என்னை
எதிர் பார்த்தே
எழுத்துக்கள் கூட
தெரியவில்லையோ
உன் விழிகளுக்கு.... 1741
விதியை நினைத்தே
உன் விழியும்
மங்கி கலங்கி விட்டதோ!! 1742
தேதி பார்த்து
உன் செவி சாய
செம் மலர் போல
கனவை விரித்து
நானும்
காத்திருக்கிறேன்... 1743
மெல்ல உருகும்
பனியை போல
உன் உள்ளம்
மெருகு ஏற
உழைத்திடும்
என் உள்ளம்.... 1744
பல நேரங்களில்
உன்னைப் பற்றி
சிந்தித்து கொள்வதற்காகவே
புத்தகங்களை
விரித்து வைத்துக் கொள்வேன்
ஒவ்வொரு எழுத்தின் வழியே
உன்னை மட்டுமே
வாசித்துக் கொண்டு இருப்பேன்... 1745
இரவு நீளுவது போல
இதயம் நீண்டு கொண்டு
இருக்கிறது
உயிரின் துடிப்பை உணர்ந்து... 1746
இதயத்தை கசக்கிய
இரவாக இருந்த போதும்
இதமான
கண்ணீர் வடியும் போது
இன்னும் இதமாகவே
இருக்கிறது இரவு.. 1747
உன்னைத் தேடி
நடக்கும் கால்கள்
காலம் சென்ற பின்
என்ன நடை என்று
திரும்பி விடுகிறது
அறைக்கு... 1748
வலியின் நிமித்தமாகவே
நடக்க முற்படுகிறேன்
வலியை மீறி
உன் நினைவு
என்னோடு நடப்பதால்.. 1749
பிரிவை பற்றிய
பயம்
இருந்த போதும்
பிரியாமல் இருக்க
இதயம் இன்னும்
வலுவாக வேண்டும்
என்பதே
என் பிராத்தனை.... 1750
No comments:
Post a Comment