பனி பொழியும்
இரவெல்லாம்
பாவையின் முகம்
நினைத்து
கண்ணீரே வழியும்
காலங்களையும்
கோலங்களையும்
களைத்து விட... 1811
உன் கேள்விக்கு
பதிலாய்
நானே கேள்வி ஆனேன்
ஏன்
என் வாழ்க்கையே
கேள்வியானதால்... 1812
உன்னை நினைத்து
வருந்த வில்லை
உன் காதலை
நினைத்து தான்
வருந்துகிறேன்
வார்த்தைகளாய்
நான் மாறி... 1813
மூச்சுக் காற்று
உன்னைத் தேடும் போது
பேச்சை மாற்றித் தானே
ஆக வேண்டும் .... 1814
நீ பாடும் பாடல்
எதிரொலிக்கிறது
நம் சிறு பறவையின் ஒலியில்... 1815
உன்னைக் கோப படுத்த
அவள் இருக்கிறாள்
சமாதானப் படுத்த
நான் உன் அருகில்
இருக்கும் போது.. 1816
என் நினைவில்
ஒழிந்து இருக்கும்
உன் ஒற்றை முத்தங்களை
நட்சத்திரமாய்
எண்ணி எண்ணி
நானும் ரசிப்பேன்
இந்த இரவின் வானை.. 1817
கண்கள் தீண்டிய போதும்
தீண்டாத வசந்தம்
"நம் காதல்" 1818
ஒற்றை நினைவின் வழி
ஓராயிரம் காலம்
கடந்து விட்டோம்
காதலின் துணைகொண்டு
துணிவுகள் அற்று
வாழவும் பழகி கொண்டோம்.. 1819
இது தான்
வாழ்க்கை என்றால்
கனவு இருக்கிறது
காலம் கழிக்க
ஏன்?
வெறுக்க வேண்டும்
இவ்வுலகத்தை..... 1820
No comments:
Post a Comment