December 6, 2015

2015 கவிதைகள் 1581 to 1590

ஒரு நல்ல கவிதை
எழுதுவதற்காகவே
நானும்
சேர்த்துக் கொண்டே போகிறேன்
உன் முத்தங்களையும்
அதன்
தீரா நினைவுகளையும்...    1581

மெல்லிய உதடுகள்
மேனியெங்கும் மேய்கிறது
மெல்ல மெல்ல
விழிகளை திறக்க முற்படுகிறேன்
அது இன்னும்
ஆழமாக செல்கிறது
என் உடலெங்கும்
என் கனவின் வழி...      1582

மழையாய்
நீ பொழிந்தால்
என் இன்னல் எல்லாம்
மின்னல் போல்
காணாமல் போய்விடும்
அன்பே!!            1583

எங்கு சென்றாலும்
என்னை பின் தொடர்கிறது
உன் ஞாபகத்தின் சக்திகள்
ஞாபக மறதியில்
நான் என்னை
மறந்த போது கூட....    1584

தோட்டம் நிரம்பிய
கனிகளை விட
காதல் கனவுகள்
நிரம்பிய மரங்களே
அதிகம்
நம் காட்டில்...      1585

உன் தூங்கும்
இமைகளை
கண்டால் கூட
தூங்காமல் கவிதை
எழுதும்
என் இதயம்...      1586

இல்லாமல் இல்லை
கனவுகள் ஆயிரம்
இருந்தும்
வாழ்கிறேன்
நீ இல்லாமல்.....     1587

பசி எடுக்கிறது
கவிதையின் மீதும்
உன் காதலின் மீதும்...   1588

இவ்விரவின் இருளில்
எங்கோ
ஒலித்துக் கொண்டு இருக்கிறது
நம் காதலின்
கதறல் ஒலி
கனவுகளை மீறி....       1589

உன்னைப் பிரிந்து
வாடிக் கிடக்கிறேன்
என்பதற்கு
தனிமையில்
நான் வடிக்கும்
கண்ணீர் மட்டுமே சாட்சி...  1590

No comments:

Post a Comment