December 31, 2014
அம்மு
December 29, 2014
Phoenix
இது ஒரு கனவு
December 23, 2014
புத்தாண்டு
இறுதி கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...
முதல் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...
வாழ்க்கையில் எனக்கு
மிஞ்சி இருக்கும்
ஒர் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...
இன்னும் என் உயிர் இருக்கிறது உன்னிடம் மன்னிப்பு கேட்க...
அழைத்தற்காக மன்னிப்பு கேட்கிறேன்..
நினைத்தற்காக மன்னிப்பு
கேட்கிறேன்..
மன்னிப்பு கேட்கிறேன்..
நான் வடித்த கண்ணீருக்காக
மன்னிப்பு கேட்கிறேன்..
அதில் இரவாக என்னை
இணைத்து நான் வடித்த
கவிதைக்காக மன்னிப்பு
கேட்கிறேன்..
என் காதலுக்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..
என் பிரியத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..
என் சுகத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..
என் மரணத்தின் முன்
உன்னிடம்
நான் கேட்க நினைக்கிறேன்
ஓர் அர்த்தமற்ற மன்னிப்பு..
24-12-2014 00.08 AM
December 16, 2014
இரவு பேய்
நீ வந்து விடுகிறாய்,
நீ வந்தால் தான்
எனக்கு எப்போதும்
இரவு வருகிறது..
முதல் எது முடிவு எது
என்று என்னால் யூகிக்க முடியவில்லை..
முழித்து இருக்கும் எனக்கு
எப்போதும் துக்கதோடு
வரும் நீ தான் ஆறுதல்..
கண்களை இரவாக
நானும் பார்க்கிறேன்,
நான் பார்க்கும் இடமெல்லாம்
உன் துக்கமாகவே தெரிவது
தான் எனக்கு துயரம்..
அது பகல்,
நீ என்னோடு பேசினால்
அது இரவு,
என்று நானே
பிரித்துக் கொண்டேன்..
வரும் உன்னை
ஒரு முறை கூட உரசி
பார்த்தது இல்லை - ஏன்?
இவ்வுலகம் ஓர் இருட்டு,
கண்களை மூடி பார்த்தால்
இருட்டுனுல் நீ ஓர் உலகம்..
ஏன் என்று நான் கேட்டேன்
இதோ உன் விளக்கம்;
இருள் படர்ந்த என் உலகில்
எட்டி பார்த்தது அந்த நிலா;
ஆனால் நீயோ!
இருள் படர்ந்த என் இரவில்
எட்டி குதித்த ஓர் நிலா...
பிறந்த ஒரு துளி தான்
இந்த கடல் என்றாலும்
அவை உன்னைப்போல இல்லை,
தன் துக்கங்களை
அடக்க முடியாமல் அலையாய்
அலைந்து கொண்டு இருக்கிறது,
அதன் சலசலப்பு இன்னும்
எழும்பிக் கொண்டே இருக்கிறது..
19-12-2014 12.00 AM
December 15, 2014
தம்பியின் காதல்
தடுமாறி யாருக்கு
யார் அறிவுறை கூறுவது?
என்று யோசித்து -
நடப்பவை நடக்கும் என்ற
முதிர்ச்சியோடு முதல்
முதலில் தம்பியின் கண்களை
பார்க்க தவிர்த்தேன்..
சட்டென்று பெரியவன் ஆன
உணர்வு எழுந்ததும்-
எழுந்தும் எழ மறுக்கும்
கண்ணீர் - காரணம்
தம்பியின் காதல்..
கொப்பளிப்பதோ உணர்ச்சிகள்,
உணர்ச்சிகள் பெருக பெருக
ஊற்று நீரும் பெருகுவதை
போல, வாழ்வும், வாழ்வதற்கான வளமும் பெருக நித்தம்
உழைக்க வேண்டும்..
இருக்கிறது..
காதலை பற்றி எனக்கே
தெரியாத போது உனக்கு
காதலை பற்றி கூற எனக்கு
எந்தவொரு அடிப்படை
தகுதியும் இல்லை என்றே
நினைத்தேன் அவ்விரவில்..
அம்மாவிடம் நீ சொல்லி
விட்ட பிறகு தான் பெரு மூச்சு
நான் விட்டேன்..
15-12-2014 01.30 AM
December 14, 2014
தாய்
தன் மார்பில் அனைத்துக்
கொள்ளும் தாய்க்கு தான்
தெரியும் குழந்தையின் பசி
எப்போது அடங்கும் என..
உண்ண மறந்த தாயும்
அழுகிறாள் - சப்பி சப்பி
ஏமாற்றம் அடையும்
குழந்தையை நினைத்து..
யாருமற்ற வாசல் படியின்
சுவரை பிடித்து அழுகிறது
என் வீட்டு குழந்தை...
14-12-2014 22.15 PM
December 13, 2014
முதல் பரிசு
December 11, 2014
ஊதிய உயர்வு
"அண்ணே!அன்புக்கு அன்னை தெரசா;
ஆஹா!!
அறிவுக்கு அப்துல் கலாம்
ஓஹோ!!
அடக்கத்துல நெல்சன் மண்டேலா!!
அடடாடா!!
நம்ம போஸ் பாண்டி அண்ணன் கொடுத்த ஐந்நூற!
ஆமா!!
அஞ்சு லட்சமா! நினச்சுகின்னு!!
ஆமா!
நம்ம அல்லி நகரத்து அடியை தான் கொஞ்சம் காட்டுவமா?
11-12-2014 23.17 PM
December 10, 2014
அலுவலகம்
அலைகிறேன் நிறையாத
வயிற்றை சுமந்துகொண்டு..
10-12-2014 03.48
December 8, 2014
காரணம்
சிலர் சிரிப்பதற்க்கும்
நான் அழுவதற்க்கும்
நானே காரணம்
சில பல நேரங்களில்...
என்ன காரணம்?
