கனவை பற்றிய
பயம் போய்விட்டது
இருந்தும்
பயம் இருக்கிறது
வாழ்க்கையின்
கனவைப் பற்றி... 1601
தேவைக்கு அதிகமாய்
உன் ஞாபகங்கள்
இருந்த போதும்
இப்பொழுது தேவை
உன் ஞாபகத்தின்
ஒரு துளியாய்
ஒரேயொரு முத்தம்.... 1602
எவையெல்லாம்
என்னை வாட்டுகிறதோ
அவையெல்லாம்
வேதனைகளை கூட்டுகிறது.. 1603
இருப்பதெல்லாம்
ஒரேயொரு கனவு
உன்னோடு இணைய
வேண்டும் என்பது
மறுப்பதெல்லாம்
பலரின் கனவுகளை
உள்ளடக்கியே இருக்கிறது... 1604
உன்னுடனான
காதலை நிரூபிக்க
கவிதைகள் இருக்கிறது
கவிதைகளை மெய்பிக்க
காலம் ஏனோ
எப்பொழுதும் மறுக்கிறது... 1605
எல்லா நிகழ்வுகளுமே
உணர்த்துகிறது
உன் பிரிவு
பெருந்துயரம் என்று
துயரம் மட்டுமே
உணர்த்துகிறது
உன் காதலின் உணர்வுகளை.. 1606
ருசி மிகுந்த
இரவை
பருக பருக
பசி இன்னும்
அதிகமாகி கொண்டே
இருக்கிறது
ருசியாய் இருப்பது
என்னவோ
உன் முத்தத்தின்
நினைவுகள் மட்டுமே!! 1607
நிலவை
கொஞ்சம் கொஞ்சமாக
உன் வீட்டின்
மாடியில் வைத்தேன்
ஏன்?
என்று நீயும் சிரித்தாய்
நிலவு
உன்னை கொஞ்சம்
ரசிக்கட்டும் என்றேன்
இப்பொழுதோ
நீ வெட்கத்தில் முரைக்கிறாய்
என்னை!! 1608
கண்கள் உருகிய போதும்
கனவுகள் உருகவில்லை
கனவுகள் பெருகிய போதும்
கண்கள் உறங்கவில்லை... 1609
இரவின் எண்ணிக்கையை விட
கனவின் எண்ணிக்கை
அதிகமாக இருக்கிறது
உன் காதலால்... 1610
No comments:
Post a Comment