதன் அர்த்தங்கள்
உன் பிரிவு தான்...     1575

கடலே!
கரையோடு
முத்தமிட அலைமோத போது
என் காதலே!
நீ தான்
நான் அலைய மாட்டேனா?  1576

இரவு வீதியில்
தனியே
நடக்க தொடங்கிய போது
கொழுசின் ஒலியோடு
உன் நினைவுகள்
என்னோடு நடக்க
தொடங்கியது..          1577

தொலைவில் இருக்கும்
சந்தோசத்தை
என் அருகில் அழைத்தால்
உன் முத்தமே
நெருங்கி வருகிறது...   1578

உன் முத்தத்திற்காகவே
காத்திருந்தேன்
அந்த கனவில்
முழிப்பு வந்ததும்
உன் முத்தத்திற்காகவே
காத்திருந்தேன்
அக்கனவை மீறி...     1579

உன் உள்ளங்கையை
தொட்ட பின்
என் உதடு கூட
உறங்க மறுக்கிறது.....   1580

No comments:

Post a Comment