முதலிரவு
எப்பொழுதும் நடப்பது தான்
அப்பொழுதும் நடக்கிறது,
விரிகின்ற காமத்தில்
சுருங்கும் உடையைப் போல,
என் மனம் தான்
இங்கு நொருங்குகிறது,
இனி என் குறி எழுவதற்கு
சாத்தியங்கள் அற்று
போய்விட்டது அவளோடு- ஆன
வேறொருவனின் சிந்தனையில்..
31-08-2014
December 7, 2014
நான் பார்த்த வரையில்
கண்கள் கடலை
பார்த்து ரசிக்கிறது,
பள்ளிக் குழந்தை பவ்வியமாய்
நடனம் ஆடுகிறது,
கல்லூரி பெண்ணின் கண்கள் தன் காதலன் கண்ணோடு
கதை பேசுகிறது,
கல்யாணம் ஆனவள்
கண்கள் ஏனோ கண்ணீரோடு
கரையை பார்க்கிறது,
இவை யாவும் மத்தியில்
இவ்வுலகத்தை ஒதுக்கியவளின்
கண்கள் தன்னோடு
ஒதுங்கிக் கொள்ள
யாரோ ஒருவனை தேடிக் கொண்டு இருக்கிறது
-SunMuga-
07-12-2014 17.07 PM
வெட்கம்
வெட்கப்பட்டு முகம் மூடி
பழகியவள், முதல் முறை
ஆசைப்படுகிறேன் எருவில்
முகம் மூட வேண்டுமென,
நீ இல்லாத இவ்விரவில்..
07-12-2014 00.19 AM
உடை
வாங்கும் வருமானம் தான்
ஒருவனுக்கு மானம் என்றால்
நான் நித்தம்
அம்மனமாக தான் இருக்கிறேன்
கூச்சங்களை கடந்து...
December 6, 2014
கடிதம்
வாழ்கிறேன் கண்மணியே!
கவிதையின் வடிவமாய்!
உன் கரம் தொட்டு
பார்க்கிறேன் கண்மணியே!
வார்த்தையின் வடிவமாய்!
அர்த்த ராத்திரியில்
உன்னையே அனைத்துக்
கொள்ள பார்க்கிறேன் கண்மணியே!
கடிதத்தின் அர்த்தமாய்!!
கடிதத்தின் முடிவுரையில்
உன் முத்ததையை
நான் எதிர் பார்க்கிறேன்!!
என் கண்மணியே!
07-12-2014 00.25 AM
நீயும் வருவாய்
மெல்ல முத்தமும் தருவாய்;
சொல்லெடுத்து தருவாய்;
மெல்ல மெல்ல மேனியில் பொழிவாய்;
மோதி நின்ற கண்கள்;
பாதி பார்த்த கைகள் என;
பக்குவமாய் உன் இதழ் பேச
அந்த இரவிலும்
பத பதக்கும் என் இதயம்;
06-12-2014 22.04 PM
புத்தகம்
புத்தியிலே உன் முகம்;
புரட்டிய பக்கம் எல்லாம்
புன்னகையே உன் முகம்;
எடுத்து வைக்க மனமில்லை;
புத்தகமான உன் இதழை
படித்து படித்து ஏனோ
சிவந்தது இதழோடு
என் கண்களும்;
காகிதத்தில் கவிதை படித்தேன்
கவிதையின் விரலை
கை கோர்த்துக் கொண்டு;
கண் இமைக்கும் நேரத்தில்
நான் படித்தது எத்தனையோ
பக்கங்கள்;
06-12-2014 21.46 PM
நினைத்து இருந்தேன்
நினைத்து இருந்தேன்;
சமாதியின் சருகாக
தனித்து இருந்தேன்;
நல்ல படம் பார்க்கும் போது
உன் முகத்தை
பார்த்து இருந்தேன்;
நல்ல இசையை
கேட்கும் போது உன் குரலை
இணைத்து இருந்தேன்;
நல்ல கவிதைகள் வாசிக்கும்
போது உன் இதழை
ரசித்து கிடந்தேன்...
அன்பே! சகலமும் நீ எனக்கு
என்று? தான் நான் உனக்கு;
06-12-2014 21.30 PM
December 5, 2014
உன் முத்தம்
இன்னும் இருக்கிறது
காதலின் விருட்சமாய்
உன் நெற்றி முத்தம்...
December 2, 2014
நிசப்தமான இரவு
நிதானமாக வடிகிறது
என் கண்ணீர்!
உயிரே!
உன்னை நினைத்து
நான் கரையும் இந்த
இரவும் விடிந்து
விட்டது காலையில்;
இப்பொழுதும்
நிதானமாகவே வடிகிறது
என் கண்ணில் கண்ணீர்...
The Lines Are My Own Life
30-11-2014 22.58PM
November 22, 2014
முகா
நீ உச்சரித்த வார்த்தை
முகா!!!!
என்று என்னை முதல் முதலில்
அழைத்தது நீயாக மட்டுமே
இருக்க முடியும் இந்த
உலகத்தில்..
உன் முகம் பார்த்த நொடிகள்
ஏனோ நான் மடிய நினைத்த
நொடிக்கு முன் கூட கடந்து
வந்தது!!
November 16, 2014
கவிதை
November 10, 2014
கண்ணீர் கவிதைகள்
கண்ணில் "கண்ணீர்"!!
நினைவில்,
கண்ணீர் கசிகிறது - உன்
பிரிவில்..
"காலம்" தந்த பதில்
"கண்ணீர்"!!
வீதி எங்கும் என்
கண்ணீர் மழை!!
கண்ணில் " நீ" என்பதால்,
விடாமலும் இருக்க
முடியவில்லை மனதில்
"நீ" என்பதால்!!
2011
கவிதை வரிகள்
அவள் மனதில் புதைந்து விட்டேன்,
ஆஹா! கவிதை வரிகளாக!!
கண்ணில் "நீ",
கண்ணில் "நீ" என்பதால்,
நம்மில் " காதல்"..
கண் - பார்க்கும் போது
பேசிக்கொள்வது
கண் - காணாத போது
கண்ணீர் விடுவது..
அவள் " விழி" என்றால்,
அவளின் இருப்பிடம் என்
"இதயம்" தானே?
