ஒரு இனிய இசையின்
தொடக்கம்
உன் பார்வை
அதன் உச்சம் தான்
உன் முத்தம்... 1521
ஒரு பெரு மழையின்
இசை தான்
என்னை நோக்கி
நீ ஓடி வரும் போது
எழும்
கொழுசின் ஒலி.... 1522
நில்லாது பெய்யும்
அந்தி நேர மழையை
என்னோடு நின்று
ரசித்திட நீ
இருக்கும் போது
என் ரசனைகள்
இன்னும் விரிகிறது... 1523
குடை பிடித்து
நீ நடந்து வரும்
அழகை பார்த்து
வானம் கூட
கண் சிமிட்டுகிறது
மின்னலின் வழியே!! 1524
மின்னலின் வெளிச்சத்தில்
கண்களை
நான் மூடினால்
உன் முத்தத்தின் நினைவே
என் கண்களில் நிறைகிறது.. 1525
நள்ளிரவில்
நான் பார்த்த
மழையெல்லாம்
பின் இரவில்
உன்னோடு பொழிந்தால்
என்ன?? 1526
கவலை தோய்ந்த
முகத்தோடு பெய்கிறது
இந்த மழை
ஒவ்வொரு துளியாய்
கரைகிறது
இந்த மண்ணில்
இந்த இரவில்
நீ இல்லாது போனதால்... 1527
இரு விழி கொண்ட
பெண்ணே!
உன் கனவின்
வானத்திற்கு தான்
எத்தனை கண்கள்
எத்தனை
எத்தனை
கண்ணீர் துளி!! 1528
உன் கைபிடித்து
நடக்கும் தெருவில்
எல்லாம்
மழைத்துளி சிதறும்
என் கனவின் வழி... 1529
பசியும் இருக்கிறது
உணவும் இருக்கிறது
உணர்வுகள் தான்
தடுக்கிறது
உலகை நினைத்து... 1530
No comments:
Post a Comment