என் சிந்தை
செதுக்கிய கவி
அனைத்தும்
உன் சிற்றிடைக்கும்
உன் சிற்றிதழ்க்கும் அர்ப்பணம்.. 1771
உன் செவியோடு
ஒர் முத்தம்
செல்லமாய் கன்னத்தில்
ஒர் முத்தம்
இன்னுமாய் பெருக வேண்டும்
இன்பம் கலந்த கனவில்.. 1772
விறகாய் எரிந்து
உருகும்
காதல் காலமெல்லாம்
விதி என்ற அடுப்பில்
வெந்த பின்னும்
வேதனை தருகிறது
கண்ணீர் சுடுநீராக.... 1773
வீதிகள் அனைத்தும்
விடா பிடியாய்
உன் ஞாபகங்களை
எங்கிருந்தோ
அழைத்து வருகிறது
கண்ணீர் கண்ணில்
வருவதற்கு முன்னே!! 1774
குற்ற உணர்ச்சியின்
மிகுதியில்
காதல் என்ன
குறைந்து விடவா போகிறது
இல்லை
கண்ணீரும்
குறைந்து விட போகிறதா? 1775
விருப்பம் கலந்த
கனவு என்ற போதும்
வருத்தம் மட்டுமே
காலையில்
கண் விழிக்கிறது
காரணங்கள் அற்று... 1776
வேண்டிய அளவு
அழுது விட்டாலும்
நீ வேண்டிய
தருணங்கள் ஏனோ
வேண்டாத
எண்ணங்களை மட்டுமே
உருவாக்குகிறது... 1777
புயல் கரையை
கடந்தாலும்
வயல் வரப்பை
நிறைத்தாலும்
காதல் ஏனோ
கரைய மறுக்கிறது
இந்த காலத்தில்... 1778
தளர்ந்து விழும்
ஒரு பழுத்த இலை போல தான்
காலம் வெளுத்த
நம் காதல்
மெல்ல விழுகிறது
காகிதத்தில் கவிதையாக... 1779
சருகுகளும்
சங்கீதம் ஆகும்
மெளனம் மிகுந்த இரவில்
என் மெளனமும்
சங்கீதம் ஆகும்
உன்னோடு ஆன இரவில்.. 1780
No comments:
Post a Comment