காதலிக்கிறாள்,
என்னையோ வெறுக்கிறாள்!
உன்னை தழுவியது,
அது உன்னை தழுவியதாலோ!
பின் தொடரும் உன்
விழி எப்போது என்னை
பின் தொடரும் என் உயிரே!!
கவிதை வரி என்ற
நூலாக நீயாக,
எங்கோ பறக்கிறதடி
என் மனம்....
-SunMuga-
2011
November 9, 2014
திருமண வாழ்க்கை
திறந்து பார்க்கிறான்;
சந்தோஷமாக பலர்
பாதங்கள் நடை போட
ஆரம்பிக்கிறது;
தலை குனிந்து வணக்கம்
சொல்லும் வாழை மரம்;
செவ்விதழ் ரோஜாவும்,
மனம் மயக்கும் சந்தனமும்,
அதற்கு அழகு சேர்க்கும்
குங்குமமும்,
சிறு துளி பன்னீர் மழை
தூவும் குவளையும்,
காதுக்கு இனிமை சேர்க்கும்
மத்தளமும் முழங்க;
பெற்றோர், இளையோர்,
தோழர்கள், தோழிகள்
மற்றும் வாழ்த்த வயதில்லை
என்று தன் பெற்றோரை விட
அழகா! என்று மெய் மறந்து
தன் அம்மாவின் மடியில்
அமர்ந்திருந்த மழலைச்
செல்வமும்,
எங்கள் திருமணத்தின் போது..
ஒளிரும் ஒளியை மிஞ்சும்,
அவள் கொலுசின் ஒலி
மத்தள ஒலியை தோற்கடிக்கும்;
வண்ண மீன் போன்ற
தன் கண்களுக்கு
கரு மையினால்
வலை போட்டு;
கண்ணிலே ஜடை செய்து
ஒரு வித நமட்டுச் சிரிப்புடன்
மணமேடையில் என் அருகே
வந்து அமர்ந்தாள் என்னவள்;
கட்டினேன் மூன்று முடுச்சு;
அன்பில் என் அன்னையாக
என்றும் நீ இருக்க வேண்டும்
என்று முதல் முடுச்சு;
பாசத்தில் உன் தந்தையாக
என்றும் நான் இருப்பேன்
என்று இரண்டாவது முடுச்சு;
உன் குழந்தையாக என்றும்
உன் மடியில் தவழ வேண்டும்
என்று மூன்றாவது முடுச்சு;
படித்தேன் - என் கவிதையை
ஆஹா! என்ன அழகு,
படித்ததும், படிக்காததும்;
என் கவிதையில்
மச்சம் என்னும் கரும் புள்ளியோ,
மேற்குறியீடாக தோன்றுகிறது,
மற்றொரு மேற்குறியீடு எங்கே
என்று தேடித் தேடி படிக்கிறேன்..
என் கை ரேகையே அதிகம்
தென்படுகிறது- என் கவிதையில்
நான் கொஞ்சம் தொட்டுப்
படித்ததால் என்னவோ!!
என் கவிதையில்,
கிடையாத ஒன்றை கிடைக்கும்
என்ற அரை மனதில்
தேடிப் பார்க்கிறேன்
முற்றும் முற்றுப் பெறாத
முற்றுப் புள்ளியை;
கேள்வி; நமக்கு ஓர்
உயிர் உருவானால்
என்னை எப்படி
கவனிப்பாய் என்று?
குழந்தையாம்!!
உன் விளையாட்டு
பொருளாகவே மாறி விட
ஆசையடி;
குழந்தை போல,
உன் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்;
வலித்தால் என்றால்?
ஒத்தனம் கொடுப்பேன்
என்றேன்;
I Lv U என்று கண்ணீரோடு ;
உடை மாற்ற விட மாட்டேன்;
உன் உடையையும் நானே
துவைப்பேன்;
இருந்தாலும், ஒரு சில
வேலைகளை சமாளிப்பது
என் விரலாக இருக்கும்..
என் மனம் விட்டுக் கொடுக்காது;
நீ திரும்பிய பக்கமெல்லாம்
நான் இருப்பேன் உன் கை
என் மேல் படவே;
கண்ணீர் விடுகிறது நம்
உயிரின் பாதம் கழுவுவதற்காக..
அவன் விழி,
விழியின் கருவிழி போல் மேனி,
பிறந்தான் நம் மகன்...
நம் மகனின் விழியை
பார்த்து சிரிக்கிறாயே
என் உயிரே!
என் விரலில் முத்தமிட்டபடி;
November 6, 2014
பிறை நிலா
உன் முகம் பார்த்தே
பல இரவை கடந்து விட்டேன்
இப்போது காத்திருக்கிறேன்
நான் இறப்பதற்கு!!!
இந்த சூரியன் தேடும்
நிலவு நீ!!
நாளும் நான் ரசித்தது இல்லை
அந்த நிலவை!!
இரவில்
கரையில் அமரும்போதெல்லாம் உன் கரம் தேவைப்படுகிறது..
அலைகள் கடலின் உள்ளே
அடங்குவது போல
உன் மீதான ஆசைகளும்
என்னுள்ளே அடங்கிவிடுகிறது..
கடல் காற்றை விட
உன் மூச்சுக் காற்றே
என்னை முத்தமிட வைக்கிறது..
நீ அமர்ந்து ஆடிய
ஊஞ்சல் என்னவோ
இன்னும் ஆடிக் கொண்டே
இருக்கிறது என் கண்களில்..
என் கன்னம்
சேர்த்து ஒரு நாளவது
நான் கான வேண்டும்
அந்த நிலவை!!!
நிலவோடு பேசிக் கொள்கிறேன்,
நீ இருக்கும் போது
நிலவோடு பேசிக் கொள்வதாய் எண்ணிக் கொள்கிறேன்..
நிலவு இருக்கும்,
நீ உன் உடைக்குள்
அடங்கி இருப்பதை போல..
கொடுமை அதிகம்
நீ இல்லாத போது...
நடுங்குவது போலவே
நடித்து கொள்கிறாய்
நான் உன்னை அனைத்துக்
கொள்ள...
