அம்மா கேட்கும்
போது கூட
மருதாணியை தவிர்த்தேன்
இரவில்
நான் இன்றி
நீ தவிப்பாய் என்று.... 1891
நான் விரும்பும் பூவும் நீ
பூவின் வாசம் நீ
வாசத்தின் நேசம் நீ
நேசத்தின் உயிரும் நீ
என் உயிரின் உடலும் நீ
உடலின் மொழியும் நீ
அம் மொழியின்
கவிதை நீயே...... 1892
காதல் பெருகி
கண்ணீரை தாங்கி நிற்கும்
கண்களின் காலத்தில்
காதல் நீராய்
உருகும் உயிரில்
கலந்து கன்னத்தில்.... 1893
நெஞ்சை நினைத்து
நீர் இல்லாமல்
வாடும் புஞ்சை போல
நீ இல்லாமல்
காதலும் வாடும்
உன்னையே தேடும்... 1894
காதலின் சுடர் மிகுந்த
இரவில்
காமம் மெழுகுவர்த்தியாய்
உருக வேண்டும்..... 1895
இந்த உலகம்
இறப்பதற்கு முன்
உன் இதழை
நான் அடைய வேண்டும்
உன் இதழை
அடைவதற்கு முன்
உன் இதயத்தில்
என் இதழை வைக்க வேண்டும்... 1896
பெருகும் இருள்
ஒரு கடலை போல
ஒரே ஒரு அலையாக
மீண்டும் மீண்டும்
என்னை மோதுகிறது
காற்றில் மெல்ல
மெல்ல முத்தமும் இடுகிறது.. 1897
ரக ரகமாய்
ரகசியம் நிறைந்து
இருக்கிறது
இந்த உலகத்தில்
காதல் மட்டுமே ரகசியமாய்
இருக்கிறது
நம் உலகத்தில்.... 1898
வலியால் விழிகள்
விழித்துக் கொண்டு இருக்கிறதா?
இல்லை
விழித்துக் கொண்டு
இருப்பதால்
வலிகள் தெரிகிறதா
இந்த இரவில் ....... 1899
பகல் மட்டும் இல்லை
என்றால்
நம் இதழ்கள் இரண்டும்
இணைந்தே
இருந்திருக்கும்
இரவுகள் அனைத்திலும்.. 1900
No comments:
Post a Comment