December 18, 2015

2015 கவிதைகள் 1901 to 1910

எங்கும் நிறைந்திருக்கும்
உன் நினைவின் வழி
நிம்மதியை
தேடிக் கொண்டு இருக்கிறது
என் மனம்.....           1901

ஆவலாக
நீ கேட்கும் கவிதையொன்றில்
நம் காதலின்
அவதிகள் தான்
நிறைந்திருக்கும்....    1902

உன் காதலை
நேசித்துக் கொண்டு
உன்னையே சுவாசித்துக் கொண்டு
வாழும்
என் ஜீவனுள்
நீயே கரைய வேண்டும்
நல்ல கவிதையாக....     1903

பேசிக் கொண்ட வேளையில்
வேதனைகளை மறந்தோம்
மறதியில்
பல நினைவுகளை துறந்தோம்
நினைவுகளை
துறந்த போதும்
கனவுகளை மட்டும்
மறக்காமல்
வளர்த்துக் கொண்டோம்....   1904

நீர் தளும்ப
எழுதிய வார்த்தைகள் எல்லாம்
இறந்த காலத்தின்
இறுதி காலம்
ஆனால்
இன்னும் இருக்கிறதே
எதிர்காலம்  என்ற ஒன்று!     1905

கனவுகள்
வெளிச்சத்தில் இருக்கும்
போது கூட
வாழ்க்கை இருட்டியே
இருக்கிறது
நம் இருவருக்கும்....   1906

நிசப்தத்தில்
நிறம் மாறும்
கனவுகள் எல்லாம்
கண்களின் வழியே
காதலாய் உருமாறுகிறது..  1907

எல்லாமே
அழகாய் தான் இருக்கிறது
அழுகையை மீறி
நம் குழந்தைகளின்
சிரிப்பை
ரசிக்கும் போது...        1908

வெறுமை நிரப்பும்
இரவில் கூட
உன்னைப் பற்றி
மிகப் பொறுமையாய்
கவிதை எழுதிக் கொள்ளும்
மனதை எண்ணி
இரவு சிரிக்கிறது
இதழோ அழுது கொள்கிறது..  1909

உயிரற்ற கனவுகளுக்கும்
உயிர் கொடுப்பது
உன் இதழ் மட்டுமோ
என் உயிரே...        1910

No comments:

Post a Comment