October 30, 2014
இரவு
விரியும் இந்த இரவில்
நான் எப்படி கண்ணீர்
இல்லாமல் கடக்க முடியும்?
என் அறையில்
இரவில் நான் உன்னோடு
உறங்க தான் நித்தம்
வணங்குகிறேன் அந்த
கடவுளையும் கண்ணீரோடு.,
உன் பிரிவிற்கு,
இரவில் தான் புரிகிறது
அது நான் என்று.,
உச்சரித்த வார்த்தைகள் தான்
வளர்க்கிறது என் கனவுகளை
நித்தம் உன்னோடு.,
பாடல் தான் என்னை
பாடலாக வாழச் சொல்கிறது
உன் குரலில்....
கொடுமையை நீ தான்
அதிகமாய் அனுபவித்து
இருப்பாய் என்று
எனக்கும் தெரியும்....
இரவில் உன்னை
இறுக்கமாக கட்டி அனைத்து
இறந்து விடவே தோன்றுகிறது..
உன் விழியின் பார்வையை
பார்த்தே இத்தனை இரவுகளை
கடந்து விட்டேன் என் விழியை
மூடிக் கொண்டு...
வானின் நட்சத்திரங்களை
எண்ண தொடங்கிவிடுகிறேன்
உன் முத்தத்தை எண்ணுவதாய் நினைத்து....
காற்றின் வழியே
நீ கொடுத்த முத்ததின்
மூச்சுக் காற்றைத் தான்
பல வருடங்கள் தாண்டியும்
நான் சுவாசித்துக் கொண்டு
இருக்கிறேன்...
30-10-2014 23.00 PM
October 29, 2014
மாடிப்படி
நீ கொடுத்த முத்தத்தால்
இப்போது ஒவ்வொரு
முறையும் ஏறிப் பார்க்கிறேன்;
உன்னையே எதிர் பார்க்கிறேன்;
உன்னோடு தொலைபேசியில்
உரையாட அவ்வப்போது
உதவுவது உன்
பாதம் மிதித்த இந்த
மாடிப்படி தான் என் உயிரே!
உறங்கச் செல்லும் முன்
ஒருமுறை முத்தமிட்டுத்
தான் செல்லுகிறேன்
உன் பாதம்
பட்ட அந்த மாடிப்படியில்...
உன்னை நினைக்கிறேனோ
அப்போதெல்லாம் நான்
வந்து அமர்வது நம்
வீட்டு மாடிப்படி தான்...
இரவில் அந்த மாடிப்படிகளிலே
உறங்கி விடுகிறேன்
உன் மடியாக அந்த
படிகளை நினைத்து
என் அன்பே!!
29-10-2014 21.45 PM
மூன்றாம் பிறை
உன்னை கவனிக்க
தவறும் அந்த மூன்று
நாட்கள் எனக்கு
எப்போதும் பிடிப்பதில்லை,
ஆனால் எனக்காக
பிறந்தவன் நீ,
எப்படியடா நீ இப்படி
மாறினாய்;
என்னை முத்தமிடவே
சமையல்அறை பக்கம்
ஒதுங்கியவன் நீ,
இப்போதெல்லாம்
நீயே சமைத்து
எனக்கு ஊட்டி விடுகிறாய்
என் வலியின் வேதனை
நீ உள்வாங்கிக் கொண்டு..
என் மீதான உன்
அன்பை கொஞ்சம்
குறைத்துக் கொள்
என் அன்பே!
உன்னதமான உன் அன்பால்
இப்போதெல்லாம் நான்காம்
நாளும் நீடிக்கிறதடா
என் மடையா!!
29-10-2014 21.00 PM
October 28, 2014
கற்பம்
இந்நாள் உன்னால்
நான் கற்பம் தரித்தேன்,
கண்ணால் சொல்ல
தவித்தேன்,
உன் பின்னால்
அனைத்து உன் முதுகில்
முத்தமிட்டு சொல்ல
துடித்தேன்,
உள்ளே துடிக்கும்
நம் உயிர்,
உள்ளுக்குள்ளான ஏதோவொரு
ஆனந்தம்,
ஆணோ, பெண்ணோ?
அய்யோ!!
நானும் இனி ஒரு தாய்!!
நீயும் இனி ஒரு என் குழந்தை..
உன் வேட்டியில் தொட்டில் கட்ட
சொல்லிக்கொடு,
உன் குரலில் தாலாட்டு பாட
சொல்லிக்கொடு -என் கள்வனே,
உன்னோடு நடக்க வேண்டுமடா!
கால்கள் வலிக்க
வேண்டுமடா!
உன்னால் ஒத்தனம்
கொடுக்கப் பட வேண்டுமடா!!
அவ்வப்போது உன் கைவிரல்
என் வயிற்றில் பதியப் பட
வேண்டுமடா!!
இந்நாள் என் வாழ்வின்
முக்கியமான நாள் என்
அன்பே!!
28-10-2014 22.45 PM
முதல் முறை
உன் மீதான
என் காதலுக்கு
முதல் முறை உன்னிடம்
கேட்கிறேன் ஒரே ஒரு
முத்தம்..
மொத்த சிறப்பையும்
அறிந்தது என்
இதழாக மட்டுமே
இருக்க முடியும்
இந்த உலகத்தில்...
இந்த உலகத்தில்
எப்போதும் எனக்கு
துணையாக இருப்பது
உன் இதழ் மட்டுமே!!
ஒருமுறை நீ கொடுத்த
முத்தத்தில் தான்
இன்னும் இருக்கிறது
என் உயிர்;
நீ மறுமுறை கொடுப்பதற்கு..
இருக்கிறேன்;
வருத்தம் கொள்ளாதே
முத்தங்கள் அதிகமாக
தான் இருக்கிறது என்
இதழில்....
நான் வாழும்
வாழ்க்கை உனக்கும்
எனக்கும் மட்டுமே தெரியும்..
உன் பெயரை என் பெயரோடு
இணைத்துவிட்டேன்
நீ எப்போது என்னை
அனைத்துக் கொள்ள போகிறாய்!!!
