இனிமை கலந்த
கவிதையெல்லாம்
உன் இதய நிரம்ப
வாசித்துக் கொள்
துயரம் படிந்த
வரிகளை எல்லாம்
துயரம் கடந்து
யாசித்துக் கொள்
என் அன்பே!! 1981
இப்பிறப்பின் பலனை
அடைந்து விட்டேன்
என்றே நினைக்கிறேன்
உன்னை பற்றி மட்டுமே
எழுதி வடித்த
இக்கண்ணீரின் முடிவில்... 1982
இது ஒரு இனிய
இரவு தான்
இன்றோடு பூர்த்தி அடைந்து
பெருகும்
இக்கவிதையின்
முதல் பாதி.. 1983
முடிவற்ற வாழ்க்கை
பயணத்தில்
இதுவும் ஒரு மைல் கல்
கல்லாகிய
நம் வாழ்க்கையை கடந்து.. 1984
பொதுவாய் எழுதுவதற் கென்று வரிகள் ஒன்றும்
என்னிடம் இல்லாமலே
போய்விட்டது
இக்கவிதையின் முடிவில்... 1985
இரவையும்
இன்னலையும்
நினைத்துப் பெருகிய
கவிதையெல்லாம்
உன் கண்ணீரின்
கால் தடம் பதிய
வைக்காமல் இல்லை... 1986
என்னை பிரிந்து
வாழும் கண்களுக்கு
என் இதயத்தின்
காணிக்கை
இக்கவிதைகள்.. 1987
எப்பொழுது நீ படித்தாலும்
இதில் இருப்பது
வார்த்தைகள் அல்ல
நாம் பிரிந்து
புரிந்து வாழும்
வாழ்க்கையின் ஒரு பகுதி... 1988
யாரைப் பற்றியும்
கவலை கொள்ளாத
இக்கவிதை
உன் கண்ணை நினைத்து
வருத்தப் படுகிறது
அதன் வரிகளும்
உன்னை காயப்படுத்தாமல்
இருக்க வேண்டிக் கொள்கிறது.. 1989
கண்களை மூடாமல்
கனவுகளை வளர்க்கிறது
என் காகிதம்
பெண்ணே!
உன்னை மட்டுமே
கவிதையாக்கி.... 1990
No comments:
Post a Comment