கடும் வலியிலும்
வழியாமல் இல்லை
உன் ஞாபகங்கள்
என் குருதியாய்
குறை என்று
யாரைச் சொல்ல?
கனவுகளையா?
காதலையா?
காலத்தையா? 1621
வெட்டப்பட்ட இடத்தில்
வேதனைகள்
பல இருந்தும்
நீ வேண்டும் என்ற
எண்ணங்கள் தான்
என் கண்ணீரை
கூட்டுகிறது ..... 1622
உனதாக்கி உயிரை
கொடுத்தேன்
இந்த வரிகளுக்கு
உண்மையில்
உன் காதலை
நினைத்து தான்
வரிகளை உனதாக்கினேன்.. 1623
நீளும்
பகல் பொழுதெல்லாம்
நிம்மதியாய்
இருக்கிறேன்
உன்னோடும்
உன் நினைவோடும்.. 1724
சலனமற்று
சங்கீதம் நிரம்பும்
இசையின் குறிப்புகளாய்
உன் காதல்
இந்த இரவை
நிரப்பி விடுகிறது... 1725
மழையின் இசையில்
துளியாய்
பெருகும் பாடலின்
வரிகள் தான்
இந்த காதல் கவிதைகள்.. 1726
கனவில்
நித்தம் நித்தம்
நிகழும் போதே
அகலும்
வாழ்வின் கூச்சங்களை.. 1727
பொழுதுகள் சாயும்
காதலின்
விழுதுகள் விரியும்
அந்தி மழையில்
மயக்கும் காதலும்
பெருகும்
உன்னை நோக்கியே
என்
கனவுகளும் விரியும்.. 1628
பெருகி பெருகி
பெரிதான கடல் போன
உடலெங்கும்
உன் காதலின்
அலை மோதுகிறது
என் அன்பே!! 1629
துள்ளிக் குதிக்கும்
மீனைப் போல
உன்னை கிள்ளத்
துடிக்கும் கைவிரல்
சந்தோசத்தின்
மிகுதியாய்.... 1630
No comments:
Post a Comment