ஆட்கள் இல்லாத
இடம் தான் இப்போது
என் போக்கிடம்
கண்ணீர் விடுவதற்கு!!!
28-10-2014 21.30 PM
October 27, 2014
புடவை
எனக்கும் ஆசையடா!!
நான் உடுத்திய புடவையில்
உனக்கு ஒரு தொட்டில்
கட்டி தாலாட்டு பாட....
முன்பெல்லாம் கண்ணாடியை
பார்த்து புடவை கட்டுவேன்;
இப்போதெல்லாம்
என் புடவையை உன்
கண்களை காணாமல்
ஒழுங்காய் கட்ட முடிவதில்லை;
அன்பே!!
அம்மா அதிகமாக திட்டுகிறாள்,
ஒரு புடவை கட்ட
இரண்டு மணி நேரமா? என்று,
அவளுக்கு என்ன தெரியும்
நீ என்னோடு இருப்பது..
வீட்டில் அம்மா
இல்லாத நேரங்களில்
உன்னை கட்டி அனைத்து
அனைத்து நானும்
கற்றுக் கொண்டேன்
புடவை கட்ட....
என்னைப் புடவையில்
உன்னைத் தவிர
வேறு எவரும்
பார்த்து விட முடியாது,
புடவை என்ன? நூலால்
நெய்ததா? என்ன
உன் இதழால் அல்லவா!!!
ஒரு சில நாளில்
என் புடைவையின் மீதே
எனக்கு பொறாமை
எழத் தான் செய்கிறது
எனக்கான முத்தத்தை
புடவை பெரும் போது..
சமையல் அறையில்
வடியும் என் வேர்வையை;
உன் கை விரல் தீண்டிய
என் சேலை முந்தானையால்
தொடைத்துக் கொள்கிறேன்;
என்னையே நீ அனைப்பது போல நினைத்துக் கொண்டு..
நீ எப்போதடா மதம்
மாறினாய் ஒரு
கன்னத்தில் கொடுத்தால்
மறு கன்னத்திலும்
கேட்கிறாய் என் முத்தத்தை..
ஒரு வேலை என் உயிர்
பிரிந்தால், இறுதியாக
நீ வாங்கி தந்த புடவையில்
பிரிய வேண்டும், அதன் பின்
உறுதியாக நீ வாங்கி
கொடுத்த முதல் புடவையில்
என்னை நீ தூக்கி செல்ல
வேண்டும் கல்லறை நோக்கி...
-SunMuga-
28-10-2014 20.45 PM
October 25, 2014
கல்லூரி
எப்போதும்
முதல் மதிப்பெண்
நான் தான் எடுப்பேன்;
முதல் முறை முத்ததின்
மொத்த மதிப்பையும்
பெற வைத்தது நீயாக
மட்டுமே இருக்க
முடியும் இப்பொழுதும்..
எப்போதும் என்னையே
கவனிப்பாய்; நான் அப்போதும்
உன்னையே கவனிப்பேன்..
பிள்ளையார் சுழி போடுவதற்கு
பதில் உன் இதழையே
வரைய பழகி விட்டேன்
என் அன்பே!!
வந்து பேனாவின் மொத்த
மையையும் உன் மீதே
தெளித்தேன் முத்தமாக...
ஆனது என்னவோ உன்
தோளில் சாய்ந்த பிறகு தான்..
உன் காதல் பாடமே
என்னை அதிகம்
படுத்துதடா!!!
சூத்திரம் எழுதுவதற்கு பதில்
சூரியனே உன் பெயரையே
எழுதி வந்தேன் என்னையும்
அறியாமல்....
விடுமுறையில் கூட
உன்னால் எனக்கு
குளிர்கிறது என் அன்பே!!
கேட்டாய் எப்படி படிக்காமல்
பாஸ் ஆகிறாய் என்று;
நீ படித்ததை தான்
நான் வாங்கி கொண்டேனே
உன் இதழ் வழி,
நீ படித்தால் போததா என்ன?
பலமாய் சிரித்து,
"சீ" போ!!! என்று
வெட்கத்தோடு என்னை
மெதுவாய் தள்ளினாய்...
சுகமாய் முடித்துவிடுகிறேன்
பென்சிலை உன் கை விரலாய்
நினைத்துக் கொண்டு..
என்று நான் நினைத்தேன்,
அப்புறம் தான் தெரிந்தது
நீ தான் என்னிடம்
மாட்டிக்கொண்டாய் என்று;
யாரும் இல்லாத வகுப்பறையில்
நீயும் நானும் இருக்கும்போது..
அறையில் கூட உன்
காதலே வேலை செய்கிறது
என் மடையா!!!
ஒதுங்கிராத நூலகத்தின்
பக்கம் உனக்காக
ஒடி வந்தேன்,
யாரோ ஒருவன் எழுதிய
புத்தகத்தை நீ
வாசித்துக் கொண்டு இருந்தாய்,
நானும் வாசித்து முடித்தேன்
உன் இதழில் பிரதிபலித்த
வார்த்தைகளின் மூலம்...
அடைக்கும் வரை
என்னுள்ளே அடங்கி
மீண்டும் அடம்பிடிப்பாய்
எப்போது பார்ப்போம் என்று..
26-10-2014 22.00
October 14, 2014
எச்சில்
இரவு,பகல் என்று
ஒவ்வொரு கணத்திலும்
கண்ணீரால் நான் அலம்பி
பார்த்துவிட்டேன் ஆனாலும்
கரைய மறுக்கிறது
உன் எச்சில் துளியின் ஈரம்..
உன்னால் உமிழப் பட்ட
எச்சில் துளிகள்
உளர இன்னும்
எத்தனை காலம் ஆகும்
என்று எனக்கே தெரியவில்லை;
October 13, 2014
பசி
பசி என்ன? பெண்ணே
பசி! உன்னை
ரசிப்பதற்கே வாய்ப்புகள்
அற்ற போது!!
