December 21, 2015

2015 கவிதைகள் 1931 to 1940

கண்ணீர் ததும்ப
வேண்டிய இரவுகளில்
கவிதை ததும்பிக்
கொண்டு இருக்கிறது
கண்கள் முழுவதும்....     1931

உன் காதலின்
அத்தியாயம் வாசித்த பின்பு
மிகுந்த பக்தியாய்
நானும் வணங்குகிறேன்
உன் இதழை கடவுளாக்கி...  1932

எல்லாமே பழக்கப்பட்ட போதும்
இன்னும் பழகி கொள்ள
முடியவில்லை
உன் பிரிவில் உதிரும்
கண்ணீரை எப்படி
கட்டுப்படுத்திக் கொள்வதென்று....     1933

சோகம் நிரம்பிய
ஒவியத்தை போலவே
காட்சி அளிக்கிறது
என் கண்கள்
இக் கவிதையின் வழியே!   1934

உன் பிரிவில்
நிகழும் நிகழ்ச்சிக்கு எல்லாம்
நிதானமாக
ஒரு கண்ணீர் இருக்கிறது
நீ இன்றியும்
அது தானே வடிந்து கொள்ளும்..1935

மெளனம் நிறைந்த இரவு
ஒரு இறப்புக்கு சமம்
எத்தனை முறை தான்
இறப்பது மெளனமாக
இந்த இரவில்....     1936

நான் இறந்த பின்பு
உன் ஒற்றை
காதல் கவிதை போதும்
என் உடலை பற்ற வைக்க... 1937

அந்தரத்தில் அல்லாடும்
கனவை பற்றி
கவலை கொள்கிறது
இந்த கவிதை
இந்த இரவில்.....    1938

நாம் கடந்து வந்தது
வாழ்க்கை என்ற போதிலும்
வாழ பிடிக்கவில்லை
இனியும்
இப்போதும்
நாம் கடந்து கொண்டிருப்பது
வாழ்க்கை தான்.....     1939

விசித்திர கண்கள் உண்டோ
உன் கவிதைகளுக்கு
அது
என் கண்ணின் வழியே
என்னிலே கலந்து விடுகிறது..  1940

No comments:

Post a Comment