இந்த உலகின்
வெற்றிடத்தில் எல்லாம்
வேதனைகளை நிரப்புகிறேன்
யாரும் இல்லாத போது
கண்ணீரை சிந்திக்கொள்ள
மிக ஏதுவாக இருக்கும்
என்று.... 1531
தன் ஜோடிப் புறாவின்
முதிர்ந்த சிறகைப் பார்த்து
கண்ணீர் விடுகிறது
பெண் புறா!
அதைப் போல தான்
என்னிலிருந்து உதிர்ந்த
எழுத்தின் சிறகுகளை
பார்த்து
நீயும் கண்ணீர் விடுகிறாய்
பிரிவின் உணர்வை உணர்ந்து.. 1532
நித்தம் நித்தம்
இந்த பிரிவின் கால நீரில்
குளிக்கும் போது
கண்ணீர் மட்டுமே
வழிகிறது
பாதத்தின் வழியே!! 1533
எத்தனை இரவு
எத்தனை கண்ணீர்
அத்தனையும் கடந்து
இதோ!
காத்திருக்கிறது
உனக்காக ஓர் முத்தம்.. 1534
எத்தனை முறை
நினைத்துப் பார்த்தாலும்
காலத்தின் யுத்தங்களை
கடந்து
உன்னோடு இருந்த
நிமிடங்கள் தான்
அதிகம்
சந்தோசம் தந்தவை
பல அன்புகளை மீறி... 1535
இசையின் கவிதையில்
பசி என்பது
முதல் துயரமாம்
என்னைப் பொறுத்த வரை
நம் காதலின் பசி தான்
துயரங்களை
உண்டு கொண்டு இருக்கிறது.. 1536
மனம் எட்டாத
கனவுகளுக்கா
ஆசைப்படுகிறது
இல்லை
எட்டிய கனவுகளை
நினைத்து
ஏங்கிக் கொண்டு
இருக்கிறதா!
ஒன்றுமே புரியவில்லை... 1537
உன்னுடனான
கனவின் தீண்டலில்
தான்
இன்னும் உயிர் வாழ்கிறது
இந்த உயிரும்
அதன் காதலும்
அதன் காலமும்.... 1538
தனிமைக்காகவே
காத்திருக்கிறேன்
உனக்காக
ஒரு கவிதை
எழுதி வைத்துக் கொள்ள
அதை
தனிமையில்
உன்னோடு வாசித்துக் கொள்ள.. 1539
பெரு மழையின்
வாசம் வீசுகிறது
மல்லிகை மணக்க
நீ என்னை அணைக்க
துளிகள் இல்லாமல்
பெய்கிறது
ஒரு பெரு மழை
நம் வீட்டில்
துணிகள் இல்லாமலும்
நீ தேடும் குடையாக
என் இடையே
இருக்க வேண்டும்
இன்பம் மட்டுமே
இன்னும் பெருக வேண்டும்
பெரு வெள்ளமாக... 1540
No comments:
Post a Comment