நடுஇரவில் பசிக்கும் போது
உன்னைப் பற்றி
எழுத ஆரம்பித்து விடுகிறேன்!!
அதில் ஏனோ ருசி அதிகம்
என்பதால்!!!
எதிர் எதிரே அமர்ந்து
உன் விழியால்
நீ ஊட்டிய உணவிற்கு
பின் பசி என்பதே
எனக்கு இல்லை..
இப்போதெல்லாம்
பசியோடு படுத்ததும்
உறங்கி விடுகிறேன்!
உன் நினைவை
அனைத்துக் கொண்டு!
உன் மூச்சுக் காற்றை
நான் உள் வாங்கி
கொண்டு!!
பசி என்று
நான் சொன்னவுடன்
எப்போதும் தயாராக
வைத்து இருக்கிறாய்
எனக்கான உணவை-
உன் முத்தம்...
உயிரே இப்போதெல்லாம்
உன் உணவையும் எனக்கே
ஊட்டிவிட்டு என்
முத்தத்தை மட்டும் பெற்றுக்
கொள்கிறாய் ஏன்?
என் பசிக்கு தன் மார்போடு
சேர்த்து பால் ஊட்டியவள்
தாய் என்றால்; என்னை
உன் கண்ணோடு சேர்த்து
காதலை ஊட்டியவள் நீயும்
ஒரு தாய் தானே!!!
என் மீதான காதல்
மொத்தத்தையும் உன்
கண்களிலே வைத்து
இருக்கிறாயே!!!
சிரிக்கும் போதும்,
அழும் போதும்...
எதுவுமே நடக்காத போதும்
எல்லாமும் நடந்ததாய்
நினைத்துக் கொள்கிறேன்
உன் ஒற்றை முத்தத்தில்..
விடிந்து நான் எழுவதற்கு முன்
விவரமாய் குளித்து முடித்து
விடுகிறாய் - அடுத்த அனைப்பிற்கு.,
பட்டிக்காட்டில்
படிகளை கூட தாண்டாமல்
எப்படி கற்று தேர்ந்தாய்
இத்தனை வித்தைகளையும்
என்னை கவர....
பசி எடுத்தாலும்
எனக்காகவே
வீட்டினில் காத்துருக்கிறாய்
பின் எனக்கும்
பசி எடுக்க ஆரம்பித்து விடுகிறது...
நல்ல கவிதை அமைய
நான் வார்த்தைகளை
கோர்ப்பது இல்லை,
மாறாக உன் இதழ்களை
கோர்த்துக் கொள்கிறேன்
என் கண் இமைகளில்...
கள்வா!!
தீராத காதல் மோகத்தில்
நான் உன்னை கட்டி அனைத்தேன்,
ஏனோ கண்ணில் கண்ணீர்
வழிந்தோடியது;
நீ என்னோடு இருக்கும்போது
கண்ணீர் வடிவது விசித்திரமான ஒன்று தான்;
அது ஒரு வேலை உன் கை
விரல் தீண்டுவதற்கு என்
கண்கள் செய்த மாயமாக கூட
இருக்கலாம்...
நீயும் துடைத்து எனக்கு
துணையாக உன் முத்தத்தையும்
கொடுத்துச் சென்றாய் அன்று..
குறுஞ்செய்தியில் கூட
என் இதழ்களையே
குறி வைத்து அனுப்புகிறாயே
உன் முத்தத்தை...
சொட்டுச் சொட்டாக
மருந்துகள் இட்டேன்
என் கண்ணில்;
கண்ணே! நீ இருந்தால்
உன் ஒரு சொட்டு
முத்தம் போதாத? என்ன...
October 8, 2014
முதலில்
இறுதியாக நான் போகும்
இடம் கல்லறை என்றாலும்
இப்போதே போக விருப்பமடா!
நீ என்னோடு இல்லாத
ஒரே காரணத்தால்...
ரசித்தவள் நான்,
இப்போதெல்லாம் தானே
சிரிக்கிறேன் வெட்கத்தை விட்டு...
நீ ஒன்றும் சொல்லாத
போதும் உன் கண்கள்
ரசித்த உடையையே உடுத்திக்
கொள்கிறேன் என் வீட்டின்
படுக்கை அறையில்...
கலைகள் மிகுந்த
உடையை உடுத்திக்
கொள்கிறேன் - பின்
நீ ருசிப்பதற்காகவே
கலைக்கிறேன்...
புதுப்புடைவையை உன்னோடு
சேர்த்தே உடுத்திக்
கொள்ள வேண்டுமடா!!
உட்கொள்வதிலே அதிக
விருப்பமடா!! அதிலும்
இதழ் வழி என்றால்
இன்னும் அதிகமாக!!!!
இப்போதெல்லாம் எனக்காகவே வெட்டி விடுகிறேன்
உன் விரல் நகங்களை..
நம் வீட்டு ஜன்னல் பக்கம்
நிலா உலா வர ஆசையாம்
நீயும் நானும் இருந்த கோலத்தை ரசித்த பிறகு...
உன் அலுவலக அறையும்,
ஒன்று தான் - நான் உன்னை
நினைத்துக் கொள்வேன்,
நீ என்னை நினைத்துக்
கொள்வாய்..நினைவுகள்
நம் மார்பை அனைத்துக்
கொள்ளும்....
தாமதமாகவே நீ வந்தாலும்
சீக்கீரம் ஆரம்பித்து விட
வேண்டுமடா! உனக்கும்
எனக்குமான வேலைகள்
நம் வீட்டினுள்....
பச்சை குத்திக் கொள்ள
எனக்கும் ஆசை தான்!
உன் இதழால்,
உன் இதழாக...
September 23, 2014
பழையது
ரசிக்கவும்,
உன்னால் ரசிக்கப் படவும்
யாசிக்கிறேன்...
அன்னையாக இருந்தாலும்,
நீ அனைத்துக் கொள்கிறாய்
என்னையே உன்
புடவையின் வடிவில்...
நேசிக்கிறேன்
உன்னை யாசிப்பதால்...
