December 9, 2015

கனவு

கனவு கண்களுக்கு
மட்டுமே
சொந்தம்!!

உள்ளம் நிரம்பிய
கனவுகள்
உடலால் களையுமோ?

உள்ளம்
நீ என்றால்
உள்ளிருக்கும்
அன்பு முத்தங்களும்
உனக்கு தானே சொந்தம்!!

புதுப் பந்தம்
உருவான போதும்
பந்தி இடம் மாறிய போதும்
இலை எல்லாம்
உன் இதயம் தானே!!

இப்போது இருக்கும்
காலம்
இறப்பை நோக்கிய
காலம் அவ்வளவே!!

இரவுகள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு உறவுகள்
குறிப்பாய்
ஆண்களுக்கு
உறுப்புகள் உருகலாம்,
உள்ளம் ஏனோ
அப்பொழுது நிறையலாம்
அது தானே
உடலுறவின் நிதர்சனம்.,

அன்பு ஒன்றும்
ஆடை இல்லையே
அடுத்தவர்
விரும்பும் போது
களைத்துக் கொள்ள!!

உள்ளிருக்கும் பயம்
உனக்கும் இருக்கிறது
இருந்தும்
உள்ளம் ஏனோ
அதையே
எதிர்பார்த்து
கண்ணீர் விடுகிறது!!

எதிர் காலத்தை விட
எதிர் வரும் இரவு
தான்
இன்னும் இருளாகவே
இருக்கிறது
இதயம் முழுவதும்...

உன்னிடத்தை
நிரப்பிக் கொள்ள
வேறு ஒருத்தி இருக்கலாம்
இந்த இரவில்
ஆனால்
அவளால்
என் கனவை
மட்டும் நிரப்பி விட முடியாது..

பசி தீர்க்கும்
இரவெல்லாம்
இன்னொரு துயரம்
கொடுக்கும்
இன்னொரு இரவில்....

-SunMuga-
08-12-2015 22.00 PM

No comments:

Post a Comment