சிறகுகள் இன்றி
வானில் பறந்தேன்,
மறுகனமோ என் விரல்களை இறுக பிடித்து என்னை
விட்டு போகாதே என்றது
உன் இதழ்கள்...
யோசித்தால் மட்டும்,
கண்ணீருடன் சிரிப்பும்
வருகிறது ஏன் என் அன்பே?
உன்னை படிக்கும் தருணம்
தான் எப்போது?
உன் விழியில் ஊறும் நான்,
உன் விழிகளுக்கு விருந்தாக
அமையும் நாளை கான
காத்திருக்கிறேன் விழித்துக் கொண்டே!!!
சுவாரஸ்யம் என்று கேட்கிறாள்
என் சிநேகிதி - நானும்
சிரித்துக் கொண்டேன்
அவளுக்கு என்ன தெரியும்
உன் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம்.
எனக்கு நானே அழகூட்டினால்
போதும் போதும் என்று
நீ வெட்கப்படுவாய்
ஏன் என்று கேட்டால்
பின் வீட்டிலே இருக்க
வேண்டியது தான் என்பாய்!!
சமையல் அறை
மிளகை தேடி நீ அலைந்த
போது தான் நான்
அறிந்தேன் இரவின்
போதை இன்னும்
தெளியவில்லை என்று..
உன்னால் கொடுக்கப்பட்ட
ஸ்பரிசங்களை தான் நம்
வீட்டின் சமையல் அறையின்
பாத்திரத்தில் பதிக்கி
வைத்திருக்கிறேன்...
எனக்கென்ன வேலை?
சமையல் அறையிலும்,
குளியல் அறையிலும்,
தடம் பதித்த கதவின்
அருகிலே அமர்ந்து
இருக்கிறேன் உன்னை
எதிர்பார்த்து...
தெரிந்தும் உனக்கு
பிடிக்காத உணவையே
சமைக்கிறேன் - பின்
என்னால் என் இதழால்
ஊட்டப் பட வேண்டும் என்று..
பருப்பின் வாசனைக்கு
பதில் உந்தன் பொறுப்பில்
எழு பட்ட முத்ததின் எச்சில்
வாசனையே படர்ந்து இருக்கிறது...
September 22, 2014
வறுமை
என்பது போய்,
இப்போது எல்லாம்
பசிக்கு உணவு...
September 20, 2014
சுமித்ரா
38 வயதுமிக்க ஒரு குடும்ப பெண் வழக்கமான தன் அதிகாலை வேலைகளை முடிக்காமலே இறந்துவிடுகிறாள். துக்கம் நிறைந்த வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரை பற்றியும், இறந்தவளுக்கும் அவர்களுக்குமான தொடர்பை விவரிக்கிறது இந்த நாவல்.
மலையாள ஆசிரியர்; கல்பாட்டா நாராயணன்
தமிழில் ; கே.வி ஷைலஜா
பிற்காலத்தில்
கருவை சுமப்பவள்
தாய் என்றால்..
பசியை சுமப்பவள் யார்?
கரு
திருமணம் செய்தால்
என் கருவை தான்
நீ சுமப்பாய் - நான்
உன்னை கருவாக
என் உடலெங்கும்
சுமப்பேன்...
வார்த்தைகள் இல்லாத போது தான்
முத்தங்கள் பேசிக் கொள்கிறது..
எத்தனையோ ரகசியங்கள்
இருக்கலாம்.. அது ஒரு வேலை
உன் முத்தமாக கூட!!
வீட்டில் எப்படி குடி இருக்கிறார்கள்
இந்த கணவன் மனைவிகள்..
நீயும் நானும் குளித்த பின்பு
எழுந்த ஒற்றை கேள்வி!!
நான் உன்னை
நினைத்துக் கொள்வதில்லை,
அனைத்துக் கொள்கிறேன்
இமை முடியில் படர்ந்திருக்கும்
ஈரத்துடன்...
நான் மெளனமானால்
முத்தம் எதிர் பார்க்கிறேன்
என்று அர்த்தம்,
நீ மெளனமானால்
முத்தம் எதிர் கொண்டுவிட்டாய்
என்று அர்த்தம்...
என் அறையில்
நான் உன்னை மட்டுமே
எப்போதும்
பார்த்துக் கொண்டு
இருக்கிறேன் எப்படி?
இரவு முடிந்து இருக்கும்..
ஆனால் அப்போது தான்
உனக்கும் எனக்குமான
காதல் தொடர்ந்து இருக்கும்...
கனவில் நினைவுகளை
நினைத்துப் பார்ப்பதில்லை,
நினைவுகளில் உன்
கனவை தவிர வேறு எதுவும்
நினைத்து பார்ப்பதில்லை.
இடத்தை மறுமுறை
பார்க்கும்போது மிக
அழகாக தெரிகிறது
உன் சிரிப்பின் ஒலியை
நீ தூவி விட்டு சென்றதால்..
நீயும் நானும் சேர்ந்து
கட்டிய வீட்டின் வறாண்டாவில்
தான் என் பிள்ளைகள்
விளையாடுகிறது...
September 10, 2014
புகைப்படம்
இதைவிட என்னை யாரும் இவ்வளவு எளிதாக மட்டம் தட்டிவிட முடியாது.
July 5, 2014
தகரம்
நடனமாடும் மழைத்துளியில்
சலங்கை ஒலியாக
தகரத்தின் சத்தம்..
ஒழுகாத இடம் தேடி
அன்றைய இரவை
கடந்திருக்கிறேன்..
யார் அறிவார் அந்த இரவின்
உறக்கம் நிம்மதியானது
என்று...
05-07-2014 10.35 PM
June 25, 2014
தேவதாசி
காமத்தின் வழியே
அவனை வழியை
வைக்கிறாய்!!
நீ வாழ அவன்
வழியை மறித்து
உன் பித்தானை பிரித்து
உன் மடியை விரித்து
வைத்திருக்கிறாய்...
காமம் குறைய குறைய
உனக்கு சொந்தமான
பணமும்
கண்ணீரும் கூடுகிறது...
டிபன் பாக்ஸ் போல
அதுவும் உடையிலும் உடலிலும்
அடங்கி இருக்கிறது...
பார்த்து
உன்னைப் பார்த்தும்
பார்க்காமல் தவிர்க்கிறார்கள்
ஒரு சிலர்...
இந்த உயிர்
அடங்குவதற்கு முன்
அறிமுகம் ஆகுமா
சுகவாழ்வு...
25-06-2014 23.23 PM
சட்டை
உணர்ந்து
சட்டை பிணைந்து இருக்கிறேன்,
என் கால் வலியை
சட்-டே பண்ணாமல்.
பல நூல்களை கோர்த்துருக்கிறேன்.
இந்நூலும்,
எந்நூலும்
நிச்சயம் வாழ்த்தும்.
பித்தாகவே நான் ஆனேன்.
போதும் அது என் உயிருக்கும்
மனதுக்கும் போதவில்லை.
நினைக்கிறேன் - நீயே
உன்னுள் சேர்த்துக் கொள்வாய்
என்றும் நினைக்கிறேன்.
காலில் வலியும் வளர
நானும் வளர்கிறேன்
நல்ல தாயாக!
பேசிக் கொள்கிறாய்!!
சில நேரம் என்னை
உதைத்து - பல நேரம் தொப்புள் கொடியை
அணைத்து!
நீயே எனக்கு உயிர்!
நீயும் எனக்கு உயிர்!
என்னுள் நீ இருக்கிறாய் என்று!
வேண்டியவள் -
அமைதி-யாகவே போய்
இருக்கிறாள்.
இருந்தால் - அது எனக்கு
மூன்றாவது மறுஜென்மம்
நீ என்னுள் வாழப்போகும்
மூன்றாவது ஜெனனம்..
25-06-2014 22.09 PM
June 6, 2014
இன்று
06-06-2014 07.25 PM
May 28, 2014
For you
28-05-2014
May 9, 2014
முன்னுரை
12-05-2014
April 28, 2014
Mobile Update
காதிலே உன் குரல்
காலை முதல் காத்திருக்கிறேன்
முழுஇரவு வரை பேசிக்கொள்ள
குளிக்காமல் குடி இருக்கிறேன்
நான் குடித்ததையும் மறைக்கிறேன்
பேசி பேசி நீ தொலைகிறாய்
நான் என்ற என்னையும்
நான் தொலைக்கிறேன்..
கைப்பேசியை நான் பிடித்து பிடித்து
என் ஆயுளும் குறைகிறது
கோபம் நீ கொள்கிறாய்
கோபம் நான் கொண்டால்
மெளனம் நீ கொள்கிறாய்..
ஆடிக்கு முன் கல்யாணமாம்..
April 13, 2014
பிறப்பு
April 5, 2014
05-04-2014
March 17, 2014
?
February 16, 2014
கிணற்றுப் பேய்
16-02-2014 01.25 AM
February 5, 2014
கதை சொல்லும் கடல்
மர இழைக்கும் கிளைக்குமான
காதல் பிரியும் முன்
அவைகள் எப்படி
காதலித்து இருக்கும்?
விஷயம் இல்லை. யாரும் சட்டென்று புரிந்து கொள்ள. காதல் என்பது இதயத்தின் ஓசை. அது கேட்கும் போது நான் என்னை மறந்து இருக்கிறேன். அதை உணரும் போது எல்லைகள் கடந்து இருக்கிறேன். காதலனாக காதலியை வலம் வரும் போது எத்தனை ஆனந்தம். காதலியை கரம் பிடிக்கும் போது எவ்வளவு பொறுப்பு. அவசர உலகில் மிக அவசரமாக காதலில் விழுந்தாலும் காதலுக்கு பின் மிகப்பெரிய பொறுப்பு இருவருக்குமே இருக்கிறது.
January 29, 2014
அம்மா
29-01-2014 21.50 PM
January 28, 2014
அம்மாவின் சுற்றுலா நினைவுகள்
காசியில்.
1. பிர்லா மந்திர்
2. திரிசா தேவி கோவில்
3. துர்கா கோவில்
4. ஹனுமான் கோவில்
5. துளசி மாசை மந்திர்
6. காளி கோவில்
7. காலபைரவர் கோவில்
ஹனுமான் காட்
போட் மூலம் சென்று
காசிவிஸ்வநாதர் கோவில்,
அன்ன பூரணி கோவில்,
விசாலாட்சி கோவில்.
விஷ்ணு பாதம்
புத்தர் கோவில்
த்ரிவேணிசங்கமம்
ஆனந்த Bhavan
ரிஷிகேஷ் ராமர் மந்திர்
லஷ்மன ஜ்வாலா
ஹனுமான் மந்திர் கோவில்கள்
ஹரித்வார் மானஸா தேவி கோவில்(ரோப்கார்)
ராக் கார்டன் (lack ஏரி)
சிம்லா ரூஃபி பார்டர்
குருகேஷ்த்ரா
மியூசியம் நிறைய கோவில்கள்
அமிர்தசரஸ்
பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் கோட்டை
வாகா பார்டர்
கடைகளில் சாமான் வாங்குதல்
குதுப்பினார்
ராஜகாட் ( காந்தி சமாதி )
இண்டியா கேட்,
இந்திரா காந்தி வீடு,
தீன் மூர்த்தி பவன்,
பிர்லா மந்திர் பின்,
அம்பேத்கர் பவன்
January 27, 2014
அப்பத்தா
January 1, 2014
2014 முதல் கவிதை
கோலமிட்டு
வரவேற்றாய் புது
வருடத்தை;
முத்தமிட்டு வரவேற்கிறேன்
உன் புன்னகையை;
அழகை கூட்ட
நான் என்ன
செய்ய வேண்டும்?
உன் இடையில்
பொழிய வேண்டுமா?
உன்னோடு குளிர்
காய வேண்டுமா?
குறுக்கம் நெடுக்குமான
கோடுகளை உன் கை
விரல் தீண்டி நானும்
போட வேண்டுமா?
01-01-2014 23.36 PM
2014
01-01-2014 23.18 PM